தொடர்கள்
Published:Updated:

சோழனும் ராமாயணமும்!

சோழனும் ராமாயணமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சோழனும் ராமாயணமும்!

சோழனும் ராமாயணமும்!

தமிழகத்துக்கும் ராமாயணத்துக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது. அதை பக்தி இலக்கியங்களில் மட்டுமல்ல 2 ம் நூற்றாண்டுப் பனுவல்களான சங்க இலக்கியங்களிலும் காணமுடியும். அப்படி ஒரு பாடல்தான் புறநானூற்றில் இடம் பெறும் 378 வது பாடல். இந்தப் பாடலை எழுதியவர் ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர்.

சோழனும் ராமாயணமும்!
சோழனும் ராமாயணமும்!


சோழன் மன்னன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, சோழ நாட்டின் எல்லையை விரிவாக்கும் பொருட்டுப் பல நாடுகள் மீதும் போரிட்டு வெற்றிகொண்டான். அவன் வெற்றியைப் புலவர் பாடுகிறார். அதுவும் கிணைப்பறையை முழங்கிக்கொண்டு வெற்றிப்பாடலைப் பாடுகிறார். அதைக் கேட்ட மன்னன் மனம் மகிழ்ந்து அரிய அணிகலன்களைப் பரிசிலாக வழங்குகிறான்.

ஆனால் அந்த அணிகலன்களை எவ்வாறு அணிவது என்று அறியாத புலவரின் வீட்டில் இருந்தவர்கள் விரலில் அணிய வேண்டியதைக் காதுகளிலும் காதுகளில் அணிய வேண்டியதை விரல்களிலும் அணிந்து கொண்டனர். அதாவது அரியவகை நகைகள். அவற்றை இதுவரை அணிந்ததில்லை. ஏன் பார்த்தது கூட இல்லை. அப்படிப்பட்ட சூழலில் அவற்றைக் கண்டு திகைத்து இதுபோன்று மாற்றி மாற்றி அணிகின்றனர்.

இந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதை ஊன்பொதி பசுங்குடையார் ஒரு உவமை மூலம் விவரிக்கிறார். ராவணன் சீதையைக் கவர்ந்துகொண்டு வான்மார்க்கமாகச் செல்கிறான். அப்போது சீதை தான் அணிந்திருக்கும் அணிகலன்களை எல்லாம் கழற்றி ஒவ்வொன்றாகக் கீழே போட்டுக்கொண்டே வருகிறாள்.

அவற்றை எடுக்கும் குரங்குகள் அவற்றை எவ்வாறு அணிவது என்று அறியாத குரங்குகள் அவற்றை தம் மேல் மாற்றி மாற்றி அணிந்துகொண்டால் போல் இருந்தது என்று விளக்குகிறார். அந்தப் பாடல்:

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,

கருத்து : சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். அவள் ராமனுக்குத் தான் செல்லும் வழியைக் காட்ட, தனது அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்து கொண்டது போல் இருந்தது.

சங்க காலத்தில் ராமாயணக் காப்பியத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் வேறு என்ன வேண்டும்