Published:Updated:

அருணாசல மகிமை

அருணாசல மகிமை
பிரீமியம் ஸ்டோரி
அருணாசல மகிமை

பரணீதரன்

அருணாசல மகிமை

பரணீதரன்

Published:Updated:
அருணாசல மகிமை
பிரீமியம் ஸ்டோரி
அருணாசல மகிமை

இந்தப் பரந்த உலகத்தை ஓர் ஆலயமாகக் கருதினால் திருவண்ணாமலை தலத்தை அதன் கருவறையாகக் கொள்ளலாம். அருணாசல மலையே அக்கருவறையிலுள்ள சிவலிங்கம் ஆகும். இத்தகு மகிமைமிகு அண்ணாமலை, மகா தீபத் திருவிழாவுக்குத் தயாராகிறது. அற்புதமான இந்தத் தருணத்தில், விகடனில் பரணீதரன் எழுதிய `அருணாசல மகிமை' தொடரிலிருந்து சில பகுதிகள் உங்களுக்காக!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முழு முதற்கடவுளான பரமசிவனே அருணாசலமாக அமர்ந்திருக்கிறார். நான்முகனுக்கும் திருமாலுக்கும் அக்னி மலையாகக் காட்சி தந்த ஞானகுரு, உலகம் உய்யும் பொருட்டு ஜோதிர்லிங்க வடிவமாய் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார். மகேசனே மாமலையாக வீற்றிருப்பதால்தான் அருணாசலத்தை வலம் வருவது பிறவி எடுத்ததன் பெரும் பயனாகக் கருதப்படுகிறது. அம்மலை கிருதயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் ரத்தின மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் மரகத மலையாகவும் இருப்பதாக அருணாசல புராணம் தெரிவிக்கிறது.

அருணாசல மகிமை
அருணாசல மகிமை

அம்மலையை ஒருமுறை சுற்றிவருவது சம்சாரக் கடலைக் கடக்கும் வல்லமையைத் தரும். கிரிவலப் பலன், ஏழு நரகங் களையும் கடந்து முக்தி அடையச்செய்யும் ஏணியாகும். கிரி பிரதட்சணம் செய்வதால் நாம் செய்த பாவங்களெல்லாம் அகன்று பெரும் புண்ணியம் கிடைக்கும். இதுபற்றி, அருணாசல புராணத்தில் படிக்கும் போதே மெய் சிலிர்க்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருணாசலத்தை ஒருமுறை வலம் வர வேண்டும் என்று நினைத்து ஓரடி எடுத்துவைத்தால், ஒரு யாகம் செய்த பலன் கிட்டும்; இரண்டடி எடுத்துவைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன் உண்டாகும். மூன்றடி எடுத்துவைத்தால் அசுவமேத யாகத்தின் பலனும், நான்கடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் செய்த பலனும் கிடைக்கும்.

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங் களிலும் வருடப் பிறப்பு, சிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகிய நாள்களில் அருணாசலத்தை வலம்வந்தால் நிச்சயம் நற்கதி கிடைக்கும்.

அருணாசல மகிமை
அருணாசல மகிமை

அருணாசலத்தை ஞாயிறு அன்று வலம் வந்தால் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதம் அடையலாம். திங்கள் அன்று வலம் வந்தால் ஏழு உலகங்களையும் ஆளலாம். செவ்வாய் அன்று வலம் வந்தால் கடனையும் தரித்திரத்தையும் தொலைத்து பிறவிப்பிணி நீங்கப்பெறலாம்.புதன் அன்று வலம் வந்தால் சகல கலைகளும் தெரிந்த தேவர்களாகலாம். வியாழன் அன்று வலம் வருவதல், முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம். வெள்ளி அன்று வலம் வந்தால் விஷ்ணுபதமும் சனி அன்று வலம் வந்தால் நவகிரகங்களின் அருளும் கிடைக்கும்.

