Published:Updated:

தமிழர்களின் தியாகத்துக்கும் துணிவுக்கும் அடையாளமாக விளங்கும் தூக்குத்தலை நடுகற்கள்!

தூக்குத்தலை நடுகற்கள்

வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி, வாளைக் கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையைத் தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு 'தூங்குதலை','தூக்குத்தலை' எனும் பெயர் ஏற்பட்டது.

தமிழர்களின் தியாகத்துக்கும் துணிவுக்கும் அடையாளமாக விளங்கும் தூக்குத்தலை நடுகற்கள்!

வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி, வாளைக் கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையைத் தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு 'தூங்குதலை','தூக்குத்தலை' எனும் பெயர் ஏற்பட்டது.

Published:Updated:
தூக்குத்தலை நடுகற்கள்
ஆதித்தமிழர் நாடோடிகளாக இடம் விட்டு இடம் நகர்ந்த காலத்திலேயே நடுகல் வழக்கம் இருந்து வந்துள்ளது என வரலாறு கூறுகிறது. அப்போது தன் கூட்டத்தில் இறந்துபோனவரை ஓரிடத்தில் அடக்கம் செய்துவிட்டு, பிற்பாடு அந்த இடத்தை அடையாளம் காண, அங்கு கற்களை அடுக்கி வைக்கும் வழக்கம் தோன்றி உள்ளது. இதுவே காலப்போக்கில் நடுகல் என்ற முறையாகவும் தோன்றி உள்ளது எனலாம்.
தூங்குதலை
தூங்குதலை

தியாகம் செய்த வீரர் நடுகல்லால் நினைவு கூறப்பட்டால் அந்த வீரன் சொர்க்கம் செல்வான் என்ற நம்பிக்கை அப்போது நிலவி வந்திருக்கலாம் என்றும் அதனால் போரில் மாண்ட வீரனை, தேவர்கள் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிற்பங்கள் நடுகல்லில் இருப்பதையும் காண முடிகிறது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாமானியர்களுக்கு மட்டும் அல்ல, அப்போது மன்னர்களுக்கும் நடுகல்லே நிறுவப்பட்டது. அதுவே பின்னர் பள்ளிப்படை என்றானது என்றும் கூறப்படுகிறது. 'நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என வள்ளல் அதியமானுக்கு எழுப்பப்பட்ட நடுகல்லுக்குக் கள் படைக்கப்பட்டதையும் ஔவையார் குறிப்பிடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடுகல்
நடுகல்

தெய்வ வழிபாடுகள் அதிகம் பரவியிராத காலத்தே, நடுகல்லே வழிபாட்டுக்கு உரியவையாக இருந்து வந்துள்ளது. இதை

'தொழாதனை கழிதலோம்பு மதி வழாது

வண்டு மேம்படூஉ மிவ் வறநிலையாறே'

என்று புறநானூறு அறிவிக்கிறது. அதாவது நடுகல்லைத் தொடர்ந்து வணங்கினால், மழை மிகுந்து, சோலைகள் வளம் பெறும். அதனால் வண்டுகள் மிகுந்து ஆர்ப்பரிக்க விளைச்சல் பெருகும் எனக் கூறுகிறது இப்பாடல்.

வெற்றி பெற்ற, தியாகம் செய்த மானிடருக்குக் கல்லில் நடுகல் வைப்பதைப்போல, தோல்வி அடைந்தவருக்கு மண்ணில் உருவாரம் செய்து பாவையாக்கிப்பொது இடத்தில் வைப்பதும் உண்டாம். இது வெயிலிலும் மழையிலும் பாழாகி அழகிழந்து போகும், என்பதையும் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன.

தூக்குத்தலை நடுகற்கள்!

நம் கோயில் திருவிழாக்களில் கிடாவெட்டு நடைபெறுவதைப் பார்த்திருப்போம். அக்காலத்தில் ஆநிரைகள்(ஆடு ,மாடு) பெருஞ்செல்வமாய் கருதப்பட்டன. ஆகவே அவ்வினங்கள் பெருகவும், நோய் நொடியின்றி இருக்கவும் பட்டியில் இருந்த ஆடு ஒன்றை சாமிக்கு நேர்ந்துவிட்டு, குறிப்பிட்ட நாளில் ஊரார் முன்னிலையில் கிடாவை வெட்டி நேர்த்திக்கடனைச் செலுத்துவர். இதே வழக்கம் பின்னாளில் தம்குடியினர் கொள்ளைநோயின்றிப் பல்கிபெருகவோ அல்லது தம்குடித்தலைவன், மன்னன் நோய்நொடியின்றி வாழவோ, படையில் வெற்றி பெறவோ, அல்லது வேறு எதன் பொருட்டோ தன்னைத்தானே பலியிட்டுக்கொள்ளும் மரபு வழக்கில் இருந்துள்ளது.

பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில் அரவானைப் பற்றிய குறிப்புள்ளது. இதில் களப்பலி என அறியப்படும் பலிச்சடங்கைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த பலியை நடத்துபவர்கள் போர்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இந்த சடங்கில், துணிவுமிக்க ஒரு போர்வீரன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரைக் காளிதேவிக்கு பலி கொடுத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சடங்கில் தன் உயிரைத் தியாகம் செய்து கொள்ள அரவான் முன் வந்தார். அரவான் கதை அநேகமாய் தென்னிந்திய சமூகங்களின் பலியிட்டுக்கொள்ளும் மரபினைச் சேர்ந்த கதையாகப் பின்னாளில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவே தெரிகிறது!

தூங்குதலை பலி
தூங்குதலை பலி

இங்கே காணப்படும் தூங்குதலை என்பது வித்தியாசமான, அல்லது கொடூரமான ஒரு பலி எனலாம். தமிழகத்தில் இதுவரை இத்தகைய நடுகற்கள் 7 மட்டுமே கிடைத்துள்ளன. அதில் நான்கு தொண்டை மண்டலத்திலும் ஒன்று தமிழக எல்லைப்பகுதியான கிருஷ்ணகிரியில் கன்னட எழுத்துப் பொறிப்புடனும் மற்றொன்று விருதுநகர் மாவட்டத்தில் மன்னார்கோட்டை எனும் ஊரில் காளிகோவில் அருகே கல்வெட்டாய் உள்ளது.

நடுகற்கள்
நடுகற்கள்

இதில் வீரனின் புடைப்புச்சிற்பம் ஏதும் இல்லை. குலோத்துங்கச் சோழன் காலத்தில் 'கலியுக கண்டடி தன்மசெட்டி' எனும் தலைவன் உடல்நலம் பெறவேண்டி 'வேலன் சீலப்புகழன்' என்பவர் பலியிட்டுக்கொள்கிறார். மற்றொன்று சிவகங்கை மாவட்டம் மல்லல் ஊர் அருகேயுள்ளது இதுவும் குலோத்துங்கன் காலமே. இதிலும் புடைப்புச்சிற்பம் இல்லை 'குலோத்துங்கசோழ மூவரையன்' எனும் அதிகாரியின் உடல்நலம் வேண்டி 'அம்பலக்கூத்தன்' எனும் வீரன் தன்தலையை அரிந்து கொடுத்துள்ளான். இவை அனைத்தும் சோழர் காலமே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மணிமேகலையும் கலிங்கத்துப்பரணியும் இச்சாவை மேற்கொள்வோர் எவ்வாறு இறந்தனர் என வருணிக்கிறது.

"உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்

தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்

பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்

காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்..."

தூக்குத்தலை நடுகற்கள்
தூக்குத்தலை நடுகற்கள்

காடமற்செல்வி எனப்படும் கொற்றவை முன்பு இறைவி நினைத்து வீரன் அமர்ந்திருப்பான். நல்ல தரமான மூங்கிலை மண்ணில் புதைத்து, அதன் மறுமுனையை நல்ல விசையுடன் இழுக்கும் வண்ணம் வளைத்து, அமர்ந்துள்ள வீரனின் கொண்டையில் நன்றாக இருக்கி கட்டிவிடுவர். நன்றாக மூங்கிலை வளைத்திருப்பதால் அது நல்லவிசையுடன் வீரனின் தலையை விடுவிக்கக் காத்திருக்கும். அவ்வீரன் கொற்றவையை அமர்ந்தவாறு வணங்கி வாளைக் கழுத்தில் இறக்கியதும், அந்த மூங்கில் தலையைத் தனியே பிய்த்து எறிந்து உயர்ந்து தூக்கிச்செல்லும். இதனாலேயே இந்த வகை பலிக்கு "தூங்குதலை","தூக்குத்தலை" எனும் பெயர் ஏற்பட்டது.

இந்த வகை நடுகற்கள் தமிழர்களின் தியாகத்துக்கு துணிவுக்கும் அடையாளமாக இன்றும் விளங்கி வருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism