Published:Updated:

காகமும் அன்னதானமும்!

காகமும் அன்னதானமும்
பிரீமியம் ஸ்டோரி
காகமும் அன்னதானமும்

ஆன்மிகச் சிறுகதை

காகமும் அன்னதானமும்!

ஆன்மிகச் சிறுகதை

Published:Updated:
காகமும் அன்னதானமும்
பிரீமியம் ஸ்டோரி
காகமும் அன்னதானமும்

அவிநாசி நகரின் புராதானப்பெயர் திருப்பிக்கொளியூர். இங்கே ஈசன் அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், அவிநாசி நாதர், பெருங்கேடிலியப்பர் என்ற திருநாமங்களோடும் இறைவி கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி ஆகிய திருநாமங்களோடும் அருள்பாலிக்கின்றனர். இந்தத் தலத்தில் காகம் ஒன்று முக்தி அடைந்து சிவகணங்களில் ஒன்றாக ஆனது என்கிறது தலபுராணம். அது என்ன திருக்கதை?!

காகமும் அன்னதானமும்!

ஒரு அமாவாசை நாளில் காகத்திற்குப் பிண்டம் வைத்து வழிபட்டனர் பக்தர்கள். அதை ஒரு காகம் பறந்து வந்து தான் உண்டு மீதத்தைத் தன் குஞ்சுகளுக்கு எடுத்துச் செல்ல வாயில் அள்ளிக்கொண்டதாம். பிறகு தன் கூண்டை நோக்கிப் பறக்க அப்போது எதிரிலே ஒரு காகம் வந்து அன்னத்தைப் பிடுங்க நினைத்து அதன் மீது மோதியது. அப்போது காகத்தின் வாயிலிருந்த அன்னம் கீழே நின்று கொண்டிருந்த ஒரு பார்வையற்ற சிவனடியாரின் தட்டில் விழுந்தது. அவரும் யார் போட்டது என்பதை அறியாமல் அந்தச் சில பருக்கை களையும் பசியோடு உண்டு மகிழ்ந்தார்.

காகமோ கீழே விழுந்த சாதம் என்ன ஆனது என்று சிந்திக்காமல் தன் குஞ்சுகளுக்கு உணவு தேடி மீண்டும் பறந்தது. அப்போது ஒரு வேடன் சிறு மண் உருண்டையை எடுத்து காகத்தை அடித்தான். அது காகத்தைத் தாக்க காகம் இறந்தது.

அடுத்த கணம், காகத்தின் உரு நீங்கி அதற்கு தேவ உரு கிடைத்தது. கயிலாயத்தில் ஈசனின் சந்நிதியில் நின்று வணங்கியது. காகத்துக்குக் குழப்பம். சிவ கணங்களும் திகைத்தன. 'ஒரு காகம் எப்படி தேவ உரு அடைந்தது' என்று குழம்பினர்.

அப்போது ஈசன் புன்னகையோடு, "திருப்புக்கொளியூரில் இந்தக் காகம் தன்னையும் அறியாமல் சிவனடியார் ஒருவருக்கு உணவு இட்டத்து. அதன் பலனாகத் தன் காக உரு நீங்கி தேவ உரு கொண்டது" என்று சொன்னார்.

இதை அறிந்த காகவுரு நீங்கி தேவன் சிவனையும் தேவையும் துதித்தான். ஈசன் அவருக்கு ‘தீர்க்கத் துண்டன்’ என்ற திருநாமம் சூட்டி சிவகணங்களில் ஒருவராகச் செய்தார் என்கிறது அவிநாசி தலபுராணம். அறியாமல் செய்தாலும் அன்னதானம் நினைத்துப்பார்க்க முடியாத பலன்களைப் பெற்றுத்தரும்.