Published:Updated:

எதிரிகளை வெற்றிகொள்ளச் செய்திடுவாள் வாராஹி - பஞ்சமி நாளில் வழிபடலாம்!

வாராஹி

எதிரிகளை வெற்றிகொள்ளச் செய்திடுவாள் வாராஹி - பஞ்சமி நாளில் வழிபடலாம்!

எதிரிகளை வெற்றிகொள்ளச் செய்திடுவாள் வாராஹி - பஞ்சமி நாளில் வழிபடலாம்!

எதிரிகளை வெற்றிகொள்ளச் செய்திடுவாள் வாராஹி - பஞ்சமி நாளில் வழிபடலாம்!

Published:Updated:
வாராஹி

சப்தமாதர் வழிபாடு நமது தொன்மையான வழிபாடுகளுள் ஒன்று. அம்பிகையின் ஏவல் கணங்களான இவர்கள் வேண்டிய வரம் தருபவர்கள்.

இவர்களை ஆராதிப்பதினால் அச்சமற்ற வளமான‌ வாழ்வு கிடைத்திடும் என்பது ஐதிகம். 

இந்த ஏழு அன்னையரில் ஐந்தாமவளாக விளங்குபவள் வாராஹி. தேவி பாகவதத்தில் ஆக்ரோஷமான போர்க்கடவுளாக இவள் சித்தரிக்கப்படுகிறாள்.

வாராஹி
வாராஹி

பண்டாசுரனின் வலது தோளிலிருந்து உருவான விசுத்தாசுரனை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவள் வாராஹி.

பூமியின் அம்சமான இந்த அன்னை லலிதா தேவியின் படைகளை வழிநடத்திச்செல்லும் சேனாதிபதியாக விளங்குபவள்.

அம்பிகையின் அகங்காரத் தத்துவத்திலிருந்தும் அவளது கையிலிருந்த பஞ்சபாணத்திலிருந்து தோன்றியமையாலும், அன்னையின் ஐந்தாவது சக்தியாக உருவானதாலும் வாராஹிக்கு 'பஞ்சமி' என்ற திருநாமம் உண்டாயிற்று.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உழவுத் தொழில் செழித்திட அருளுபவள்  வாராஹி. முற்காலத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கிடும் முன்னோட்டமாகவே 'ஆஷாட நவராத்திரி' என்ற பெயரில் இவளை ஆராதனை செய்தனர்.

கடுமையான சூழல்கள் ஏற்படும்போது, செய்வதறியாது திகைத்து மனம் நொந்து நிற்கிற தருணங்களில்  வாராஹியை வழிபட ஓடிவந்து காத்து நிற்பாள் இந்த வீரமாதா. வாராஹியைப் போற்றி வழிபட பெருஞ்சக்தியும், அளவில்லாத ஆற்றலும், தைரியமும், போராட்ட குணமும்  உண்டாகும்

வாராஹி
வாராஹி

எதிர்மறை வினைகளையும், எதிரிகளையும் துவம்சம் செய்து நம்மை முன்னோக்கி வழிநடத்திடுவாள் இந்த அன்னை. பஞ்சமி தினங்களில் தயிரன்னம், மொச்சை சுண்டல், உளுந்து வடை, பானகம்  நிவேதித்து வணங்கிட மகிழ்வுடன் அருளிடுவாள் இந்த வாராஹி. புறப்பகையை அழிப்பதோடு, மனதினுள்ளே மறைந்திருக்கும் அகங்காரம் எனும் அகப்பகையையும் அழித்து ஞானத்தினை அருளும் இந்த அன்னையை பஞ்சமி தினங்களில் வழிபட்டு அளப்பறிய நன்மைகளைப் பெறலாமே!