Published:Updated:

கேட்ட வரம் அளிக்கும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சித்திரைத் திருவிழா!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழா: வருடந்தோறும் திருவிழா நாட்களில் காலையிலும் மாலையிலும் செண்பகவல்லி அம்பாளும், பூவனநாதசுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுல வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.

கேட்ட வரம் அளிக்கும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சித்திரைத் திருவிழா!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழா: வருடந்தோறும் திருவிழா நாட்களில் காலையிலும் மாலையிலும் செண்பகவல்லி அம்பாளும், பூவனநாதசுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுல வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.

Published:Updated:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை தீர்த்த திருவிழாவிற்கான பந்தக்கால் நாட்டியுள்ளனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா சூழல் நிலவியதால் பங்குனி பெருந்திருவிழா நடைபெறவில்லை. கோவில்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்டு பிற ஊர்களில் வாழ்பவர்களை இந்தத் திருவிழா ஒன்றிணைத்து தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வழி வகுக்கும். இந்த வருடம் இத்திருவிழா நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று பந்தக்கால் நடப்பட்டது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்

கோவிற்புரி மன்னன் உருவாக்கிய கோவில்பட்டி நகரில் இக்கோயில் மிகவும் பழம்பெருமை வாய்ந்தது. செண்பக பாண்டிய மன்னன் இக்கோயிலை எழுப்பியுள்ளார் என்கிறது வரலாறு. அதனால் அம்பாளுக்கு செண்பகவல்லி என்று பெயர் வந்தது. மதுரையில் மீனாட்சி அம்மனின் அரசாட்சி போலவே கோவில்பட்டியில் செண்பகவல்லி அரசாட்சி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் செண்பகவல்லி அம்பாளுக்கும், பூவனநாதசுவாமிக்கு தனி தனியே சந்நிதிகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குனி பெருந் திருவிழா
பங்குனி பெருந் திருவிழா

இக்கோயிலில் பங்குனி பெருந் திருவிழாவிற்கு கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் வருகிற ஏப்ரல் 5-ம் நடைபெறும் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இத்திருவிழா ஏப்ரல் 15 -ம் தேதி வரை பல்வேறு சப்பரங்களில் வீதி உலா, தேரோட்டம், தெப்பத் தேரோட்டம் உட்பட பல நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தேரோட்டதன்று அதிகாலையில் கோயிலின் நடை திறந்து, செண்பகவல்லி அம்பாள், பூவனநாதசுவாமி மற்றும் பிற பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து,தீபாரதனை நடைபெற்று தனி தனி தேர்களில் செண்பகவல்லி அம்மனையும் , பூவனநாத சுவாமியையும் தேர்களில் அழைத்துச் செல்வர். வருடந்தோறும் திருவிழா நாட்களில் காலையிலும் மாலையிலும் செண்பகவல்லி அம்பாளும், பூவனநாதசுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுல வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். கேட்டதை கேட்டவாறே அருளும் செண்பகவல்லி அம்மனையும் பூவனநாத சுவாமியையும் தரிசித்து அருள் பெற கோவில்பட்டி மக்கள் அன்போடு அனைவரையும் அழைக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism