Published:Updated:

தருமபுர ஆதீனப் பட்டணப்பிரவேசம்: ஆரம்பமானது முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்!

திருத்தேரோட்டம்

சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனையடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தருமபுர ஆதீனப் பட்டணப்பிரவேசம்: ஆரம்பமானது முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்!

சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனையடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

Published:Updated:
திருத்தேரோட்டம்

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற  பட்டணப்பிரவேச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருத்தேரோட்டம்
திருத்தேரோட்டம்

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு பழைமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த  ஆலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் வைகாசிப் பெருவிழா நடைபெறும். ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா, மற்றும் ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி எனப் பலவும் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தாண்டு வைகாசித் திருவிழா  கடந்த 12 -ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாகத் திருத்தேரோட்டம்  இன்று ( 20.5.2022) காலை தொடங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனையடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேரோட்டம்
திருத்தேரோட்டம்

தருமபுரம் ஆதீன மடத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், ஆதி குரு முதல்வர் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 22 -ம் தேதி ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பட்டணப்பிரவேசப் பல்லக்கு நிகழ்ச்சி இரவு நடைபெறுகிறது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism