Published:Updated:

`அரச மரத்துக்கும்,வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணம்' - ஆற்காடு அம்மன் கோயிலில் பரவசமடைந்த பக்தர்கள்!

மரங்களுக்கு திருக்கல்யாணம்

அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தி, மெய்சிலிர்க்க வழிபாடு நடத்தியிருக்கிறார்கள் முப்பதுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள்.

`அரச மரத்துக்கும்,வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணம்' - ஆற்காடு அம்மன் கோயிலில் பரவசமடைந்த பக்தர்கள்!

அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தி, மெய்சிலிர்க்க வழிபாடு நடத்தியிருக்கிறார்கள் முப்பதுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள்.

Published:Updated:
மரங்களுக்கு திருக்கல்யாணம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள முப்பதுவெட்டி கிராமத்திலிருக்கும் ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் ‘வேம்பரசு’ திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலிலுள்ள அரச மரம், கைலாசபதி வெள்ளியம்பலவாணன் ஸ்ரீபரமேஸ்வர சொரூபமாக வணங்கப்படுகிறது. அதேபோல, அதனருகிலுள்ள வேப்ப மரம், மலைராஜன் மகள் சைலபுத்ரி ஸ்ரீபார்வதி தேவியின் சொரூபமாக வணங்கப்படுகிறது. சிவசக்தி திருவடிவாய் எழுந்ததருளியுள்ள வேம்பு, அரச மரங்களுக்கு சித்த யோகம் கூடிய சுபமுகூர்த்த நேரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மரங்களுக்கு திருக்கல்யாணம்
மரங்களுக்கு திருக்கல்யாணம்

இதையொட்டி, திருமணத்துக்கு அடிப்பதைப்போன்றே உற்சவ அழைப்பிதழ் பத்திரிகை அச்சிடப்பட்டு, ஊர் முழுவதும் கொடுக்கப்பட்டது. வைபவத்தில் குடும்பம், குடும்பமாக வந்து பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, பெண்கள் அதிகம் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், முப்பதுவெட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். பன்னெடுங் காலமாய் வேண்டுதலை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ துலுக்கானத்தம்மன் அருளால், இந்த வைபத்தை நடத்தி மகிழ்ந்ததாக பரவசமடைகிறார்கள் முப்பதுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism