Published:Updated:

சபரிமலை: தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி; 19 மணி நேரம் நடை திறப்பு அரசு அறிவிப்பு!

பரினெட்டாம் படியில் ஏறிச்செல்லும் பக்தர்கள்

சபரிமலை பதினெட்டாம் படியில் பக்தர்களை ஏற்றிவிடப் புதிதாக நூறு ஐ.ஆர்.பி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை கூடுதலாக 420 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை: தினமும் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி; 19 மணி நேரம் நடை திறப்பு அரசு அறிவிப்பு!

சபரிமலை பதினெட்டாம் படியில் பக்தர்களை ஏற்றிவிடப் புதிதாக நூறு ஐ.ஆர்.பி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை கூடுதலாக 420 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Published:Updated:
பரினெட்டாம் படியில் ஏறிச்செல்லும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 16-ம் தேதி திறந்தது. ஆரம்பத்தில் 50 ஆயிரம், 60 ஆயிரம் என தினசரி பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தனர். பின்னர் 80 ஆயிரம், 90 ஆயிரம் என பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த சில நாள்களாக பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா காரணமாக பக்தர்கள் சபரிமலை செல்லக் கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங் தவிர அனைத்து கட்டுப்படுகளும் தளர்த்தப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை செல்ல நேற்று ஒரு லட்சத்து 19 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இது தவிர பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனத்துக்காக வந்திருந்தனர். கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம் காரணமாக ஏற்கெனவே சபரிமலையில் தரிசனம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்படும் நடை மதியம் 1.30 மணிக்கு சாத்தப்படுகிறது. மாலை 3 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு சார்த்தப்படுகிறது. இதை அடுத்து சபரிமலை நடை ஒரு நாள் 19 மணி நேரம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள்
சபரிமலை சன்னிதானத்தில் தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள்

இதற்கிடையே நேற்று அதிக அளவு பக்தகள் குவிந்ததால் சன்னிதானத்தில் போலீஸார் திக்குமுக்காடிவிட்டனர். பதினெட்டாம் படியில் பக்தர்களை வேகமாக ஏற்றிவிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கூட்டத்தை சமாளிக்கும் விதமாக அனுபவம் வாய்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி சன்னிதானத்தும்கு நியமிக்கப்படுள்ளார். அதன் அடிப்படையில் பம்பா பகுதியில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.பி சுதர்சன் சன்னிதானப் பாதுகாப்புப் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். சன்னிதானப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.பி ஹரிசந்திரன் பம்பாவுக்கு மாற்றப்பட்டார். இனி ஒரு நிமிடத்துக்கு 70 பேரை பதினெட்டாம் படியில் ஏற்றிவிடும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு லட்சத்துக்கு மேல் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக ஒரு நாள் 90 ஆயிரம் பக்தகளை மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்தால் கூட்டத்தை சமாளிக்க முடியாது எனப் போலீஸ் கூறியதை அடுத்து இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தந்திரி தலைமையில் நடந்த களப கல்அச பூஜை
தந்திரி தலைமையில் நடந்த களப கல்அச பூஜை

இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரளா ஐகோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. கேரள அரசும், தேவசம்போர்டும் கோர்ட்டி சில தகவல்களை தெரிவித்தன. அதில், "பதினெட்டாம் படியில் பக்தர்களை ஏற்றிவிடப் புதிதாக நூறு ஐ.ஆர்.பி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை கூடுதலாக 420 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். சந்திரானந்தன் சாலை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மரக்கூட்டம் பாதை வழியாக பக்தர்கள் சன்னிதானத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரக்கூட்டம் பாதையை ஒன்வே ஆக மாற்றவில்லை. நிலக்கல்லில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது" என கூறப்பட்டது.

ஐயப்ப பக்தருக்கு உதவும் போலீஸ்
ஐயப்ப பக்தருக்கு உதவும் போலீஸ்

அதேவேளை ஆலோசனைக்கூட்டத்தின் முடிவை கோர்ட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலக்கல்லில் தேவையான பார்க்கிங் வசதி செய்யாமல் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும். அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தரிசனம் செய்யாமல் செல்லும் நிலை ஒரு பக்தருக்கு ஏற்படக்கூடாது எனவும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. இந்த அமர்வு இன்றும் (13.12.22) தொடரும் என கோர்ட் தெரிவித்துள்ளது.