Published:Updated:

சுக்கிர பலம் அதிகரித்து சுகமான வாழ்க்கை வாழ ஸ்ரீசுக்கிர பரிகார மஹாஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுக்கிர பகவான் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் அதிபதி என்பதால் தீய சக்திகளுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் அஞ்சுபவர்கள் சுக்கிர வழிபாட்டால் பலன் பெறலாம்.

சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் எனப்படுவார். உலக வாழ்வில், எத்தனை சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருள்பவர் சுக்கிர பகவான். குறிப்பாக மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன். அதற்கு அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் தான். சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம். சுக்கிர பகவானுக்கு உரிய சுக்கிர வாரத்தில் சுக்கிர ஹோரையில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்

அஸ்வக் கொடியைக் கொண்ட அசுரர்களின் குரு சகலர்களுக்கும் மங்கல வாழ்வை அளிப்பவர். இவர் பார்வை இருக்க பாவங்களும் துக்கங்களும் காணாமல் போகும். பொன்னும் பொருளும் மலையென சேரும். கடன் தொல்லைகள், நீங்காத தரித்திரம் எல்லாம் சொல்லாமல் போகும் என்கின்றன புராணங்கள். நேத்திரன், பிருகு, பார்க்கவன், சுகி, போகி, மகிழன், வெள்ளி, கவி, அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், மழைக்கோள் என்றெல்லாம் போற்றப்படுபவர் சுக்கிரன். சுக்கிர பகவான் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் அதிபதி என்பதால் தீய சக்திகளுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் அஞ்சுபவர்கள் சுக்கிர வழிபாட்டால் பலன் பெறலாம்.

சுக்கிர பலம்
சுக்கிர பலம்

பணி செய்ய ஆட்கள், பரந்து விரிந்த மாளிகை, வாகன வசதிகள், ஆபரண சேர்க்கை, ஊர் மெச்சும் வாழ்க்கை, 10 விதமான போகங்கள் என அத்தனை சுகத்துக்கு சுக்கிரனே காரகத்துவம் பெற்றவர். எனவே ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வ ஜன்ம புண்ணியமும் சேர்ந்தால், அவர் சொல்லமுடியாத அதிஅற்புதமான பலன்களை அனுபவிப்பார். தெருவில் நடந்து செல்பவர் திடீர் என அரசு வாகனத்தில் உயர்ந்த பதவி பெற்று செல்வார். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும், கண்ணில் பட்டதெல்லாம் சுபமாகும். அதேபோல் சுக்கிர யோக ஜாதகக்காரர்களும் திடீர் அதிர்ஷ்டங்களால் சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்கிறது ஜோதிடம். சரி சுக்கிர பலம் இல்லாதவர்கள், ஜாதகத்தில் சுக்கிர யோகம் இல்லாதவர்கள் என்ன செய்யலாம் என்று உங்களுக்குத் தோன்றலாம்!

ஒருவரின் பூர்வ ஜன்ம பலாபலன்களுக்கு ஏற்பவே இப்பிறவி அமைகிறது. அந்த வகையில் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பலம் இல்லை என்றாலோ, சுக்கிர திசையையே சந்திக்க முடியாது என்றாலோ கவலை வேண்டாம். அவர்களுக்கு இறை வழிபாடும் பரிகார வழிபாடும் பலன் கொடுக்கும் என்கிறது ஜோதிடம். இறைவன் அனுக்கிரகத்தால், பூர்வஜன்ம வினைகளுக்கான அசுபப் பலன்கள் குறையும்போது, சுபிட்ச பலன்களும் சுக்கிரயோக வாழ்வும் கைகூடி வரும். சுக்கிர யோகம் கூடி வரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்கும்.

ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம்
ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம்

சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, பாவ கிரகங்களின் பார்வை பட்டாலோ ஒருவருக்கு மோசமான பலன்கள் உண்டாகும். இதை சரிசெய்ய சுக்கிரனுக்கு கிரக ஷாந்தி செய்யவேண்டும் என்கிறது ஜோதிடம். இதற்கு ‘சுக்கிர சாந்தி’ என்று பெயர். உண்மையில் சுக்கிரனுக்கு செய்யப்படும் பரிகார பூஜையில் சுக்கிரனுக்கு மட்டும் ஷாந்தி செய்வதில்லை. குறிப்பிட்ட ஜாதகருக்கு எந்த பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே ஷாந்தி செய்வார்கள். உதாரணமாக சுக்கிர தசையில் சூரிய புக்தி இருந்தால், தலை, வயிறு, கண் தொடர்பான உபாதைகள் வரும். சுக்கிர தசையில் சந்திர புக்தி இருந்தால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. ஆனால், வாத, பித்த ரோகங்கள் உருவாகும். செவ்வாய் புக்தி இருந்தால், குடும்பத்தில் கலகம் உண்டாகும். கேது புக்தி இருந்தால் அபகீர்த்தி வரும், எதிர்பாராத வகைகளில் உபத்திரவம் உண்டாகும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி சுக்கிரனின் நீச்சம் அதிகரித்தால் உண்டாகும் பிரச்னைகளில் இருந்து மீள சுக்கிர பரிகார ஹோமங்கள் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் கடன் நிவர்த்தி, தொழில் அபிவிருத்தி, வியாபார விருத்தி, நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமண வரம், மகிழ்ச்சியான வாழ்வு பெற என வாசகர்களின் நலத்துக்காகவும் வளத்துக்காகவும் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமத்தை திண்டிவனம் கீழ்ப்பசாரில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நடத்தவுள்ளோம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆவணிப்பூர் சாலையில் கீழ்ப்பசார் என்ற ஊரில் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்.

சுக்கிரபகவான்
சுக்கிரபகவான்

சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் முன்பு சுக்கிரப் பரிகாரத் தலமாக இருந்து வந்துள்ளது. அசுர குருவான சுக்கிரன் மகாபலியின் தானத்தைத் தடுத்து வாமனப் பெருமாளின் காரியத்துக்கு இடையூறு செய்த பாவம் நீங்க சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்று கூறப்படுகிறது. ஈசனின் கருணையால் பாவம் நீங்கிய சுக்கிரன் பெரும் வரங்களைப் பெற்றார் என்றும் சகலருக்கும் நன்மைகளை வழங்கும் தேவகிரகமாக மாறினார் என்றும் கூறப்படுகிறது.

வரும் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (3-12-21) வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுபயோக சுக்கிர ஹோரையில் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் உலகத்து லௌகீக சுகங்கள் அனைத்தும் பெறலாம் என்பது நம்பிக்கை.

ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம்
ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் YouTube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு