Published:Updated:

ஞானமும் முக்தியும் அளிக்கும் மெய்கண்ட சித்தர் குகைக் கோயில் அதிசயங்கள்!

சித்தர் குகைக் கோயில்

மெய்கண்ட சித்தர், குண்டலினி சித்தர், வாலையானந்தர், முத்தானந்தர் போன்ற ஞானியர்கள் வணங்கிய ஆலயம் இது. அவர்களின் மடங்களும் இன்றும் இந்தப் பகுதியில் உள்ளன.

ஞானமும் முக்தியும் அளிக்கும் மெய்கண்ட சித்தர் குகைக் கோயில் அதிசயங்கள்!

மெய்கண்ட சித்தர், குண்டலினி சித்தர், வாலையானந்தர், முத்தானந்தர் போன்ற ஞானியர்கள் வணங்கிய ஆலயம் இது. அவர்களின் மடங்களும் இன்றும் இந்தப் பகுதியில் உள்ளன.

Published:Updated:
சித்தர் குகைக் கோயில்
அமைதியும் அழகும் நிறைந்த இந்த மெய்கண்ட சித்தர் குகை மற்றும் சோமலிங்கேஸ்வரர் கோயிலை தரிசித்தால் ஞானமும் முக்தியும் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி அருகே அமைந்திருக்கும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மெய்கண்ட சித்தர் குகைக் கோயில் மற்றும் சோமலிங்கேஸ்வரர் கோயில். கன்னிவாடியிலிருந்து செம்பட்டி போகும் வழியில் இந்தக் கோயில் உள்ளது. தென்வடல் ரோட்டின் கிழக்கே செல்லும் பாதையில் சென்றால் அழகிய மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது.

சோமலிங்கேஸ்வரர் கோயில்
சோமலிங்கேஸ்வரர் கோயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரிகேசவ பருவத மலை என்ற பெயரும் இதற்கு என்கிறது கோரக்கர் மலை வாகடம் என்ற நூல். மெய்கண்ட சித்தர், குண்டலினி சித்தர், வாலையானந்தர், முத்தானந்தர் போன்ற ஞானியர்கள் வணங்கிய ஆலயம் இது. அவர்களின் மடங்களும் இன்றும் இந்தப் பகுதியில் உள்ளன. இந்தத் தகவலை போகர் மலை வாகடம் கூறுகின்றது. நீண்ட சிவலிங்கம்போல் இருக்கும் இந்த மலையின் அழகைப் பார்த்து ரசிக்க நேரம் போவதே தெரியாது. அவ்வளவு அழகாக இருக்கும்.

இங்குள்ள குகை மிக அழகானது. தீபஒளிச் சுடர்போன்ற அமைப்புடன் உள்ளே முற்றிலும் லிங்க வடிவில் குடைந்து காணப்படுகிறது. மெய்கண்ட சித்தர் தவம் செய்த குகை இது. இதனால் இந்தப் பகுதி அதிக அதிர்வுடனும் அதீத சக்தியுடனும் நிறைந்துள்ளது. இக்குகையில் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

மெய்கண்ட சித்தர் தவம் செய்த குகை
மெய்கண்ட சித்தர் தவம் செய்த குகை

இக்குகையில் சிவலிங்கம் ஓவிய அமைப்பும் சித்தர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருப்பதைப் போன்ற ஓவிய அமைப்பும் உள்ளது. சிவலிங்க வடிவில் சித்தரா அல்லது சித்தர் வடிவில் சிவ லிங்கமா என்று யோசிக்கும் விதமாக ஆச்சர்யமாக உள்ளது.

இக்குகைக்கு அருகிலே சற்றுக் கீழே இறங்கிச் சென்றால் ஒரு வில்வமரம் உள்ளது. அதன் சிறப்பு என்னவெனில் இந்த வில்வ தளத்தில் பதிமூன்று இதழ்கள் உள்ளன. இது மிக மிக விஷேமானது, மகாவில்வத்தையும் விட அபூர்வமானது என்கிறார்கள். அமைதியும் அழகும் நிறைந்த இந்த மெய்கண்ட சித்தர் குகை மற்றும் சோமலிங்கேஸ்வரர் கோயிலை தரிசித்தால் ஞானமும் முக்தியும் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

- S. சிவக்குமார், வழக்கறிஞர்

பழனி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism