Published:Updated:

ஆறு மனமே ஆறு-34

மாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
மாதா அமிர்தானந்தமயி

மாதா அமிர்தானந்தமயி அருளும் நம்பிக்கைத் தொடர் தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

சீடன் என்பவன் சிற்பியால் செதுக்கப்படும் கல்லைப் போன்று இருக்கவேண்டும். சிற்பம் செதுக்கப்படும் பாறை சிற்பியிடம் தன்னைப் பரிபூரணமாக ஒப்படைத்துவிடுகிறது. `ஏன் இந்த வடிவில் என்னைச் செதுக்குகிறாய்' என்றோ, `உன்னுடைய உளிக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்' என்றோ கேட்பதில்லை. விளைவு, சிற்பியின் கைவண்ணத்தில் அழகுச் சிற்பம் உருவாகிறது.

ஆறு மனமே ஆறு-34

ப்படித்தான் சீடனும் குருவி டம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிடவேண்டும். குரு என்பவர், சீடர்களுக்கேற்ப தன்னுடைய நடைமுறைகளை ஏற்படுத்திக்கொள்வார். சில சீடர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வார்கள்; சிலர் ஏற்காமலும் போகக்கூடும். ஆனால், சீடர்கள் குருவின் அந்த முயற்சிகளை ஏற்று, தன்னை தயார் படுத்திக்கொள்வதே உத்தமம்!

சமர்ப்பணமும் நிபந்தனைகளும்!

னித மனதில் அகங்காரம் கூடாது. சீடர்களுக்கு அந்தக் குணம் கொஞ்சமும் இருத்தல் கூடாது. ஓர் உண்மை நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒருமுறை, பஜனை நேரத்தில் பக்தர் ஒருவர் `இங்கே பாடப்படும் அற்புதமான பாடல்களை எழுது வது யார்?' எனக் கேட்டார்.

`பக்தர்கள், பிரம்மசாரிகள், பிரம்மசாரிணிகள், துறவிகள் என பலரும் எழுதுகின்றனர்' என்று கூறிய நான், அருகில் இருந்த பிரம்மசாரியைக் காட்டி, `இவனும் அழகான பாடல்களை இயற்றியிருக் கிறான்' என்றேன்.

நான் அப்படிக் கூறியது அந்த பிரம்மசாரிக்கான பாராட்டு என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருக்க லாம். ஆனால், அதுவரை அவன் இயற்றிய பாடல்களைப் பஜனை வேளையில் பாடியது இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது. அதற்கான காரணம் அவனுக்கு மட்டும் தெரியும்!

ஆம், அவன் பாடல்கள் மற்றவர் களின் பாடலைக் காட்டிலும் நன்றாக இருக்கலாம். ஆனால், அவன் அகங்காரத்தின் உச்சியில் இருந்தான். `என் பாடல்கள் மற்றவரின் பாடல்களுக்குக் குறைந்தவை அல்ல. ஆனாலும் என் பாடல்களை ஏன் பாடுவது இல்லை' என்றெல்லாம் அவன் வாதம் செய்தது உண்டு. அவனுக்கு நான் அளித்த பதில் என்ன தெரியுமா?

`சமர்ப்பணமாகிவிட்ட பொருளுக்கு ஒருபோதும் சொந்தம் கொண்டாடக் கூடாது. சமர்ப்பணத்தில் நிபந்தனைகள் இருந்தால், அது எப்படி முழுமையான சமர்ப்பணமாகும்?' என்றேன்.

நான் சொன்னது சரிதானே?

அவன் மனது மேலும் பக்குவப்பட வேண்டும்; மற்றவர்களை அவன் தாழ்வாக நினைக்கக்கூடாது; குருவை மதிக்கவேண்டும் என்பதற்காகவே சில கடினமான சோதனைகளை சுவீகரிக்க வேண்டியாதாகிவிட்டது.

மெள்ள மெள்ள அவனும் தவறை உணர்ந்து திருந்தினான். பின்னர் அவன் இயற்றிய பாடல்களையும் பஜனையின் போது பாடினோம்.

ஆறு மனமே ஆறு-34

`ஜகமே குரு - குருவே ஜகம்'

மக்குள் அந்தர்யாமியாக இருக்கும் குருவை அடையாளம் காட்டவே நமக்குப் புற உலக குருவின் வழிகாட்டல் அவசியமாகிறது. பொருந்தாத எண்ணங் களையும், ஒழுக்கக்கேடுகளையும் களைந்து, தெளிவாக பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போன்ற ஆத்மாவை உருவாக்குவதே, புற உலகக் குருவின் பணியாகும்.

ஆனால் அகங்காரம் எனும் குணம், நமக்குள் இருக்கும் குருவை நம்மிடமிருந்து மறைத்துவிடுகிறது! `இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் எனக்குக் குருவாகிறது. சிறு அலகினால் தன் கூட்டை நேர்த்தியாக கட்டும் குருவியும் எனக்கு குருவாகிறது' என்றார் ஒரு பரமாத்மா. அது உண்மைதான் மக்களே... ஜகமே நமக்குக் குருவாகிறது!

மரங்களும் தாவர ஜன்மங்களும் நிறைந்த பாதையில் செல்கிறோம். வழியில் கிடக்கும் முள் நம் பாதங்கங்களைப் பதம் பார்க்கும். அந்த முள் நமக்கு அளிக்கும் பாடம்... நாம் மேற்கொண்டு கவனமாக, அதுபோன்ற முட்களைத் தவிர்த்துப் பயணிக்க வேண்டும் என்பதே. ஆம், அந்த முள்ளும் நமக்கு குருதானே?

ஒரு வகையில், நம் உடலையே நாம் குருவாகக் காண வேண்டும். எப்படி என்கிறீர்களா? உடல் என்பது நிலையானதல்ல. என்றாவது ஒரு நாள் எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும். இதுகுறித்த எண்ணம் `உடல் நிலையற்றது; ஆத்மாவே சாஸ்வதம்' என்பதை நமக்கு உணர்த்திப் போதிக்கும்.

இங்ஙனம், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நமக்கு வழிகாட்டுவதால், அவற்றின் மீது நமக்கு மதிப்பு ஏற்படுகிறது. இந்த உணர்வு அவற்றை நமக்குக் குருவாக அடையாளம் காட்டும். ஆகவே ஜகமே குரு என்பது சரிதான்!

குருவின் உபதேசங்கள் நமக்குள் ஆழமாக நிலைகொள்ளும்போது, குருவின் ஆத்ம சைதன்யம் சிருஷ்டி முழுவதும் பரவுகிறது. அதன் மூலம் நாம் பக்குவமும், ஞானமும் பெறுகிறோம். அதன்பிறகு நம்முடைய வாழ்க்கை தடையில்லா பயணமாக அமைந்துவிடும்.

எனவே, நம்முடைய வாழ்க்கை சத்குருவோடு இணைந்து பயணிக்க வேண்டும். அத்தகைய பயணம் நம்மை நல்வழிப்படுத்திச் செல்லட்டும் மக்களே! குருவே ஜகம் – ஜகமே குரு!

-மலரும்...

ஆறு மனமே ஆறு-34

தேவியின் சைதன்யம்!

ரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுதாமணியை இனி அம்மா என்று அழைக்க வேண்டும் என சங்கல்பம் மேற்கொண்டனர். அதன் பிறகு எத்திசை நோக்கி திரும்பினாலும் அம்மா... அம்மா... என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியது.

இத்தகைய காலகட்டத்தில், அம்மாவிடம் சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டன. தேவியின் தரிசனம் பெற்ற பின்னர், தியானம் - பஜனை ஆகியவற்றில் ஈடுபட்டுத் தனிமையில் இருந்து வந்தார். உடன்பிறந்தவர்களின் நிந்தனையைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தினார்.

அம்மாவின் திருமுகத்தில் தெளிவும் உறுதியும் தெரிந்தன. பக்தர்கள் - மக்களிடம் கலந்து பேசுவதிலும், ஆன்மிக வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டினார். அவரின் ஆன்மிக வழிகாட்டலின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, பக்தர்கள் கூட்டமும் அதிகமானது. இதுவே ஆன்மிக சமஸ்தானத்தின் தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியது!

`சொத்து, சுகம், சொந்தம், பந்தம், இளமை, முதுமை ஆகியவற்றைக் கண்டு பெருமை கொள்ள வேண்டாம். நொடிப்பொழுதில் அவை உன்னிடமிருந்து பறித்துச் செல்லப்படும். நம்மைச் சுற்றியிருக்கும் மாயையை விட்டு அகன்று, சர்வ வல்லமை படைத்த இறைவனை அடைவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்' எனும் ஆதிசங்கரரின் வாக்கு அவரை ஈர்த்தது. இறையை அடைவது எப்படி என்ற விசாரம் ஏற்பட்டது. தேவியின் சைதன்யமே பரமாத்மாவின் வெவ்வேறு நிலை என்பதை நிரூபிக்கும் செயல்களில் ஈடுபட்டார் அம்மா. அவரின் விளக்கத்தைக் கேளுங்கள்:

`நெடிதுயர்ந்த உருவம், அடர்ந்த கருங்குழல், கருநீல வண்ண மேனி, சிவந்த விழிகள், நீளமான கோரைப் பற்கள் கொண்ட தேவியின் வடிவைக் கண்டேன்.

என்னைக் கொல்ல வருகிறாளோ என்று எண்ணி, என்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினேன். ஆனால், அவள் என்னுள்ளிருந்து தோன்றுவதை உணர்ந்தேன். சட்டென்று பார்த் தால் என் சிரசில் கிரீடமும், கையில் வீணையும் இருப்பதை உணர்ந்தேன். `அதெப்படி நான் தேவி யாக முடியும்?' என்றும் எண்ணினேன். இது தேவி யின் தந்திரமா என்ற எண்ணமும் எழுந்தது?

தேவியை மட்டுமல்ல, சிவன், பிள்ளையார் என எந்த வடிவில் கடவுளைத் தியானித்தாலும் அந்த வடிவத்தை என்னால் எடுக்க முடிந்தது. அப்போது எனக்குள் ஒரு குரல்... “அவர்கள் அனைவரும் உன்னுள் இருக்கின்றனர். அவர்கள் வேறு நீ வேறு அல்ல. அனைவரும் உன்னுடன் கலந்து பல காலம் ஆகிவிட்டது. அப்படியிருக்க, நீ ஏன் அவர்களைப் பிரத்யேகமாக அழைக்க வேண்டும்' என்று ஒலித்தது.

அன்றிலிருந்து தெய்வ வடிவங்களை தியானிப்பதை விட்டு, `ஓம்' எனும் பிரணவத்தை உச்சரிப்பதில், மனம் மூழ்கியது. தியானம் இன்னமும் தொடர்கிறது!'