Published:Updated:

ஆறு மனமே ஆறு!

ஆறு  மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறு மனமே ஆறு

நம்பிக்கைத் தொடர்

ணவன், மனைவி என்ற உறவைப் பற்றிய நிறைய விஷயங் களை இதுவரையிலும் பார்த்துவந்தோம். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், அவர்களின் மன நிலை, நம் கலாசாரம் என்ன சொல்கிறது, அதை நாம் பின்பற்றுகிறோமா? இல்லையென்றால், அதைச் செய்ய விடாமல் தடுக்கும் காரணங்கள் எவை; எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் விரிவாகப் பார்த்தோம்.

இனி, குடும்பம் குறித்து பார்க்கப்போகிறோம்.

கணவன் - மனைவி இருவரின் வாழ்க்கை என்பது, உறவுகளின் பெருக்கத்துக்கான வழி என்பது சரிதானே மக்களே! மணப் பந்தத்தின் மூலம் இருவரின் பக்கத்திலிருந்தும் பெற்றோர், உறவினர் என்ற வகையில் புதிது புதிகாக உறவுகள் ஏற்படும். காலப் போக்கில் உறவுகள் பெருகி, பல கிளைக் குடும்பங்களாகி, விழுதுகள் நிறைந்த ஆலமரமாகத் தழைத்தோங்கும். அதுவே ஒரு சமுதாயமாக உருவாகும். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் அல்ல.

`தான் ஆடாவிட்டா லும் தசையாடும்' என்பார்கள். அவ்விதமாக ஒருவருக்கு ஒன்றென்றால் மற்றவர் சும்மா இருக்கமாட்டார்கள். ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தன குடும்பப் பந்தங்கள். சில காலம் முன்பு வரையிலும் இந்த நிலை உண்டு. இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப் பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது, நம் முன்னோர்களின் தயவால்தான். இதைத்தான் கூட்டுக் குடும்பம் என்கிறோம்.

கூட்டுக்குடும்பம்

குடும்பம் ஒன்றாக இருந்தால், ஒன்றும் இல்லாதவன் கூட உயர்ந்த நிலையை அடைவான் என்று சொல் வார்கள். சரி, அந்தக் காலத்தில்... ஏன் சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் கூட குடும்பங்கள் ஒன்றாகவே இருந்தன. ஒரே வீட்டில் அம்மா - அப்பா, பிள்ளைகள், அவர்களின் வாரிசுகள் என்று வசித்து, ஒன்றாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, ஒன்றாகச் சமைத்து உண்டு வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறோம்.

அவர்கள் சந்தோஷத்தின் எல்லையைத் தொட்டனர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வீட்டில் ஒருவர் கலங்கி நிற்கும்போது தோள்கொடுத்து, பிள்ளைகள் வளர்ப்பில் அனைவரும் பங்கெடுத்து, உற்றார்-உறவினர் வீட்டு விசேஷ வைபவங்களில் ஒன்றிணைந்து நடத்திவைத்து... என ஒட்டுமொத்தமாக வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினர். கருத்து வேறுபாடுகள் அப்போதும் இருந்தன. ஆனால் அவை யாருடைய கண்ணையும் கருத்தையும் மறைத்ததில்லை. இப்போதும் உறவுகள் விரிவடைவது என்பது தொடர்கின்றன என்றாலும், முன்போல மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை இல்லையே என்று புலம்பும் மக்கள்தான் அதிகம்.

ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்பது எளிது! தாக்கங் கள் புரிந்தாலும், தவறுகள் திருத்தப்படுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். கூட்டுக் குடும்பத்தின் நன்மையைப் பற்றி அறிந்திருந்தாலும் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. கவலைப் பட்டு மட்டும் என்னவாகப் போகிறது?

கூட்டுக் குடும்பத்தில் பெண்கள்

குனிந்த தலை நிமிராமல், தலைவன் பின் சென்று, குடும்பத்தின் கஷ்டநஷ்டங்களைத் தோள்களில் சுமந்து, குடும்பத்துக்காக வாழ்வை அர்ப்பணித் தவர்கள் பெண்கள். அதேநேரம், ஆண்கள் அவர்களுக்கு எதிராகவே இருந்தனர்; அவர்களை அடக்கி ஆண்டனர் என்பதெல்லாம், காலங்காலமாக உள்ள மனக்குறைகளே.

இந்த நிலையைச் சொல்லும் அதே சமூகம், `பெண்களே பெண் ணின் எதிரி' என்ற பெண்களின் மறுபக்கத்தையும் எடுத்துரைக்கிறது. அதில் உண்மை இருப்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். பெண் என்றாலே புரியாத புதிர். அதனால் தான் இத்தகைய முரண்பாடுகள் என்று சொல்பவர்களும் உண்டு.

அதாவது, பெண் உறவு பற்றிப் பேசும்போது, குடும்பத்தின் மூத்த பெண்களான மாமியார், நாத்தனார் ஆகிய பெண் உறவினர்களால் பல பிரச்னைகள் இருந்தன என்பது என்னவோ உண்மைதான். ஆனா லும் அது கடந்த காலமா கவே இருக்கட்டும். நாம் மேற்கொண்டு தொடர்வோம்!

ஆறு மனமே ஆறு!

எல்லாம் தலைகீழ்...

பல விஷயங்களில் எல்லாமே தலை கீழாக மாறி வரு கின்றன என்பதை நீங்கள் ஒப்புக் கொள் கிறீர்களா?

முன்பிருந்தது போல் அல்லாமல் கல்வி, உத்தியோகம், சமமான நிதிப் பங்களிப்பு ஆகிய வற்றோடு, தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு எதிரான கட்டுப் பாடுகள் அகன்று வருவதால், பெண்களின் நடைமுறையிலும், மனத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. குடும்பம் என்பதன் வரையறை முற்றிலுமாக மாறிவிட்டது. குடும்பம் என்பது அவரவர் சௌகர்யப்படி அமைவது நடைமுறையாகிவிட்டது. அமைவதெல்லாம் நல்லதாகவும் இருக்கலாம்; எதிர் மறையான பாதையில் பயணிப்பதாகவும் அமையலாம்!

இப்போதைய நிலை...

இப்போதுள்ள கணவன் - மனைவி உறவில், குடும்பம் என்றால் என்ன என்பதைப் பற்றி நிறைய விவாதங்கள் உண்டு. கூட்டுக் குடும்பம் தேவையா என்ற கேள்வியும் உண்டு. மணம் முடிந்து வந்ததுமே பெண்களின் சுயநலம், சகிப்புத்தன்மை இல்லாமை, அதிகாரப் போக்கு அனைத் தும் ஒன்று சேர்ந்து, அவர்கள் பெற்றோரிடமிருந்து பிள்ளையைப் பிரித்துக்கொண்டு சென்று விடுவதாகச் சொல்கிறார்கள்.

சம்பளம் இல்லாத வேலைக்காரியைப் போல், கணவ னின் பெற்றோரை நடத்துகின்றனர் என்ற மனக்குறையும் பலருக்கு உண்டு. அதேநேரம், புகுந்த வீட்டுக்கு வரும் பெண்களைக் கேட்டால்... `சின்ன சின்ன விஷயத்திலும் அவர்கள் ஒத்துப்போவதில்லை. எங்களுக்கு உதவியாக இருப்பதற்கும் மனமில்லை. எங்களுடைய ஆசை, அபிலாஷைகளைப் புரிந்துகொள்வதில்லை, எல்லாமே ஒருவழிப் பாதையாகின்றன.ஆகையால்தான் மனக் கசப்பு, பிரச்னைகள் எல்லாமே!' என்பார்கள்.

சரி... இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

- மனம் மலரும்...

ஆறு மனமே ஆறு!

அம்மாவின் அற்புதங்கள்…

டற்கரையோரம் பரந்துவிரிந்த வெளியாக இருந்ததால், மக்கள் திரளாக வந்துசெல்ல வசதியாக இருந்தது. கிருஷ்ணபாவ தரிசனங்கள் தொடர்ந்தன.

