Published:Updated:

`ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?'

தீர்த்த புண்ணியம்!
பிரீமியம் ஸ்டோரி
தீர்த்த புண்ணியம்!

ஆன்மிகக் கேள்வி பதில்கள் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

`ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?'

ஆன்மிகக் கேள்வி பதில்கள் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Published:Updated:
தீர்த்த புண்ணியம்!
பிரீமியம் ஸ்டோரி
தீர்த்த புண்ணியம்!

? மகா சிவராத்திரியில் இரவு கண்விழித்து வழிபடுகிறோம். கந்த சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்து வணங்குகிறோம். அதேபோல் மாசி மகத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன, மாசி மகம் உற்சவத் தின் சிறப்புகள் என்ன?

- ப. கீர்த்தனா, வேலூர்

`ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?'

ஒவ்வொரு மாதத்துக்கும் உரியதாக ஒரு நக்ஷத்திரம் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. அதை மாத நக்ஷத்திரம் என்று கூறுவார்கள். அந்த நக்ஷத்திரமானது பெரும்பாலும் மாதத்தின் பெளர்ணமி அன்றோ அல்லது ஒருநாள் முன்தாகவோ அல்லது மறுநாளோ வரும்.

அவ்வகையில் மாசி மாதத்துக்கான நக்ஷத்திரம் மகம். அற்புதமான மாசி மாதத்தில் செய்யக்கூடிய உற்சவமானது மிகவும் சிறப்பானது. மாசி மாதத்தில் சிவபெருமானை அறிந்து, மகிழ்ந்து, போற்றி வழிபடும் சிவராத்திரி புண்ணியகாலம் வருகிறது. ஆகவே அந்த மாதத்துக்கு உரிய நக்ஷத்திரமான மகமும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

அனைத்து ஆலயங்களிலும் அந்த மாசி மகத்தன்று அருகில் இருக்கக் கூடிய கடல், நதி அல்லது தீர்த்தங்களில் தீர்த்த உற்சவம் செய்வது மிகவும் சிறப்பு என்கின்றன ஞானநூல்கள். அந்தப் புண்ணிய தருணத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று அந்தத் தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானின் அனுக்கிரகத்தைப் பெறவது மிகவும் சிறப்பு. ஆம், மாசிமக தீர்த்த உற்சவ தருணத்தை தீர்த்தமாடலுக்கு உகந்த புண்ணிய காலமாக ஆகமங்கள் கூறுகின்றன.

? ஹோமத்தில் நாணயங்களும் இடப்படுவது ஏன். ஹோமப் பிரசாதமாகக் கிடைக்கும் நாணயங்களை மணிபர்ஸ் அல்லது பீரோவில் வைக்கலாமா அல்லது பூஜையறையில் வழிபாட்டில் சேர்த்து பூஜிக்க வேண்டுமா?

- தி.பத்மநாபன், புதுக்கோட்டை

`ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?'

ஹோமத்தில் இடும் நாணயமானது தங்கம், வெள்ளி, செப்பு ஆகியவற்றால் அமைந்திருந்தால், அவற்றை அந்த யாகத்தில் நாம் சமர்ப்பிக்கலாம்.

வேறுவிதமான கலப்புகள் இருப்பின் அவற்றைக் கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. நல்ல உலோகத்தினாலான நாணயமானது குறிப்பிட்ட யாகத்தில் அளிக்கப்பட்ட பின், அந்த சக்தியானது அந்த நாணயத்தில் இணைந்திருக்கும். ஆகவே அந்த நாணயமும் மகிமையும் புனிதமும் பெற்றுவிடுகிறது. அதை நாம் நம் இல்லத்தில் பூஜை அறையிலோ, வீட்டு வாசலிலோ அல்லது கையில் எடுத்துச் செல்வது போன்று இருக்கக்கூடிய பை மற்றும் பர்ஸில் வைத்துக்கொள்ளலாம். அது நமக்கு ஒரு காப்பாக இருக்கும் என்பது உண்மையே.

? கிராமத்தில் உள்ள பழைமையான ஆலயம் ஒன்றில், ஒரு பாத்திரத்தில் உள்ள அன்னத்தையே எல்லா சந்நிதிகளிலும் நைவேத்தியம் செய்வதைப் பார்த்தேன். தெய்வங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அல்லவா நைவேத் தியம் சமர்ப்பிக்க வேண்டும்?

