Published:Updated:

ஆறு மனமே ஆறு! 26 - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

நம்பிக்கைத் தொடர்; தொகுப்பு: எம்.எஸ். நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

குழந்தைகள் மென்மையானவர்கள். மிகக் கவனத்துடனும் அன்புடனும் பராமரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களே வருங்கால சமுதாயத் தின் வலுவான தூண்கள். இன்றைய அவசர உலகில், பொருள் ஈட்டுவதில் கவனம் செலுத்தி வரும் நாம், குழந்தைகள் வளர்ப்பில் மறந்துவிட்ட முக்கியமான விஷயங்கள் இரண்டு உண்டு. ஒன்று புரிதல்... மற்றொன்று ஆன்மிகம்.

ஆறு மனமே ஆறு! 26 - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
Deepak Sethi

மறந்துவிட்ட வழிகள்!

முதலில் ஒரு சிறு கதையைப் பார்ப்போம்.
ஒரு தந்தை, அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு மிகச் சோர்வுடன் வீடு திரும்பினார். அலுவலகத்தில் அடுத்து நடக்க வேண்டியது என்ன, அதை எப்படிச் செய்வது என்ற கவலை அவருக்கு.

அந்த நேரம், அவருடைய வருகைக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்தாள் அவரின் 5 வயது பெண் குழந்தை. தந்தை வந்ததும் ஓடிச் சென்று அவரின் கால்களைக் கட்டிக்கொண்டாள். அவர் வீட்டுக்குள் வந்ததும் குழந்தை ஆர்வத்துடன் கேட்டாள்:

“அப்பா! நீங்கள் ஒரு மணி நேரம் வேலை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?”

“300 ரூபாய்” என்றார் தந்தை.

உடனே, ``எனில், எனக்கு ஒரு இருநூறு ரூபாய் கொடுக்க முடியுமா?’’ எனக் கேட்டாள் அவள்.

மிகவும் களைப்புடன் இருந்த தந்தையோ குழந்தையிடம் ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்கவில்லை; விசாரிக்கவில்லை. மாறாக, “இதுபோல் என்னைத் தொந்தரவு செய்வதை நிறுத்து” என்று கோபத்துடன் சீறிவிட்டு வீட்டிற்குள் வேகமாகச் சென்று விட்டார்.

குழந்தைக்கு அதிர்ச்சி. அழுதுகொண்டே தன் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள். சிறிது நேரத்தில் தந்தை நிதானம் அடைந்தார். தன் செயலுக்காக வெட்கப்பட்டார்.

‘குழந்தையிடம் பொறுமையாகப் பதில் சொல்லியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏன், என்ன என்றாவது கேட்டிருக்கவேண்டும். அப்படிச் செய்யாலம் குழந்தையைத் திட்டிவிட்டோமே... அவளைச் சமாதனம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணியவராக குழந்தையின் அறைக்குச் சென்றார்.

அவர் மெள்ள அவளின் அருகில் சென்று அமர்ந்தார். “தூங்கி விட்டாயா?” எனக் கேட்டார்.

“இல்லை. இன்னும் விழித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று பதில் சொன்னாள் குழந்தை.

“நான் திட்டியது உன்னைக்காயப்படுத்திவிட்டதா? தவறுதான்... என்னை மன்னித்துவிடு. இந்தா நீ கேட்ட 200 ரூபாய்” என்று சொல்லி பணத்தைக் குழந்தையிடம் கொடுத்தார்.

பின்னர், “அதுசரி, இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.

இப்போது மகளின் முகம் பிரகாசமானது. மகிழச்சியுடன் எழுந்து உட்கார்ந்து பணத்தைப் பெற்றுக் கொண்டாள். மேலும், தலையணையின் கீழிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, அப்பா தந்த பணத்துடன் சேர்த்து அவரிடமே கொடுத்தாள்.

“அப்பா இந்தாருங்கள்... 300 ரூபாய். உங்களுடைய ஒரு மணி நேர சம்பளப் பணம். இப்போது நீங்கள் ஒரு மணி நேரம் என்னுடன் விளையாடிப் பேசி மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?” என்று கேட்டாள்.

அதிர்ந்துவிட்டார் அந்தத் தந்தை. தலையில் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்தது போன்ற ஓர் உணர்வு. தந்தை என்ற முறையில் அவருடைய தவறு என்னவென்று தெளிவாகப் புரிந்தது அவருக்கு.

என்னதான் முழு நேரமும் பணி செய்தாலும்... ஒரு நல்ல தகப்பனாக, நண்பனாக, நலன் விரும்பியாக அன்றைய பொழுதை வாழ்ந்து அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருப்பதை இழந்துவிடக்கூடாது என்பதை எவ்வளவு எளிமையாக, தெளிவாக அந்தப் பெண் குழந்தை புரியவைத்து விட்டாள் பார்த்தீர்களா?

மக்களே, அப்படிச் செய்வதால் என்ன பயன் தெரியுமா?

அவர்களுடைய அன்றாட சிரமங்களையும், தேவைகளையும், அடுத்தவர்களால் ஏற்படும் இன்னல்களையும் நம்மிடம் பயமின்றி குழந்தைகள் பகிர்ந்துகொள்வார்கள். அதன் மூலம் நாமும் நல்ல பெற்றோராக, அவர்கள் வழிதவறி நடந்திடாமல் தடுத்து, வாழ்க்கையை நல்வழிப்படுத்த முடியும். சரிதானே மக்களே!

ஆறு மனமே ஆறு! 26 - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
Deepak Sethi

ஆன்மிக நல்வழிப் படுத்துதல்

த்தகைய நல்வழிப்படுத்துதல் எங்கிருந்து தொடங்குகிறது தெரியுமா? ஒரு தாய் தன் கர்ப்பத்தில் குழந்தையைச் சுமக்கும் போதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. எப்படி என்கிறீர்களா?