அருணாசலத்தை வலம் வந்தவர்கள் கயிலாயத்துக்குள் நுழையும்போது, சந்திரன் வெள்ளைக்குடை பிடிப்பான். சூரியன் தன் கைகளில் விளக்கேந்தி வருவான். தர்ம தேவதை கைலாகு கொடுப்பாள். இந்திரன் மலர்களைத் தூவுவான். குபேரன் தண்டனிடுவான் என்கின்றன புராணங்கள்.

அருணாசல மகிமை
அருணாசல மகிமை

அருணாசலத்தை வலம் வருவதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. நீராடிவிட்டு மடித் துணியுடுத்தி, விபூதி, ருத்ராட்சம் அணிந்து, உள்ளத்தில் சிவ நாமம் விளங்க, உதட்டில் பஞ்சாட்சரம் துலங்க, நிறைமாத கர்ப்பிணிகள் போல் மெள்ள நடந்து செல்ல வேண்டும். கைகளை வீசி நடக்கக் கூடாது. ஏனெனில், அருவமாக வலம் வந்துகொண்டிருக்கும் தேவர்களுக்கும் சித்தர்களுக்கும் அது இடைஞ்சலாக இருக்குமாம். குடை பிடித்துக்கொண்டோ கால்களில் மிதியடி அணிந்துகொண்டோ நடக்கக்கூடாது. வாகனங்களில் செல்லவும் கூடாது.

இதை வலியுறுத்தி அருணாசல புராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது...

ஜ்ராங்கத பாண்டிய மன்னன் ஒருநாள் குதிரை மீதேறி வேட்டையாடப் புறப்பட்டான். அருணாசலத்தை அடுத்த காட்டில் ஒரு புனுகுப் பூனையைக்கண்டு அதைத் துரத்தினான். அது மிக வேகமாக ஓடி அருணாசலத்தைச் சுற்றிவந்து அரசனின் கண்ணெதிரே தரையில் விழுந்து இறந்தது. அடுத்த கணம் அந்தப் பூனை ஒளி மயமான தெய்வ உருவம் தாங்கி விமானத்தில் ஏறி சென்றது. சற்று நேரத்தில் அரசன் குதிரை மீதிருந்து கீழே விழுந்தான். அடுத்த கணம் குதிரையும் தரையில் விழுந்து மரித்தது. பூனையைப் போலவே தெய்வ வடிவம் தாங்கி புஷ்பக விமானத்தில் அமர்ந்து சென்றது. ஒன்றும் புரியாத வஜ்ராங்கத பாண்டியன் அத்தேவ புருஷர்களைப் பார்த்து, “நீங்கள் யார்? நீங்கள் மிருகங்களாகப் பிறக்கக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

அதைக் கேட்டு ஒரு தேவ புருஷன், “வஜ்ராங்கதா... என் பெயர் கலாதரன். இவன் பெயர் காந்திசாலி. நாங்கள் முற்பிறவியில் வித்யாதரர்களாக இருந்தோம். ஊழ்வினையின் காரணமாக ஒரு நேரம் மேரு மலைச் சாரலிலிருக்கும் துர்வாச முனிவரின் தபோவனத்துக்குள் நுழைந்து மலர்களைப் பறித்தோம். அதைக்கண்ட மகரிஷி எங்கள்மீது கோபம்கொண்டு என்னைக் குதிரையாகவும் என் நண்பனைப் புனுகுப் பூனையாகவும் பிறக்கும்படி சபித்துவிட்டார்.

நாங்கள் செய்த குற்றத்துக்காக மனம் வருந்த, அதைக் கண்டு மாமுனிவர் மனம் இறங்கி, ‘நீங்கள் இருவரும் அருணாசலத்தை வலம் வாருங்கள். உங்கள் சாபம் நீங்கப் பெற்று நற்கதி அடைவீர்கள்’ என்று கூறினார். அதன்படியே எங்களுக்குக் கிரி பிரதட்சணமும், சாப விமோசனமும் கிடைத்தன. நீங்கள் பாத யாத்திரையாக வராமல் வாகனம் ஏறி மலையை வலம் வந்ததால் வீழ்ச்சி அடைந்தீர்கள். தாங்களும் அருணாசலத்தைப் பாத யாத்திரையாக வலம் வந்து நற்கதி அடையுங்கள்” என்று கூறி மறைந்தார்கள்.

