Published:Updated:

தீபாவளிக்கு முதல் நாள் ஏற்றவேண்டிய யம தீபம்; வழிமுறைகள்; மந்திரங்கள் இதோ!

யம தீபம்

யம தீபம் ஏற்றி வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன.

தீபாவளிக்கு முதல் நாள் ஏற்றவேண்டிய யம தீபம்; வழிமுறைகள்; மந்திரங்கள் இதோ!

யம தீபம் ஏற்றி வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன.

Published:Updated:
யம தீபம்
தீபாவளிக்கு முந்தைய நாள் யம தீபம் ஏற்றும் வழக்கம் நம் மரபில் உண்டு. இந்நாளில் யம தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம்மளுடைய முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையில் பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்களை நாம் வழிபட்டு அந்நாளில் திதி கொடுக்கிறோம். எமலோகத்தில் இருந்து வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்ல வழியும் வெளிச்சமும் காட்டுவது இந்த யம தீபம் என்கிறது சாஸ்திரம். இந்த தீபத்தை தீபாவளிக்கு முந்தைய நாள் திரயோதசி திதியில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

தீபாவளி
தீபாவளி

விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக துர்மரணம் அடைந்தவர்களை நினைத்து யம் தீபம் ஏற்றினால் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் என்றும் அவர்களின் ஆசி குடும்பத்துக்குக் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

யம தீபம் ஏற்றி வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன. குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கிக் குடும்பம் விருத்தியாகும். சொத்துப் பிரச்னைகள் தீரும். நோய்கள் நீங்க ஆரோக்கியம் பெருகும். திருமணத்தடை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் நீங்கி நல்வழி கிடைக்கும்.

யம தீபம் ஏற்றும் முறை!

வீட்டின் உயரமான பகுதியில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். வீட்டில் உயரமான இடத்தில் விளக்கு ஏற்ற வாய்ப்பு இல்லாதவர்கள், வழக்கமாக வழிபடும் இடத்தில் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். அந்நாளில் திதிக்குட்பட்ட நேரத்தில் ஏற்றுவது சிறந்தது. ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, தெற்கு திசை நோக்கி விளக்கை ஏற்ற வேண்டும். எட்டுத் திசைகளிலும் எட்டு அகல் விளக்குகளை ஏற்றியும் வழிபடலாம். விளக்கேற்றிய பின்னர் முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டும். இந்த ஆண்டு திரயோதசி திதி இன்று மாலை (22.10.22) மாலை 5.28க்குத் தொடங்கி நாளை (23.10.22) மாலை 5.49 வரை உள்ளது. எனவே நாளை விளக்கேற்றுவது பொருத்தமாக இருக்கும். ஏற்றும் விளக்கை நாமாக அணைக்காமல் தானாக அணைய விட வேண்டும்.

தீப வழிபாடு
தீப வழிபாடு

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்!

ஶ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

இந்த மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.

யார் எல்லாம் தீபம் ஏற்றக்கூடாது?

இந்த யம தீபத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஏற்றி வழிபடலாம். ஆனால் கர்ப்பிணிகள், உடலில் வலி உள்ளவர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்கள், காயம் உள்ளவர்கள், புதிதாகத் திருமணமானவர்கள் கண்டிப்பாக ஏற்றக்கூடாது.