Published:Updated:

`கட்டணமில்லை;கூடுதல் தரிசன நேரம்’ - இரண்டாவது நாளாக களைகட்டும் அத்திவரதர் வைபவம்!

JAYAVEL B

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தைக் காண நேற்றுமுதல் (ஜூலை 1) பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். முதல்நாளில் ஏற்பட்ட சில சிக்கல்களைப் போக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவும் பல சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தைக் காண நேற்றுமுதல் (ஜூலை 1) பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். முதல்நாளில் ஏற்பட்ட சில சிக்கல்களைப் போக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவும் பல சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அத்திவரதர்
அத்திவரதர்

இரண்டாம் நாளான இன்று அத்திவரதர் ஏகாந்த சேவை நடைபெற்றது. நீல நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மற்றும் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் ஆகியோர் இன்று அத்திவரதரைத் தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் வைபவத்தின் முதல் நாள் தரிசனத்திற்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலான வெளியூர் பக்தர்கள், நேற்று காஞ்சிபுரம் வருவதைத் தவிர்த்து விட்டார்கள். அதுபோல் நேற்று விரைவாக தரிசனம் செய்யவேண்டும் என நினைத்த பெரும்பாலான பக்தர்கள் 50 ரூபாய் கட்டண தரிசன வழியில் சென்றனர். ஆனால் கட்டண தரிசனத்தைவிட பொது தரிசனத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் பொது தரிசனம் செய்தவர்கள் கட்டண தரிசனம் செய்தவர்களை விட விரைவாக தரிசனம் செய்ய முடித்தனர். நேற்று மட்டும் 50 ரூபாய் கட்டணத்தில் 35000 பேர் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

கட்டண தரிசனம், இலவச தரிசனம், வி.ஐ.பி தரிசனம் என மூன்று வகையான தரிசனத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தார்கள். இந்த நிலையில் பக்தர்கள் அனைவரும் ஒரேவழியில் வரும் வகையில் 50 ரூபாய் கட்டணத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார். இது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

உள்ளூர் மக்கள் சிறப்புத் தரிசனம் செய்யும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் ஒரு முறை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். ஆனாலும் 1.7.19 – 3.7.19, 12.7.19-24.7.19, 15.8.19-12.8.19 மற்றும் ஆகஸ்டு 16,17 ஆகிய தேதிகளிலும் மாலை 5 மணிமுதல் இரவு எட்டுமணி வரை உள்ளூர்மக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாஸ் மூலம் தரிசனம் செய்யலாம்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

அத்திவரதர் தரிசனத்திற்காக தேவராஜ பெருமாள் கோயில் பகுதிக்கு மினி பேருந்து விடப்பட்டுள்ளது. ஆனால் முதல்நாளில் அதிக அளவு ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாடவீதிகளில் ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் அதிக அளவு மினி பேருந்துகளை இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அத்திவரதர் தரிசனத்திற்கான நேரம் காலை 6 முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையிலும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இடைவேளை இல்லாமல் தொடர்ந்து 15 மணி நேரமும் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசிக்கலாம். இரவு 8 மணிக்குக் கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்படும். இரவு எட்டுமணிக்குள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தபிறகே கோயில் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.