Published:Updated:

வேளாங்கண்ணி: ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா; நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி: ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா; நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி: ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா; நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி: ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா; நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Published:Updated:
வேளாங்கண்ணி

கீழ்திசைநாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது.

வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி

இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். இந்த நாள்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கி.மீ. தூரம் நடைபயணமாகவே அன்னையின் அருளாசியை பெற வருவார்கள். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலம் ஆண்டுப்பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்த்து. இத்தாண்டு, பெருவிழா பழையபடி வழக்கம் போல் நாளை ( 29.08.2022) மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியைப் புனிதம் செய்து வைக்க இருக்கிறார். இதை தொடர்ந்து கொடி ஊர்வலம் நடைபெற்று கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து திருத்தலக் கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறும்.

வரும் 30 -ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7 - ம் தேதிவரை பேராலயம், வீண்மீன் ஆலயம், மாதாகுளம், பேராலயத்தின் மேல்கோயில், போராலயத்தின் கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் இரவு பகலாக வழிபாடுகள் நடைபெறும். வரும் 2 -ம் தேதி மாலை சிலுவைபாதை நிகழ்ச்சிகள் நடைபெறும்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

7 -ம் தேதி திருத்தல கலையரங்கத்தில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். 8 -ம் தேதி வீண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு அன்று காலை 8 மணிக்கு ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்புக் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். அன்றிரவு 8 மணிக்குப் பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ணம்பூசிப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அலங்கார மின் விளக்குகளால் பேராலயம் ஜொலிக்கிறது. வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி

பெருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 20 லட்சம் பக்தர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகளைப் பேராலய நிர்வாகம் மற்றும் வேளாங்கண்ணிப் பேரூராட்சி, காவல்துறையினர் இணைந்து செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கு பக்தர்கள் சிரமம் இன்றி வந்து செல்ல அதிக அளவிலான ரயில்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல் இரவுபகலாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் குடந்தை கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேளாங்கண்ணியில் 3 தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிகக் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேராலயத் திருவிழா பாதுகாப்புப் பணியில் நாகப்பட்டினம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த சுமார் 1,800 காவலர்களும், 200 ஊர்க்காவல்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 27 உயர் கண்காணிப்பு கோபுரம், 4 ஆளில்லா விமானம் ( Drone Camera) 760 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.