Published:Updated:

அட்சய திருதியை: லட்சுமி குபேர பூஜையோடு சாம்ராஜ்ய லட்சுமி குபேர மகாஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

லட்சுமி குபேர பூஜை

அட்சய திருதியை நாள் அன்று ஆறு சக்தி வாய்ந்த செல்வத்திற்கான ராஜ யோகங்கள் அமைகின்றன என்கின்றன ஜோதிட நூல்கள். ஜாதக பரிஜதா, சாராவளி, பிருஹத்பாராசர ஹோரசாஸ்த்ரா போன்ற பண்டைய ஜோதிட நூல்கள், இந்த யோகங்களின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் விளக்குகின்றன.

அட்சய திருதியை: லட்சுமி குபேர பூஜையோடு சாம்ராஜ்ய லட்சுமி குபேர மகாஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

அட்சய திருதியை நாள் அன்று ஆறு சக்தி வாய்ந்த செல்வத்திற்கான ராஜ யோகங்கள் அமைகின்றன என்கின்றன ஜோதிட நூல்கள். ஜாதக பரிஜதா, சாராவளி, பிருஹத்பாராசர ஹோரசாஸ்த்ரா போன்ற பண்டைய ஜோதிட நூல்கள், இந்த யோகங்களின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் விளக்குகின்றன.

Published:Updated:
லட்சுமி குபேர பூஜை

அட்சய திருதியை நாளில் பாற்கடலில் இருந்து வெளிவந்த கஜலட்சுமி தாயார் அம்சத்தில் இருந்து தன, தான்ய லட்சுமி தேவியர் உருவெடுத்தனர். சாகம்பரி தேவி பூவுலகில் செடிகொடிகளை உருவாக்கிய தினமும் இன்று தான் என்கின்றன ஞானநூல்கள். இப்படி ஏராளமான அற்புத விஷயங்கள் நடைபெற்ற அட்சய திருதியை திருநாளின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் 'பவிஷ்யோத்தரபுராணம்‘ விரிவாக எடுத்துக் கூறுகிறது. மங்கலப் பொருளான அட்சதையால் அட்சய வரதனைத் துதிக்கும் நன்னாளான திதிக்கு 'அட்சய திருதியை' என்று பெயர் வந்ததாம். இந்நாளில் தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத் தருவது சிறப்பு என்பார்கள். இதை தர்மக்குடம் என்கின்றது ஆன்மிக நூல்கள். எவ்வளவு ஏழையாக இருந்தாலும் இந்த நாளில் ஒரே ஒரு நெல்லிக்கனியை தானமாக அளித்தாலும் போதும். நீங்காத மலையளவு செல்வம் சேரும் என்கிறது பவிஷ்ய புராணம்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

அட்சய திருதியை நாள் அன்று ஆறு சக்தி வாய்ந்த செல்வத்திற்கான ராஜ யோகங்கள் அமைகின்றன என்கின்றன ஜோதிட நூல்கள். ஜாதக பரிஜதா, சாராவளி, பிருஹத்பாராசர ஹோரசாஸ்த்ரா போன்ற பண்டைய ஜோதிட நூல்கள், இந்த யோகங்களின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் விளக்குகின்றன.

இந்த நாளில் ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது நிச்சயம் என்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாச்சியாரையும், நாதன்கோவில் செண்பகவல்லித் தாயாரையும், சாரங்கபாணி ஆலயத்தில் அருளும் கோமளவல்லித் தாயாரையும், காஞ்சிபுரம் பெருந்தேவித் தாயாரையும் தரிசிப்பது விசேஷம் என்பார்கள். அதுபோலவே திண்டிவனம் ஆட்சிப்பாக்கம் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு அட்சய வரதர் சமேத சாம்ராஜ்ய லட்சுமி எனும் பெருந்தேவி தாயாரை தரிசிப்பதும் சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள். அழகின் வடிவமாக, அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையாக அருளும் அன்னை பெருந்தேவியை வழிபடும் அன்பர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் சேரும், வாழ்வின் எல்லா மங்கலங்களும் நிறைந்து கூடும் என்பது பெரியோர்கள் வாக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமாலை எண்ணி திருமகள் தவமிருந்த தலம் ஆட்சிப்பாக்கம், சகல தேவர்களுக்கும் திருமகள் வரங்கள் அளித்த தலம் ஆட்சிப்பாக்கம், குபேரனுக்கு நவநிதியும் திருமகள் அளித்த தலம் ஆட்சிப்பாக்கம், இருதேவியரோடு அட்சய வரதராக திருமால் நின்ற இடம் ஆட்சிப்பாக்கம், ஆட்சியை இழந்த தனது பக்தனுக்கு மீண்டும் ஆட்சியை பெருமாள் அளித்த இடம் ஆட்சிப்பாக்கம். இத்தனை அருமை பெருமைகளைக் கொண்ட இத்தலம் செல்வம் அருளும் குபேரப் பட்டினமாகவும் இருந்து வருகிறது.

குபேர பூஜை
குபேர பூஜை

அட்சய திருதியை நன்னாளில் ஆட்சிப்பாக்கம் தலத்தில் அட்சய வரதர் திருக்கோயிலில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையும், ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி மற்றும் குபேர ஹோமமும், வாசகர்களுக்குச் சகல நன்மைகளும் செல்வ வளமும் பெருகும் பொருட்டு வில்வம் முதலான தளங்கள் மற்றும் பூக்களால் அட்சய அர்ச்சனையும் நடைபெறவுள்ளன. மேலும் ஸ்ரீசாம்ராஜ்ய மகாலக்ஷ்மிக்கு குங்கும மற்றும் வில்வ அர்ச்சனையும் நடைபெறும்.

திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூர் செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது, ஆட்சிப்பாக்கம்.

வாசகர்கள் கவனத்துக்கு...

ஆட்சிப்பாக்கம் அருள்மிகு அட்சய வரதராஜர் திருக்கோயிலில், அட்சயதிருதியை அன்று நிகழவுள்ள லட்சுமிகுபேர பூஜை மற்றும் அட்சய அர்ச்சனை வழிபாடுகளுக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணமாக ₹500 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குக் குங்குமம், லட்சுமிப் பிரசாதமாக வில்வம், குபேர ரட்சை ஆகியவை (30.5.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
ஆட்சிப்பாக்கம் அட்சய வரதர்
ஆட்சிப்பாக்கம் அட்சய வரதர்

தற்போதைய சூழலில், கொரோனா பெருந்தொற்று பாதிப்புக் கட்டுப்பாடு விதிமுறைகளுடன் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்தத் திருக்கல்யாண வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்கவோ பங்கேற்கவோ இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

சங்கல்ப முன்பதிவு விவரங்களுக்கு: 97909 90404

நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.