கர்ப்பக் காலத்தில், தாய் தன் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்.

உடல் ஆரோக்கியம் சரி... அதென்ன மன ஆரோக்கியம்?

ஒரு தாய் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அது எப்படி கிடைக்கும்?

ஆன்மிகச் செயல்களில் ஈடுபடவேண்டும், ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்கவேண்டும், நன்னெறி நூல்களைப் படிக்கவேண்டும். இதனால் ஏற்படும் அமைதியும் புத்துணர்ச்சியும், பிறக்கப்போகும் குழந்தையைச் சென்றடையும். பிற்காலத்தில், குழந்தைகளின் வாழ்க்கையும் நன்றாக அமையும்.

அதுமட்டுமா? பெற்றோர் தர்மவழியில் நடப்பதுடன், விவரம் தெரியத் தொடங்கும் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கலாசாரம் எனும் தர்ம நன்னெறிச் சிந்தனைகளைக் கதைகள் மூலமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும். கதைகளைக் கேட்கும்போதும், படிக்கும்போதும் நன்னெறிகள் அனைத்தும் அவர்களையும் அறியாமல் குழந்தைகளுக்குள் பதிந்துவிடும்.

அந்தக் காலத்தில் வீட்டிலிருந்த பெரியவர்கள் நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்து வழிநடத்தினார்கள். இன்றும் அது சாத்தியம்தான். அதுவே வாழ்க்கையின் அடிப்படையாகும். நம் கலாசாரம் மற்றும் ஆன்மிகமே, குழந்தைகளுக்குப் பெற்றோர் அளிக்கக்கூடிய அழியா செல்வமாகும்.

ஆறு மனமே ஆறு! 26 - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
triloks

இன்று பெரும்பாலும் தாதியர் கவனிப்பில் குழந்தைகள் வளரும் சூழல் இருப்பதால், குழந்தைகள் வளரும் விதம் மாற்றுவழியில் பயணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, ஆன்மிக நன்னெறிப் பாதை ஆகியவை மட்டுமே குழந்தைகளை நல்லவர்களாக, நல்ல மனிதர்களாக உருவாக்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை மக்களே!

ஆகவே குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருங்கள்!

- மலரும்...என்னதான் முழு நேரமும் பணி செய்தாலும்... முழு நேரமும் பணி செய்தாலும்...

முழு நேரமும் பணி செய்தாலும்...

முழு நேரமும் பணி செய்தாலும்...பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, ஆன்மிக நன்னெறிப் பாதை ஆகியவை மட்டுமே குழந்தைகளை நல்லவர்களாக, நல்ல மனிதர்களாக உருவாக்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை மக்களே!

- மலரும்...

`என்னைச் சிறையில் அடையுங்கள்!’

`பக்தி எனும் பெயரில் ஏமாற்று வேலை’ என்று புரட்சிக் குழுவினர் அனுப்பிவைத்த கடிதம் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் அந்த அதிகாரிகள் சுதாமணியை விசாரிக்கச் சென்றனர். அவர்களிடம் அம்மா என்ன கூறினார் தெரியுமா?

“எனக்கே இந்தச் சூழல் மிகவும் சங்கடமாகத்தான் இருக்கிறது. எனக்கு உறவுகளும் ஊரும் தொடர் தொல்லைகள் கொடுத்த வண்ணம் உள்ளனர். என்னால் நிம்மதியாக தியானம் செய்ய முடியவில்லை, ஆகவே நீங்கள் என்னை இங்கிருந்து கூட்டிப் போய்விடுங்கள். சிறையில்கூட அடைத்து விடுங்கள், அது எனக்கு நிம்மதியை அளிக்கும்.

என் தியானம், கடவுள் வழிபாடு ஆகியவற்றுடன் ஆன்மிக நன்னெறிகளைச் சிந்திக்க அனைத்து வாய்ப்புகளும் அமைதியான சூழலில் கிடைக்கும். அதுவே இறைவனின் சித்தமாகவும் இருக்கலாம். ஆகவே, என்னைச் சிறையிலடைத்து விடுங்கள்” என்று கூறி, தன் இரண்டு கைகளையும் விலங்கு பூட்டுவதற்காக நீட்டினார்!

அதிகாரிகளுக்கு ஆச்சர்யம். `நாம் விசாரிக்க வந்தோம். ஆனால், அவர்களே சிறைத் தண்டனை வேண்டுகிறார்கள். அதுவே நிம்மதியைத் தரும் என்று கையை நீட்டுகிறார்கள். இவர்கள் தவறு ஏதும் செய்திருக்க முடியாது’ என்ற நம்பிக்கையுடன் திரும்பிச் சென்றனர்.

புரட்சிக்காரகள் சும்மா விடுவார்களா? அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர்.

உள்ளூர் அதிகாரிகள் தங்களின் முறையீட்டை சரியாக விசாரிக்கவில்லை என்றும், மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். அதன்படி உயர் அதிகாரி ஒருவர் விசாரிக்கச் சென்றார்.

ஒரு நாள் மாலை வேளையில், பாவ தரிசனத்தின்போது அந்த அதிகாரி வந்து சேர்ந்தார். அங்கு நிலவிய தெய்விகமான சூழலைக் கூர்ந்து கவனித்த அந்த அதிகாரி, ‘அங்கு நடப்பது எதுவுமே தவறாகத் தெரியவில்லை, அதனால் வேறு தீவிர விசாரணை தேவையே இல்லை’ என்ற முடிவுடன் திரும்பிச் சென்று விட்டார்!


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு