Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 21

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு! - 21

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

-  தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

கூட்டுக் குடும்பத்தின் இப்போதையை நிலை என்ன என்பதைப் பற்றிப் பார்த்தோம். புகுந்த வீட்டுக்கு வரும் பெண்களைக் கேட்டால்...

`சின்ன சின்ன விஷயத்திலும் அவர்கள் ஒத்துப்போவதில்லை. எங்களுக்கு உதவியாக இருப்பதற்கும் மனமில்லை. எங்களின் ஆசை, அபிலாஷைகளைப் புரிந்துகொள்வது இல்லை, எல்லாமே ஒருவழிப் பாதையாகின்றன.ஆகையால்தான் மனக் கசப்பு, பிரச்னைகள் எல்லாமே!' என்றெல்லாம் அங்கலாய்ப்பார்கள்.


சரி... இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

கூட்டுக்குள் குடும்பமா... நியூக்ளியர் குடும்பமா?

பெற்றோரை விட்டுத் தனியாகக் கணவன் மனைவி மட்டுமே வாழ்வதைத் தனிக் குடித்தனம் என்பார்கள். முன்பெல்லாம் இத்தகைய தனிக்குடித்தனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. இப்போது அங்கிங்கெனாதபடி நீக்கமற பரவியிருக்கும் வாழ்க்கை முறையாகிவிட்டது.

குடும்பத்துப் பெரியவர்கள் பாரமாக இருக்கிறார்கள், அவர்கள் இருந்தால் எங்களால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை, நாங்களே குருவிக் கூட்டில் வாழ்கிறோம் அவர்களும் உடனிருந்தால் எப்படி... இப்படியான காரணங்கள் வேறு!

பெரும்பாலும் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் செலவுக்குத் தாராளமாகப் பணம் உள்ளது. ‘தேவைப்பட்டால் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்கிறோம், யார் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை’ என்ற எண்ணத்தோடு, ‘தன் குடும்பம் மட்டும்’ எனும் கூட்டுக்குள் அடைந்து வாழ்வதே வாழ்க்கையென முடிவு செய்துவிட்டார்கள் இன்றைய தலைமுறையினர்.

இப்படிப்பட்ட குடும்பங்களை ‘கூட்டுக்குள் குடும்பம்’ என்றழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும். மெத்த படித்த நீங்கள் அதற்கு ‘ந்யூக்ளியர் குடும்பம்’ எனப் புதுமையாகப் பெயர் இட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டன மக்களே!

ஆறு மனமே ஆறு! - 21

‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதுதான் நமது வாழ்க்கையின் சித்தாந்தம். அதுவே பாரதத்தின் கலாசாரமும்கூட. ஒரு குடும்பம் பல குடும்பங்களாக உருவாகி, அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற எண்ணம், வழிவழியாக நமது கலாசாரத்தின் வாயிலாக மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இதை வரும் தலை முறையினருக்கு எடுத்துச் செல்ல வேண் டியது நம் கடமை. நாம் அதைச் செய்கிறோமா?

வயதானவர்களை மதித்து அவர்களைப் பாதுகாப்பது, பாரதத் தின் குடும்ப வாழ்க்கை முறையின் ஓர் அடையாளம்.

பொதுவாகக் கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகள் என்பதே நியூக்ளியர் குடும்பம். அப்படி வாழ்வதால், கூட்டுக் குடும்பங்களின் பாசம், நேசம், நற்பண்புகள் அனைத்தும் குழந்தைகளுக்குத் தெரியாமல் போகின்றன. இந்த நிலையில் அவர்கள் தடம் மாறிப் போவது இயல்புதானே?

ஆக, கூட்டுக்குடும்பம் நியூக்ளியர் குடும்பம் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகளை, தனிக் குடும்பமாய் வாழ்வதன் குறைநிறைகளைச் சிறு வயதினருக்கும், இளைஞர்களுக்கும் எடுத்துச் சொல்வதால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்!

பெருகிவரும் மக்கள் தொகை, பிக்கல் பிடுங்கல் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை, ‘ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்’ என்கிற எண்ணப் பாடு ஆகியவையே நியூக்ளியர் குடும்பங்கள் பெருக பெரும் காரணங்கள்.

நியூக்ளியர் குடும்பங்கள் வசிக்கும் தீப்பெட்டி அடுக்கு போன்ற குடியிருப்பில் போதுமான வசதிகள் இருப்பதில்லை. பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு வாழச் சென்றுவிடுகின்றனர். பெற்றவர்களும், வயதானவர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்!

இத்தகைய வாழ்க்கைமுறை சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல. சட்டத்தால் மட்டுமே இச்சூழலைத் திருத்த முடியாது. அவரவர், பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

இந்த நிலைக்கு யார் காரணம்?

இந்த நிலைக்கு ஒரு சாராரை மட்டுமே குறை சொல்ல முடியாது! அதாவது, கணவன் - மனைவி இரு தரப்பினரின் பெற்றோர் உறவினர் என்று குறிப்பிட்டவர்களை மட்டுமே குறை சொல்வது அர்த்தமற்றதாகும்.

இன்றைய இளைய தலைமுறையினரில் சிலரின் அகங்கார போக்கு, அதனால் உண்டாகும் வேண்டாத வாக்குவாதம், கோபத்தின் உச்சியில் உதிர்க்கப்படும் சொற்கள், அதன் பின்விளைவாக சகிப்புத் தன்மையை இழப்பது... ஆகியவை நன்மை பயக்கும் உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வதில்லை.

`பணம் சம்பாதிக்கும் குறிக்கோள்தான் இந்த நிலைக்குக் காரணம்' என்பது பெரியவர்களின் வாதம். ஆனால்... “நாங்களும் நன்றாகப் படித்திருக் கிறோம். எங்களுக்கும் நாட்டு நடப்பு தெரியும். எங்களை வாழ்த்தி வழிகாட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒவ்வொரு நாளும் குற்றம் குறை சொல்லி மட்டம் தட்ட வேண்டாமே!” என்பது இளம் தலைமுறையின் வாதம்.

இவை அனைத்துக்கும் மேற்கத்திய கலாசாரமும் ஒரு காரணம் என்று சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்... உலகளவில் பாராட்டப்பட்டு பகிரப்படும் நம் கலாசாரத்தை நம் எந்தளவு பின்பற்றுகிறோம் என யோசித்துப் பாருங்கள்!

நம்மை இத்தனை காலம் வழி நடத்திய நல்லவற்றை மறந்து, நமக்கு உதவாதவற்றைப் பழக்கப்படுத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையும் ஒரு காரணம் மக்களே. அப்படியான வாழ்வை அமைத்துக்கொள்வதில் அக்கறையையும் திறமையையும் காட்டும் அன்பர்கள், அருகில் இருக்கும் நல்ல விஷயங்களை நல்ல முறையில் பயன்படுத்தி, மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பற்றி யோசிப்பது இல்லையே ஏன்?

இனியாவது யோசிப்போமா?

- மனம் மலரும்...

ஆறு மனமே ஆறு! - 21

அம்மாவின் அற்புதங்கள்...

விறுவிறுவென கடலை நோக்கிச் சென்ற சுதாமணி கடலில் இறங்கி ஆனந்த நடனமாடி னார். அவர் காலடி பட்ட நேரமே அந்த அதிசயத்தைக் கண்டனர் கிராம மக்கள்.

அம்மாவின் காலடிப் பட்டதுதான் தாமதம், ஒன்றிரண்டாகத் தலைநீட்டிய மீன்கள், தொடர்ந்து கூட்டம் கூட்டமாக துள்ளிக் குதிக்கத் தொடங்கின. மக்கள் வியந்தனர்.

‘இதென்ன மாயமா மந்திரமா... சற்று முன்பு வரையிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மீன்கள் தென்படவில்லை. இப்போது மட்டும் கூட்டம் கூட்டமாய் மீன்கள் வருவது எப்படி?' என அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். அம்மாவைச் சோதிக்க நினைத்த மீனவர்களும் நடக்கும் அதிசயத்தைக் கண்டு, வாயடைத்து நின்றனர். அம்மாவுக்கு இதுவொன்றும் புதிதல்ல. எவர் வசை பாடினாலும் வாஞ்சையு டன் அரவணைப்பதுதான் அவரின் மனது.அவர், லீலையை முடித்து மௌனமாக நடந்து அரச மரத்தடிக்குத் திரும்பினார். மக்கள் உண்மையான கிருஷ்ண லீலையைக் கண்டு மெய்ம்மறந்தனர்.

அடுத்த நாள் கடலுக்குச் சென்ற அனை வருமே படகு நிறைய மீன்களுடன் கரைக்குத் திரும்பினர். அனைவரும் குடும்பத்துடன் அம்மாவை தரிசித்துத் தங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

போலியான பக்தியும் கூடாது, தெய்விகத் தைச் சந்தேகப்பட்டு சோதிக்க நினைக்கவும் கூடாது. இந்த உண்மையை உணர்த்தவே இப்படியான அற்புதத்தை நடத்திக்காட்டினார் அம்மா. அவரின் உதவிகள் தொடர்ந்தன.

ஆனாலும் அங்கு வசித்த நாத்திகர்கள் சிலர், `சுதாமணியின் சக்தி அந்தக் கிருஷ்ண பாவத்தின்போது மட்டுமே வெளிப்படுகிறது, இது ஏதோ சித்து வேலை' என்பதாக தங்களின் பிரசாரத்தைத் தொடர்ந்தனர்!‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதுதான் நமது வாழ்க்கையின் சித்தாந்தம்.

அதுவே பாரதத்தின் கலாசாரமும்கூட.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism