Published:Updated:

அமாவாசை நாளில் நகம், முடி வெட்டலாமா... சாஸ்திரம் சொல்வது என்ன?

அமாவாசை
அமாவாசை

அமாவாசை நாளில் நகம், முடி வெட்டலாமா... சாஸ்திரம் சொல்வது என்ன?

இன்றைய பஞ்சாங்கம்

3. 6. 21 வைகாசி 20 வியாழக்கிழமை

திதி: அஷ்டமி காலை 6.27 வரை பிறகு நவமி

நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 11.04 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை

ஹயக்ரீவர்
ஹயக்ரீவர்

சந்திராஷ்டமம்: ஆயில்யம் இரவு 11.04 வரை பிறகு மகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி ஹயக்ரீவர்

அமாவாசை நாளில் நகம், முடி, வெட்டலாமா ?

திதிகளில் முக்கியமான திதியாகப் போற்றப்படுவது அமாவாசை. மிகவும் புனிதமாகக் கருதப்படும் அந்த நாளில் நாம் இறைவழிபாட்டிலும் முன்னோர் வழிபாட்டிலும் ஈடுபட வேண்டும். அந்த நாளில் நாம் செய்யும் தானம் மிகவும் பலன்தரக் கூடியது. அன்று தந்தை இல்லாதவர்கள் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும் அல்லது அவரவர் வழக்கப்படி பித்ரு காரியங்கள் செய்யவேண்டும். தந்தை இருப்பவர்களுக்கு அப்படிப் பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் அந்த நாளில் இல்லை. அதேநேரம் அனைவருக்குமான சில பொதுவான கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாளில் நகம், முடி ஆகியன வெட்டக்கூடாது என்று கூறுவார்கள். பொதுவாக நகம், முடி ஆகியவற்றை மானுட வியல் ஆய்வாளர்கள் உயிர்ப்பொருள்கள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட உயிர்ப்பொருள்களாகக் கருதப்படும் இவற்றை அமாவாசை நாளில் வெட்டலாமா என்னும் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

பணவரவு : இன்று எதிர்பார்த்த பணவரவு வாய்க்கும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். - நாள் நல்ல நாள்

ரிஷபம்

நன்மை : காரியங்களில் வெற்றி கிடைக்கும். சகோதர உறவுகள் உதவி கேட்டுவருவார்கள். மாலையில் உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி மகிழ்ச்சி தரும். - ஆல் இஸ் வெல்!

மிதுனம்

செலவு : அனைத்தும் சாதகமாக உள்ளபோதும் செலவுகள் அதிகரிக்கும் நாள். பிற்பகலில் உண்டாகும் பணவரவு சமாளிக்க உதவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. - செலவே சமாளி!

கடகம்

சோர்வு : எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். உடல் நலனிலும் அக்கறை தேவை. யாரோடும் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. - இதுவும் கடந்துபோகும்.

சிம்மம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியமான வேலைகளை இன்றே முடித்துவிடுவது நல்லது. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். - ஆல் தி பெஸ்ட்!

கன்னி

வெற்றி : முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். திட்டமிட்டபடி செயல்கள் முடியும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நன்மைகள் நடைபெறும் நாள். - பெஸ்ட் ஆஃப் லக்!

துலாம்

கவனம் : புதிய முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றச் சிறிது அலைச்சலை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.- ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விருச்சிகம்

நிதானம் : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் நாள். என்றாலும் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. நண்பர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். - டேக் கேர் ப்ளீஸ்!

தனுசு:

மகிழ்ச்சி : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்குவரும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். - என்ஜாய் தி டே!

மகரம்

விவாதம் : குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். செலவுகள் அதிகரிக்கும். யாரோடும் தேவையற்ற விவாதங்களை மேற்கொள்ள வேண்டாம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம்

உற்சாகம் : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் உண்டாகும் நாள். பிற்பகலுக்கு மேல் சாதகமாக உள்ளது. கடன் பிரச்னைகளில் கவனம் தேவை.- லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மீனம்

பொறுமை: சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். செலவுகள் அதிகரிப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரலாம். - சிக்கனம் தேவை இக்கணம்!

அடுத்த கட்டுரைக்கு