திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

ஆறு மனமே ஆறு - 35

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

நம்பிக்கைத் தொடர் - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

அன்பும் - அரவணைப்பும்

நிசப்தமான தரிசன அரங்கம். வரிசையில் பக்தர்கள். சிலரின் முகத்தில் பொங்கும் சிரிப்பலை; வேறு சிலரின் முகத்திலோ துக்கத்தின் சாயல். குழந்தைகளோ நடப்பது ஒன்றும் புரியாவிட்டாலும் மகிழ்ச்சி பொங்க வளைய வருவார்கள்.

ஆறு மனமே ஆறு - 35

ரு சிறு குழந்தையை அணைத்து ஆசீர்வதிக்கும்போது, ஏதோ பல யுகங்கள் பார்த்துப் பழகியது போல அந்தக் குழந்தை தன்னுடைய பிஞ்சுக் கரங்களால் அம்மாவின் கன்னங்களை வருடி விளையாடும் பாருங்கள்... அப்போது ஏற்படும் திவ்யத்துவம்... அதனை அனுபவிப்பவருக்குத்தான் தெரியும்! அதனால்தான் சொல்கிறேன் செல்லங்களே... அன்பின் அடையாளம்தான் அரவணைப்பு. அதற்கு ஈடு ஏதும் இல்லை. உலகெங்கும் இதே நிலைதான் என்பதை உணருங்கள்.

அரவணைப்பது ஏன்?

அனைவரும் ஆறுதல் தேடி என்னிடம் வரும்போது, அவர்களை அரவணைத்து ஆறுதல் அளித்தேன். இன்னமும் அப்படித்தான் தொடர்கிறோம். அன்பும் ஆன்மிகமும் சங்கமிக்கும் அரவணைப்பாகவே இருந்தாலும், தவறான கண்ணோட்டத்தில் கண்டால், ஒரு சாதாரண மனிதனுக்கு அது விகல்பமாகவே தோன்றுகிறது. அவன் பெண் என்பவளைப் போகப் பொருளாகவே பார்த்துப் பழகிவிட்டதால் வந்த வினை இது. மனிதனின் இத்தகைய குணத்தைப் பற்றி பலமுறை உங்களுக்குப் புரியவைத்திருக்கிறேன்.

இப்படியானவர்களின் இந்த இயல்பால், எண்ணத்தால் பாதிக்கப்படுவது சாதாரணப் பெண்கள் மட்டுமல்ல... அனைவராலும் `அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் நானும்கூட ஆரம்ப காலத்தில் அத்தகைய இன்னல்களை அனுபவித்திருக்கிறேன் என்பதே உண்மை.

ஆறு மனமே ஆறு - 35

அப்பப்பா... அரவணைத்து ஆசி கூறுவதற்கு எவ்வளவு எதிர்ப்புகள்? ஒரு பெண் ஏதோ உலக மகா அசிங்கத்தைச் செய்வது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத் தினார்கள். `ஓர் இளம்பெண் எப்படி அனைவரையும் கட்டிப்பிடிக்கலாம்’ என்று கொச்சையாக விமர்சித்தார்கள்!

துயர் துடைக்க ஆண் - பெண் வேறுபாடு எதற்கு? நிறைய அவமானங்களைச் சந்தித்து, அதன் பிறகு `அம்மா' என்று அழைக்கப்படும் இந்த நிலைக்கு நான் வருவதற்கு, கிருஷ்ணன் மற்றும் தேவிகாளியின் ஆசிகளே காரணம்.

வேற்று மனிதர்கள் என் நிலையைத் தவறாக விமர்சித்ததில் ஆச்சர்யம் இல்லை; தந்தை சுகுணானந்தரும் தாயாரும் குடும்பத்தினர் அனைவரும்கூட பேசிய பேச்சுக்கு அளவே இல்லை மக்களே! அதேநேரம் என் லட்சியம் வேறாக இருந்ததால், அவை அனைத்தையும் புறந்தள்ளி முன்னேறிட, எனது ஆன்மிகத் தவம் உத்வேகத்தை அளித்தது.

உற்சாகம், உயர்வு, மாற்றம்...

ருமுறை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பயணத்தின்போது, ‘அணைத்து ஆசி வழங்குவது ஏன்?’ என பலரும் என்னிடம் கேட்டனர்.

“என்னுடைய அந்த ஆசி அனைவருக்கும் உற்சாகம், உயர்வு மற்றும் மாற்றத்தை அளிக்கிறது. உண்மையான அன்பு எங்கிருக்கிறதோ, அங்கு முடியாதது என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கொருவர் அன்புடன் அணைத்து ஆறுதல் சொல்லிக்கொண்டால், இந்தப் பூமியே சொர்க்கலோகம் ஆகிவிடும்!” என்று பதில் சொன்னேன்.

ஆம்! அன்பு என்பது பனியைப் போன்றது. பனி உருகத் தொடங்கினால் வெள்ளம் உண்டாகும்; அதன் தாக்கம் அதிகமாகும்; உலகெங்கும் பரவும் என்பதுதான் உண்மை.

சிலருக்கு அன்பின் அனுபவம் ஒரு சிறிய வட்டத்துக்குள் அமைவதால், அதன் தாக்கம் மிகக் குறைவாகவே தெரியும். அன்பின் ஆழம் அதிகமாக அதிகமாக அதன் சக்தியும் அளவும் விரிவடைந்துகொண்டே போகும். இது ஒன்றே ஆனந்தமயமான வாழ்க்கை அமைய உதவும்.

