Published:Updated:

நடுக்கம் போக்கி மனநலம் காத்தருளும் நரசிம்மேஸ்வரர்; ஆச்சர்யப் பின்னணி!

நரசிம்மேஸ்வரர்

இதனைப் போக்க எண்ணிய சிவபெருமான் சாளுவ பட்சியாக (சரபம்) உருவெடுத்து தம் சிறகுகளால் அணைத்து நரசிம்மத்தைக் குளிர்வித்தார்.

இரண்யாசுரனை அழித்திடவும், பிரகலாதனின் பக்தியை உலகிற்கு உணர்த்திடவும் திருமால் எடுத்திட்ட அவதாரம்தான் 'நரசிம்ம அவதாரம்'. அசுர வதம் முடிந்த பின்னர், குருதிக் கலப்பால் ஏற்பட்ட விளைவினால் நரசிம்மமானது தன்னிலை மறந்து ஆக்ரோஷமான நிலையில், கட்டுப்பாடின்றி திரிந்ததைக் கண்டு அண்டசராசரங்களும் நடுநடுங்கியது.
இதனைப் போக்க எண்ணிய சிவபெருமான் சாளுவ பட்சியாக (சரபம்) உருவெடுத்து தம் சிறகுகளால் அணைத்து நரசிம்மத்தைக் குளிர்வித்தார்.

நரசிம்மேஸ்வரர்
நரசிம்மேஸ்வரர்

அசுர வதம் செய்தமையால் ஏற்பட்ட ஹத்தி தோஷத்தினைப் போக்கிக் கொள்ள நரசிம்மர் சிவ பூஜை செய்த தலம்தான் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள 'நரசிங்கன் பேட்டை' ஆகும். திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் பரிபாலனத்திலுள்ள இக்கோயில் ஸ்ரீ லோகநாயகி சமேத ஸ்ரீ சுயம்புநாதர் அருள்பாலிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிகழ்விற்கு ஆதாரமாக நரசிம்மர் லிங்க பூஜை செய்கின்ற புடைப்புத் திருவுரு இக்கோயிலில் உள்ளது. நரசிம்மர் பூஜித்த சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்திருமேனியினர் 'சுயம்புநாதர்' என்ற திருநாமம் தாங்கினவராய் மூலவராக அருள்பாலிக்கி்றார்.

நரசிம்மேஸ்வரர்
நரசிம்மேஸ்வரர்

கடுமையான மன வியாதிகளுக்கு ஆட்பட்டவர்களும், மன அமைதி‌ வேண்டுபவர்களும் இங்குள்ள சுயம்புநாதரை வணங்கி நலம் பெறுகின்றனர். கும்பகோணம் - மயிலாடுதுறை பிரதான சாலையில் ஆடுதுறையிலிந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism