Published:Updated:

நலம் தரும் நவராத்திரி: இரண்டாம் நாள் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

நவராத்திரி விரதம்

அம்மனை நாம் எந்த ரூபத்தில் மனதில் நினைத்து வழிபடுகிறோமோ, அவள் அதே ரூபத்தில் வந்து நமக்கு அருள் புரிவாள். நவராத்திரி நாள்களில் அம்மன் ஒன்பது ரூபத்தில் நமக்குக் காட்சி தருகிறாள்.

நலம் தரும் நவராத்திரி: இரண்டாம் நாள் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள் மற்றும் ஸ்லோகம்!

அம்மனை நாம் எந்த ரூபத்தில் மனதில் நினைத்து வழிபடுகிறோமோ, அவள் அதே ரூபத்தில் வந்து நமக்கு அருள் புரிவாள். நவராத்திரி நாள்களில் அம்மன் ஒன்பது ரூபத்தில் நமக்குக் காட்சி தருகிறாள்.

Published:Updated:
நவராத்திரி விரதம்
சகல லோகங்களையும் காத்தருளும் அன்னை சக்தியை பூஜிப்பதுதான் நவராத்திரியின் நோக்கம். ஜகமாளும் சக்தியை எப்படி எல்லாம் பூஜிக்கலாம்? சிறுமியாக பாவிக்கலாம், மங்கையாக வர்ணிக்கலாம், குருவாகப் பணியலாம், தாயாக வணங்கலாம்.

ஆனால் குமரகுருபரர் மீனாட்சி அம்மனை குழந்தையாகக் கொஞ்சி போற்றுகிறார். மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடுகிறார். அதில் அவர் அம்மனை இப்படி அழைக்கிறார்,

"அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக் கோயிலுக்கு ஏற்றும் விளக்கே இள மென் பிடியே உயிரோவியமே!"

அவர் மீனாக்ஷி ஆலயத்துக்கு எதிரில் நின்று பாடுகிறார். ராஜா, அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அப்பொழுது ஒரு சின்ன குழந்தை ஒன்று வந்து ராஜா கழுத்தில் இருக்கும் மாலையை எடுத்து குமரகுருபரர் கழுத்தில் போடுகிறது. அதைப் பார்த்து நின்ற எல்லோரும் பிரமித்துப் போகிறார்கள். யாருக்கு இத்தனை தைரியம் என்று! அந்தக் குழந்தையைத் தொடர்ந்து போய் பார்த்தால் அந்தக் குழந்தை நேரே ஆலயத்துக்கு உள்ளே சென்று மறைந்துவிடுகிறது. அங்கே இருந்தவர்கள் எல்லாம் பூரித்து மீனாக்ஷி அம்மனை பார்த்து வணங்குகிறார்கள். வந்தது மீனாக்ஷி அம்மன்தான் என்று உணர்கிறார்கள்.

அம்மன்
அம்மன்

இதிலிருந்து என்ன தெரிகிறது, அம்மனை நாம் எந்த ரூபத்தில் மனதில் நினைத்து வழிபடுகிறோமோ, அவள் அதே ரூபத்தில் வந்து நமக்கு அருள் புரிவாள். நவராத்திரி நாள்களில் அம்மன் ஒன்பது ரூபத்தில் நமக்குக் காட்சி தருகிறாள்.

'பிரதமம் ஷைலபுத்ரி

த்விதீயம் பிரம்மச்சாரிணி

த்ரிதியம் சந்திரகண்டா

சதுர்த்தகம் குஷிமாண்டேத்தி

பஞ்சமம் ஸ்கந்தமாதா

பஷ்டம் காத்யாயினி

சப்தம் காலயாத்ரி

அஷ்டம் மஹா கௌரி

நவம் ஸித்திதா சாமுண்டி'

என்கிறது ஒரு ஸ்லோகம். இதில் அம்மனுடைய ஒவ்வொரு நாளுக்கான ரூபங்களை அறியலாம்.

இரண்டாம் நாள் சிறப்புகள்:

இரண்டாம் நாள் அம்மன் த்ரிமூர்த்தி என்ற நாமத்தால் வணங்கப்படுகிறாள்.

"ஸத்வாதிபி த்ரிமூர்த்திம் யா

தைர்ஹி நாநா ஸ்வரூபிணி

த்ரிகால வ்யாபினி சக்திம்

த்ரிமூர்த்திம் பூஜையாம்யஹம்!"

த்ரிமூர்த்தி தேவி ஸ்தவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களால் முப்பெரும் தேவியாய் விளங்குகிறாள். மகாலட்சுமி, சரஸ்வதி, கௌரி என மூன்று ஸ்வரூபிணியாகவும் அருள்புரிகின்றாள். அதனால் இந்தப் பெயரும் பெறுகிறாள். இந்நாளில் அம்பிகை மூன்று வயது குழந்தையாகக் காட்சி தருகிறாள். இந்த நாளில் கோதுமை மாவில் கோலம் போட்டு, துளசி இலையால் பூஜை செய்து, முல்லைப் பூவால் அலங்கரித்து, புளியோதரை நைவேத்தியம் செய்து, கல்யாணி ராகத்தில் பாட்டு பாடி ஆராதனை செய்தால் நன்மை கிடைக்கும் என்பார்கள்.

நவராத்திரி
நவராத்திரி

இந்த வழிபட்டால் இல்லத்தில் தனம் தான்யம் பெருகும். அட்சயபாத்திரம் போல அள்ள அள்ளக் குறையாத செல்வம் இருக்கும். ஆயுள் அதிகரிக்கும். இன்பமான வாழ்வு கிடைக்கும். இந்த நாளில் ஏழை எளியோர்களுக்கு தட்சணை வழங்கலாம். சிறுமிகளுக்கு வஸ்திர தானம் செய்ய, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இந்த நாளில் மூன்று வயதுக் குழந்தையை அம்மனாகப் பாவித்து பூஜிக்கலாம்.