பின்னர் அந்தப் பாண்டிய மன்னன் நாடாளும் பொறுப்பை இளவரசனிடம் ஒப்படைத்துவிட்டு அருணாசலேச்வரரைத் தூய மனத்துடன் ஆராதித்து, தினமும் மலையை வலம் வந்து கோயில் திருப்பணிகள் பல செய்தான். ஒருநாள் அர்த்தநாரீஸ்வரர் அரசனுக்குக் காட்சி தந்து, “அன்பனே, உன் குற்றம் அகன்றது. தேவேந் திரனான நீ முன்பு எம்மை அபசாரம் செய்ததால் மானிடனாகப் பிறக்க நேர்ந்தது. இப்போது சாபம் நீங்கிவிட்டதால் மீண்டும் தேவலோகம் செல்வாயாக” என்று கூறி மறைந்தார்.

ம்முள் யார் பெரியவர் என்ற ஆணவத்தில் பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட, அவர்களின் ஆணவத்தை அடக்க சிவபெருமான் அடிமுடி காண முடியாத பெரும் நெருப்புப் பிழம்பாய் பூவுலகில் தோன்றினார். அடியையும் முடியையும் காணவியலா பிரம்மாதி விஷ்ணுவை மன்னித்து ஒற்றுமையாக பணியாற்றவும் பணித்தார்.

பூவுலகில் நெருப்பாய் காட்சியளித்த ஈசனை அதே உருவத்தில் எந்நாளும் தரிசிக்க அயனும் மாலும் விரும்பினார். அதற்கேற்ப லிங்கோத்பவ ராக ஈசன் அருணையில் அமர்ந்தார் என்று திருவண்ணாமலை புராணம் கூறுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர்கள் விரும்பியவண்ணமே ஒவ்வோர் ஆண்டும் திருக்கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திர நாளில், மலை முகட்டில் ஜோதி ரூபமாக இன்றும் அருள்காட்சி அளிக் கின்றார். இதுவே தீபத் திருவிழா தோன்றிய காரணம் எனப்படுகிறது.

ருமுறை, ஈசனின் கண்களை மூடினால் பிரபஞ்சமே இருண்டுவிடுமா என்பதை அறிய சக்திதேவி ஈசனின் கண்களை விளையாட்டாக மூடினாராம். அதனால் சகலலோகங்களும் இருண்டுவிட, ஈசனார் வெகுண்டெழுந்து அம்பிகையை பூவுலகுக்குப் போகுமாறு சபித்தார்.

அதன்படி அருணையை அடைந்த அன்னை கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கியிருந்து ஈசனை நோக்கி கடும் தவமியற்றினார். இறைவன் வழிகாட்டியபடி கிரிவலம் வந்து தொழுதார். அதனால் மகிழ்ந்த ஈசன், அடி அண்ணாமலைப் பகுதியில் அன்னைக்கு ரிஷபாரூடராகக் காட்சி தந்து, தன் திருமேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். இது நிகழ்ந்தது, கார்த்திகை தீபநாள் என்பதால் அன்று திருவண்ணாமலையில் ஈசன் அர்த்த நாரீஸ்வரராகவும் காட்சியளிக்கிறார் என்கிறது கோயில் புராணம்.

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா
திருவண்ணாமலையில் தீபத் திருவிழா

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 28 வியாழன் அன்று கிராமதெய்வ வழிபாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1 ஞாயிறன்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ந்தது.

விழாவின் சிறப்பு வைபவங்கள்:

1.12.19 ஞாயிறு கொடியேற்றம்

7.12.19 சனிக்கிழமை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்

10.12.19 செவ்வாய் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம்

மாலை 6 மணிக்கு மகாதீபம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism