Published:Updated:

விழுப்புரம்: ``மழை பெஞ்சா பிழைப்பு அவ்வளவுதான்"- விநாயகர் சிலை தயாரிப்பில் 4-ம் தலைமுறை!

விநாயகர் சிலை

சாமி விஷயமா இருக்கிறதால அதை நாங்க பெருசா எடுக்கிறதில்லை. இந்த சீசன் இல்லாத மத்த நேரத்துல சட்டி, பானை செய்வோம். அதுவும் மழை பெய்சிருச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது.

விழுப்புரம்: ``மழை பெஞ்சா பிழைப்பு அவ்வளவுதான்"- விநாயகர் சிலை தயாரிப்பில் 4-ம் தலைமுறை!

சாமி விஷயமா இருக்கிறதால அதை நாங்க பெருசா எடுக்கிறதில்லை. இந்த சீசன் இல்லாத மத்த நேரத்துல சட்டி, பானை செய்வோம். அதுவும் மழை பெய்சிருச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது.

Published:Updated:
விநாயகர் சிலை

விநாயகர் சதுர்த்தி என்றாலே குதூகலம் பிறந்துவிடும். உள்ளங்கையில் சுமந்து செல்லும் சின்னச் சின்ன விநாயகர் முதல் தலை நிமிரப் பார்த்து பிரமிக்கும் விநாயகர்கள் வரை கண்கவர் சிலைகளால் விழா களைகட்டும். இப்படி விநாயகரைச் செய்வதற்காகவே பல குடும்பங்கள் தமிழகம் எங்கும் இருந்துவருகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? இந்தத் தொழிலில் இருக்கும் சவால்கள் என்ன என்பன குறித்து அறிந்துகொள்ள விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த முன்னூர் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசனை சந்திக்கச் சென்றோம்.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

பெரிய பெரிய விநாயகர் சிலைகள். அவற்றைத் தம் கைகளால் அழகு படுத்திக்கொண்டிருந்தார் சீனிவாசன். பெரும்பாலும் விநாயகர் சிலைகள் தயாராகிவிட்டன. அவற்றுக்கு வர்ணம் பூசும் பணி நடந்துகொண்டிருந்தது. நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரோடு பேசினோம்.

"என் பேரு சீனிவாசன். நான்கு தலைமுறையா இந்தத் தொழில் செய்துகொண்டு இருக்கிறோம். என் குடும்பத்தில் உள்ள ரெண்டு பிள்ளைங்க, மருமகள்கள்னு ஆறு பேருமா சேர்ந்து இதைச் செய்துகிட்டு இருக்கோம். கிட்டத்தட்ட 20 வகையான பிள்ளையார் செய்வோம். கஸ்டமர் என்ன கேக்குறாங்களோ அதே மாதிரி செய்துகொடுப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிலர் விநாயகருக்கு வாகனமா எலி வேணும்னு சொல்லுவாங்க. சிலர் புலி இல்லைன்னா சிங்கம் வேணும்னு கேப்பாங்க. கஸ்டமர் எப்படிக் கேக்குறாங்களோ அந்த மாதிரி செய்வோம். அதிகபட்சம் 20 அடி உயரம் வரை சிலை செய்திருக்கோம். இப்போ கவர்ன்மெண்ட் 10 அடிவரை தான் இருக்கணும்னு ஆர்டர் போட்டதால 10 அடிதான் செய்யுறோம். இந்த வருஷம் திருச்சி, திண்டிவனம், பாண்டிச்சேரி, கடப்பாக்கம், செஞ்சினு வெளியில இருந்து 30 ஆர்டர் வந்திருக்கு. அதைப் பெரும்பாலும் முடிச்சிட்டோம்" என்றார்.

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

அவரிடம் இவற்றைத் தயார் செய்ய என்னசெலவு ஆகும் என்று கேட்டொம். அதற்கு, "முதலீடுன்னு பாத்தா மாவு மூட்டை வாங்குவதுதான் பெரும் செலவு. அதுவே 400 லிருந்து 500 ரூபாய்வரை வந்திடும். சித்தேரி ஏரியிலிருந்து களிமண் எடுக்கிறோம். நாங்க நாலு தலைமுறையா பண்றதால கலெக்டர் ஆர்டர் வாங்கி இருக்கோம். அதனால் யாரும் எங்களை எதுவும் சொல்ல மாட்டாங்க. வேலைதான் பெரிய வேலை. ஆனால் லாபம்னு பெருசா வராது. ஒரு நாளைக்கு 500 லிருந்து 1000 ரூபாய் கூலி அப்படிங்கிற அளவுதான் வரும். சாமி விஷயமா இருக்கிறதால அதை நாங்க பெருசா எடுக்கிறதில்லை. இந்த சீசன் இல்லாத மத்த நேரத்துல சட்டி, பானை செய்வோம். அதுவும் மழை பெஞ்சுருச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது" என்று கூறி முடித்தார்.