Published:Updated:

அம்மணி அம்மாள் கோபுரம்!

அம்மணி அம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மணி அம்மாள்

திருச்சி பரிமளம்

மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையை சேர்த்து 7 பிராகாரங்களுடன் திகழும் திருவண்ணாமலை ஆலயத்தின் கோபுரங்கள் மொத்தம் ஒன்பது. அவற்றில் ஒன்று அம்மணி அம்மாள் கோபுரம்!

அம்மணி அம்மாள்
அம்மணி அம்மாள்

திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள சென்ன சமுத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் அருள்மொழி அம்மணி அம்மாள். சிறு வயது முதல் அண்ணா மலையார் மீது தீவிர பக்தி கொண்டவர். ஒரு முறை, பெற்றோர் இவளை திருவண்ணா மலைக்கு அழைத்துச் சென்றனர். அண்ணா மலையாரை தரிசித்த அந்தச் சிறுமி, திருவண்ணா மலையை விட்டு வர மறுத்து அங்கேயே தங்கி விட்டாளாம்.

நாட்கள் நகர்ந்தன. திருமண வயதை எட்டியபோதும், அண்ணாமலையார் மீதான பக்தியால் இல்லற வாழ்வை ஒதுக்கி, துறவி யாகவே வாழ்ந்தார் அம்மணி அம்மாள். பிரச்னைகளும் குறை களும் நீங்க வேண்டி தன்னிடம் வரும் மக்க ளுக்கு விபூதி வழங்கி ஆசீர்வதிப்பார். இவரைத் தரிசித்தாலே தங்களது குறைகள் நீங்குவது கண்ட மக்கள், அம்மணி அம்மாளை தெய்வமாக போற்றினர்!

இந்த நிலையில், அண்ணா மலையார் கோயிலின் ஒரு கோபுரம் முழுமை பெறாமல் இருப்பதைக் கண்டார் அம்மணி அம்மாள். அந்தக் கோபுரத்தை முழுமையாகக் கட்டி முடிக்க முயற்சி செய்தார். அதற் காக நன்கொடை வேண்டி, அன்பர் களது வீட்டுக்குச் சென்றார். பலரும் பொருளுதவி செய்தனர்.

ஒரு நாள், செல்வந்தர் ஒருவரைச் சந்தித்தார் அம்மணி அம்மாள். பணம் கொடுக்க விரும்பாத அவர், ``தற்போது வசதி இல்லை'' என்றார். உடனே அம்மணி அம்மாள், ``பொய் சொல்கிறீர்கள். உங்களது பணப் பெட்டியில் தற்போது பத்தாயிரத்து இருபது ரூபாய் இருக்கிறது. திருப்பணிக்கு, நூறு ரூபாயாவது கொடுக்கலாமே!'' என்றார்.

`வீட்டில் எவ்வளவு பணம் உள்ளது என்பது எனக்கே தெரியாது. இவருக்கு எப்படித் தெரியும்?' என்று வியந்த செல்வந்தர் உள்ளே சென்று பணத்தை எண்ணிப் பார்த்தார். பத்தாயிரத்து இருபது ரூபாய் இருந்தது!

அம்மணி அம்மாளின் மகிமையை உணர்ந்த செல்வந்தர், அம்மையார் கேட்ட தொகையை விட இரு மடங்கு கொடுத்து, அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவவே, மக்கள் தாமாகவே வந்து நிதி உதவி செய்தனர். திருப்பணி இனிதே நிறைவுற்று, கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

அம்மணி அம்மாள் நினைவாக இன்றும் அந்தக் கோபுரத்தை (வடக்கு பெரிய கோபுரம்), `அம்மணி அம்மாள் கோபுரம்' என்றே அழைக்கின்றனர்.

அம்மணி அம்மாள் சித்தர் பீடம் (சமாதிக் கோயில்) ஈசானியக் குளத்துக்கு அருகில் உள்ளது. இங்கு, சிறிது நேரம் அமர்ந்து வழிபட்டால், இன்னல்கள் நீங்கும்; ஆரோக்கியமான வாழ்வு கிட்டும் என்பர்.