- சி.பரணீதரன், திருச்சி-4

`ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?'
Grzegorz Wasowicz

ஆலயங்களில் எழுந்தருளும் சக்திக்கு அன்னத்தை நிவேதனம் செய்து, அதன் மூலம் உலகில் இருக்கக்கூடிய அனைத்து ஜீவராசிகளும் பசிப்பிணி இல்லாமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்திப்பது அவசியம். இவ்வாறு செய்யவேண்டும் என்பது நம் ஆகமங்கள் இட்ட கட்டளை.

நிவேதனம் சமர்ப்பிப்பதில் ஒவ்வோர் ஆலயத்திலும் ஒவ்வொரு மரபு இருக்கும். சில ஆலயங்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனிக் கிண்ணங்களில் தனித்தனியே நிவேதனம் சமர்ப்பிப்பது வழக்கத்தில் இருக்கிறது. ஆள் பலமோ வசதிகளோ இல்லாத ஆலயத்தில் தனித்தனியே சமர்ப்பிக்க இயலாத சூழல் இருக்கலாம். அப்போது ஒரே பாத்திரத்தில் அன்னத்தை வைத்து, அந்தந்த தெய்வச் சந்நிதிகளில் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு குறிப்பிட்ட பாகத்தை மட்டும் அந்த அர்ச்சகரானவர் நிவேதனம் செய்து வருவார். அதுவும் சரியானதே.

? அம்பாளை நவாவரண பூஷிதை என்கிறார்களே... ஏன்? ஆவரணங்கள் என்று ஞானநூல்கள் எதைக் குறிப்பிடுகின்றன?

- கீர்த்தனா கோபால், குறிச்சி

`ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?'

நவ ஆவரணங்கள் என்பவை எல்லாம்வல்ல பராசக்தியை சுற்றிலும் இருக்கக்கூடிய ஆவரண தேவதைகளைக் குறிக்கும். ஆதிபராசக்தியான அன்னை எப்போதும் அந்த சக்திகளுடனேயே படைப்பு முதலான தனது காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறாள். அதனால் அந்த ஒன்பது ஆவரணங்களில் (சுற்றுகளில்) இருக்கக்கூடிய சக்திகளைத் திருப்தி செய்வர். அவ்வாறு அவர்களை திருப்தி செய்து, பின்னர் ஒன்பதாவது நிலையில் ‘ஆனந்தமய சக்கரம்’ என்று கூறப்படும் ஸ்தானத்தில் உள்ள எல்லாம் வல்ல பராசக்தியையும் அவளது சக்தியான பரமேஸ்வரரையும் வழிபடுவது சாக்த மரபு ஆகும்.

? முன்னோர் திதி நாள்களில் வேறு ஏதெனும் விசேஷ காலமாக இருக்கும் நிலையில், திதி-தர்ப்பணாதிகள் செய்துவைக்க தகுந்த வாத்தியார் இல்லாத அல்லது கிடைக்காதபோது, நாமாகவே திதி - தர்ப்பணங்களை நிறைவேற்றலாமா... இதுபோன்ற சூழலில் என்ன செய்வது? வழிகாட்டுங்களேன்.

- தி.ஹரிஹரன், சென்னை-44

`ஹோமப் பிரசாத நாணயத்தை என்ன செய்யலாம்?'
Jedraszak

திதி என்று நாம் அளிக்கக்கூடிய முன்னோர்களுக்கு உரிய கடனை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக்கூடாது. அதே நாளில், வேறு ஏதேனும் விசேஷங்கள் இருந்தாலும், முதலில் நாம் செய்யக்கூடிய முன்னோர் கடனை முக்கியமாகக் கருதிச் செய்திடல் வேண்டும்.

அதற்குரிய குருவையும் தேடி முறைப்படி செய்வது அவசியம். தவிர்க்க முடியாத காரணங்களினால் வேறு எங்கேனும் செய்ய இயலாத நிலையில் நாம் இருப்பின், நமது சார்பாக யாரேனும் செய்வதும் நல்லதே. ஆனாலும் இந்த அணுகுமுறையை வேறு வழியே இல்லாத நிலையில் கடைசி வாய்ப்பாகவே வைத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி கண்டிப்பாக முன்னோர் கடனை அதற்கு உரிய நாளில், அவரவர் அளிப்பதே சரியானது.

- பதில்கள் தொடரும்...