ஆறு மனமே ஆறு - 35

அரவணைப்பின் ரகசியம்

ரவணைப்பதன் உண்மையான பொருள் அன்பு மட்டுமே; உண்மையான, பவித்ரமான அன்பைத் தவிர வேறொன்றும் இல்லை. இவ்வுலகின் அனைத்து படைப்புகளையும் அப்படித்தான் காண வேண்டும்; நான் அப்படியே காண்கிறேன். இன்று மட்டுமல்ல என்றைக்குமே என்னிடம் அளிப்பதற்கு அன்பு மட்டுமே அளவுக்கதிகமாக உள்ளது என நம்புகிறேன்.

இன்றைய அவசர உலகில், அன்பு காட்டு வதிலும்கூட பெரும்பாலும் ஒருவித இயந்திரத் தன்மையே தென்படுகிறது எனலாம். அன்பானது இல்லத்தில் தொடங்குகிறது என்று சொல்வோம். ஆனால், ஒரே வீட்டில் வாழும் எத்தனை குடும்பங்கள் அன்பு காட்டி வாழ்கின்றன? பெரும்பாலும் தனித் தனித் தீவுகளாக தொடர்பற்று நிற்பதையே காண்கிறோம்.

உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கிலான சந்திப்புகள் நிகழலாம். அவையாவும் சிலர் அல்லது பலர் பங்கேற்கும் ஒரு நிகழ்வாக இருக்குமே தவிர, இதயங்கள் சந்திப்பதாக அமைவது இல்லை. இரண்டு இதயங்கள் சந்திக்கும்போது, ஒரு நல்ல உணர்வு ஏற்படுகிறது. மகிழ்ச்சி பரவுகிறது!

இன்னொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். அன்பும் கருணையும் மிகுந்த இதயத்தை நாம் இன்னும் தொலைத்து விடவில்லை; தற்காலிகமாக மறந்துவிட்டோம் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்! இது எப்படி இருக்கிறது என்றால்... மறந்து விட்ட ஒரு பாடலின் முதல் சொல் அல்லது வரியை வேறொருவர் பாடக் கேட்கும் போது, நமக்கு முழுப் பாடலும் நினைவுக்கு வந்துவிடும். அப்படித்தான் இதுவும்!

கண்ணாடியில் உள்ள தூசியைத் துடைத்து விட்டால் பிம்பம் தெளிவாகத் தெரிவது போன்று, நினைவில் படிந்துள்ள தூசியைத் துடைத்துவிட்டுப் பார்த்தால், அன்பின் வெளிப்பாடு தெளிவாகத் தெரியும் என் செல்லங்களே!

இன்றைய உலகில் உண்மையான அன்புக்குத் தட்டுப்பாடு அதிகம் என்பது பொய்யல்ல. அதற்கு முக்கியக் காரணம் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்தான்.

ஒற்றைச் சொல் என்றால் `கருணை'; இரண்டு வார்த்தை களில் என்றால் `கருணையும் அன்பும்’; மூன்று வார்த்தைகளில் சொல்வதானால் ‘அன்பு, கருணை, பொறுமை'. இப்படி ஒன்றோடு ஒன்றை இணைத்துப் பார்த்தால், அன்பின் வெளிப்பாடு எவ்வளவு பவித்திரமானது என விளங்கும்.

ஆம்! அன்பின் அடையாளமான அரவணைப்பு என்பது, தெள்ளத் தெளிவான சுத்தமான ஒரு நீரோடை போன்றது. அன்பெனும் உணர்வைக் கைவிட வேண்டாம். அது ஒரு ஏணியைப் போன்றது. ஏறும்போது ஒவ்வொறு படியையும் தவறாமல் ஏறிச்செல்ல வேண்டும்... அவ்வளவுதான்!

தூய்மையான அன்பு எல்லா திசைகளிலும் பரவி நிற்கும்.அதுவே நமக்கு உற்சாகம், உயர்வு, மாற்றம் ஆகியவற்றைத் தரும். அம்மாவின் அரவணைப்பில், இன்றளவும் கோடான கோடி பக்தர்கள் ஆறுதல் அடைகின்றனர் என் செல்லங்களே, அதுவே அன்பின் வெகுமதியாகும்!

- மலரும்..

சோதனைகள்!

சுதாமணியாக இருந்தவரை, அவருடைய தேவி பாவத்துக்கு பிறகு பக்தர்கள் `அம்மா' என்று அழைக்கத் தொடங்கினர். எனினும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவர் இன்னமும் சுதாமணியாகவே தோன்றினார்.

அவர்களுக்கு, அம்மாவின் உன்னதமான ஆன்மிக நிலையை உணர்ந்துகொள்ளும் சூட்சுமம் இருந்ததில்லை என்றே சொல்லவேண்டும். அதிலும் அம்மாவின் சகோதரர் சுபகனுக்கு `சுதாமணி குடும்பத்தின் பெயரைக் கெடுக்கிறார்' என்ற வெறி அதிகம் உண்டு.

ஒரு நாள், சுபகனும் அவருடைய சொந்தங்களும் அம்மாவை வீட்டுக்கு அழைத்தனர். வீட்டுக்கு வந்ததும் அவரை ஓர் அறையில் வைத்து பூட்டி விட்டனர். ஒருவர் கத்தியைக் காட்டி,“ உன்னால் இந்த குடும்பத்துக்கு அவமானமும் அவச்சொல்லுமே ஏற்படுகின்றன. உனது ஆட்டம் பாட்டம் எல்லாவற்றையும் நிறுத்தி விடுவதாக வாக்களித்தால், நாங்கள் உன்னை விட்டு விடுகிறோம். இல்லையெனில், நீ உயிருடன் இருப்பதைவிட இறப்பதே மேல் என்ற முடிவை எடுத்துவிடுவோம் என்பதை மனதில் கொள்' என்று மிரட்டினார்.

அதற்கு அம்மா அமைதியாகச் சொன்ன பதில் என்ன தெரியுமா?