வந்தவரெல்லாம் தங்களின் துயரத்துக்குத் தீர்வு கிடைத்த மகிழ்ச்சியுடன் சென்றனர். மீண்டும் மீண்டும் தரிசனத்துக்கு வந்தனர்.

அவர்களுடைய கிராமம் தொழில்ரீதியாக மீன்பிடிக் கிராமமாக இருந்தது. சில நேரங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். இயற்கை ஒத்துழைக்கவில்லையென்றால், தொழில் மிகவும் மந்தமாகிவிடும். செய்வதறியாதபடியான சூழல் நிலவும்.

பல தருணங்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வெறும்கையுடன் திரும்பும் நிலையும் ஏற்படும். அதனால் பல நாள்கள் மக்கள் வருவாய் இன்றிப் பட்டினி கிடக்கவேண்டியதும் வரும்.

அப்படியான ஒரு சூழலில், மீனவர்கள் அனைவரும் சேர்ந்து வந்து, சுதாமணியிடம் நிலைமையைச் சொல்லி வருந்தினர்.

ஆறுதல் சொன்ன சுதாமணி, அவர்களிடம் துளசி இலைகளைக் கொடுத்தார்.

“நீங்கள் இந்த இலைகளை எடுத்துச் செல்லுங் கள். மீன் பிடிக்கச் செல்லுமுன் இவற்றைக் கடல் மாதாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டு, கடலுக் குள் செல்லுங்கள்” என்றார்.

அவரின் வாக்கைப் பலரும் நம்பினர். எனினும் ஒருசிலருக்குள் அவநம்பிக்கை இருக்கவே செய்தது. `இந்தத் துளசி எப்படி நம் பிரச்னையைத் தீர்த்து வைக்கப்போகிறது' என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது. அவர்களின் தூண்டுதலினால், சுதாமணியின் சொன்னதை எவரும் செய்யவில்லை.

மீண்டும் ஒருமுறை சுதாமணியை நாடி வந்தனர். அப்போது சுதாமணி, “நான் சொன்னபடி செய்யாமல், மீண்டும் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்... என்னைச் சோதிப்பதற்காகவா?” என்று கேட்டார். அனைவரும் தலைகுனிந்து நின்றனர்.

சுற்றிலும் நின்றிருந்த அனைவரையும் ஒருமுறைப் பார்த்துவிட்டு, தான் அமர்ந்திருந்த திண்ணையைவிட்டு இறங்கிய சுதாமணி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.

சுதாமணி, ஆவேசமாகக் கடலை நோக்கி நடந்து செல்வதைப் பார்த்த பக்தர்கள் அனைவரும் திகைத்தனர். செய்வதறியாது பதற்றத்துடன் அவரைப் பின் தொடர்ந் தனர். தொடர்ந்து என்ன நிகழ்ந்தது தெரியுமா?

ஶ்ரீரமணர்
ஶ்ரீரமணர்

`எல்லோருமே விக்கிரக வழிபாடு செய்பவர்களே!

'ஒருமுறை ஶ்ரீரமணரை தரிசிக்க வந்த ஒருவர், ``ஸ்வாமி! விக்கிரக ஆராதனை செய்வதை மூடநம்பிக்கை என்று சிலர் கேலி செய்கிறார்கள். என்ன செய்வது?'' என்று வருத்தத்துடன் கேட்டார்.

அதற்கு ஶ்ரீரமணர், ``நீங்கள் அவர்களிடம் `விக்கிரக ஆராதனையில் என்னை மிஞ்சும் ஆசாமிகள் நீங்கள்' என்று எதிர்வாதம் செய்வதுதானே?

தினமும் தங்கள் உடலைக் கழுவி, அபிஷேகம் செய்து (குளித்து), நிவேதனம் (உணவு) செய்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து அதை அவர்கள் ஆராதிக்கவில்லையா?

உடலே எல்லாவற்றையும் விட பெரிய விக்கிரகம் அல்லவா? அப்படிப் பார்த்தால்... யார்தான் விக்கிரக வழிபாடு செய்யாதவர்?'' என்று கேட்டார்.

அன்பர், ஶ்ரீரமணரின் எளிய விளக்கத்தால் மகிழ்ந்தார்.

- ஆர். பிரகாசம், கோவிலூர்