Published:Updated:

புத்திரபாக்கியம் வேண்டுமா? புத்திரகாமேஸ்வர யாகத்தில் வழிபடுங்கள்!

புத்திரகாமேஸ்வர யாகம்

இத்தலத்தில் இரு சிவ சந்நதிகள் உள்ளன. மூலஸ்தானம் வடாரண்யேஸ்வரர். இன்னொரு சிவ சந்நதிக்கு பெயர் புத்திரகாமேஸ்வரர்.

புத்திரபாக்கியம் வேண்டுமா? புத்திரகாமேஸ்வர யாகத்தில் வழிபடுங்கள்!

இத்தலத்தில் இரு சிவ சந்நதிகள் உள்ளன. மூலஸ்தானம் வடாரண்யேஸ்வரர். இன்னொரு சிவ சந்நதிக்கு பெயர் புத்திரகாமேஸ்வரர்.

Published:Updated:
புத்திரகாமேஸ்வர யாகம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள  திருவாலங்காட்டில் ஸ்ரீ வண்டார்குழலி சமேத ஸ்ரீ வடாரண்யேசுவரர் அருள்பாலிக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு நாளை நடைபெறவுள்ள புத்திரகாமேஸ்வர யாகத்தில் கலந்துகொண்டு வழிபட்டால் புத்திரபாக்கியம் கிட்டும் என்பது தொன்மையான நம்பிக்கை.

புத்திரகாமேஸ்வர
புத்திரகாமேஸ்வர

இத்தலத்தில் இரு சிவ சந்நதிகள் உள்ளன. மூலஸ்தானம் வடாரண்யேஸ்வரர். இன்னொரு சிவ சந்நதிக்கு பெயர் புத்திரகாமேஸ்வரர். மற்ற கோயில்கள் போலல்லாமல் நந்தி தரைக்குக் கீழே இருக்கும். அதனாலயே 'பாதாளநந்தி' என்றழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் முருகன் தனது மனைவியருடன் காட்சித் தருகிறார். தட்சிணாமூர்த்தி மிக இளமையான கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்கு எமனுக்கு என்று தனிச் சந்நிதி உண்டு. கருவறைக்கு முன் உள்ள சந்தான பிள்ளையார் இரட்டை பிள்ளையாராகக் காட்சித் தருகிறார். குலோத்துங்க சோழனால் புனரமைக்கபட்ட ஆலயம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவாவடுதுறை ஆதீனப் பரிபாலனத்திலுள்ள இக்கோயிலில் புத்திரபாக்கியம் அருளும் புத்திரகாமேஸ்வரர் பங்குனி அமாவாசை யாகம் மற்றும் தீர்த்தவாரி நாளை( 1.4.2022)  காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் திருவுளப்படி நடைபெறவுள்ளது.

இந்த யாகம் மற்றும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்யும் குழந்தையில்லாத தம்பதியினருக்கு நிச்சயம்  குழந்தை செல்வம் வாய்க்கும் என திருத்துருத்தி புராணத்தில் திருவாலங்காடு படலத்தில் திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதியுள்ளார்கள்.

திருவாலங்காட்டு
திருவாலங்காட்டு

போற்றும் அத்தீர்த்த நாமம் புத்திர தீர்த்தம் என்ப

சாற்றும் ஒவ்வொர் ஏதுக்களாலினும் பலபேர் செல்வார்

சாற்று நன்மீன மாதந்தலையுவா நாளின் மூழ்கின்

மாற்றுவன் மலடி யேனு மகப்பெறற்கு ஐயமில்லை

என்கிறது அந்தப்பாடல்.

எனவே குழந்தைபேறு வேண்டுவோர் இந்த யாகத்தில் பங்கேற்று பலன் பெறலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism