Published:Updated:

கலியுக தோஷங்கள் விலக்கும் அத்தி மர ஐயப்பன் ஆராதனைகள், சிறப்பு யாகங்கள்! நீங்களும் பங்கேற்கலாம்!

அத்தி மர ஐயப்பன்
News
அத்தி மர ஐயப்பன் ( ம.அரவிந்த் )

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் சுகமான வாழ்வும் சௌபாக்கிய நலமும் கிட்டும்.

சாதி, மொழி, மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப்படுபவர் சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமி. ஐயப்பனை எண்ணி மாலையிட்டு விரதம் இருப்பவர்களை 'சாமி, ஐயப்பா, மணிகண்டா, மாளிகைபுரம், குருசாமி,' என்றெல்லாம் தெய்வ வடிவாகவே காண்பது நம் வழக்கம். ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள் என்றால், அந்த ஐயப்பன் தெய்வத்துக்கு எல்லாம் தெய்வம் இல்லையா! ஸ்ரீசாஸ்தாவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீசபரிமலை ஐயப்பன் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகப் போற்றப்படுபவன்.

ஐயப்பன்
ஐயப்பன்

கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை இந்தியாவெங்கிலும் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து மண்டல, மகர ஜோதி பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பெருந்தொற்று காரணமாக சென்ற ஆண்டும், மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது. எளியோருக்கு எளியோனும் ஏழைகளின் காவலனும் ஆகிய நம் மணிகண்ட தெய்வம் நம்மை கைவிடுமா! என்னைத் தேடி நீ வராவிட்டாலும், உன்னைத் தேடி நான் வருகிறேன் என்று அந்த கருணை தெய்வம் காந்தமலை ஜோதி தஞ்சைக்கு வரவிருக்கிறான்.

ஆம், வரும் டிசம்பர் 18-ம் நாள் (சனிக்கிழமை) தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன. இந்த சூழலில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாத அன்பர்களுக்காக அதே போன்ற ஆராதனைகளை தஞ்சையில் நடத்த உள்ளோம். இந்த அற்புத ஆராதனையில் காலையில் ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீசண்டிகா தேவி ஹோமம், ஸ்ரீஉமா மாகேஸ்வர பூஜை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஹரிஹர ஐயனார் பூஜை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என விரிவான பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம் என்பதும் ஒரு விசேஷம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பகவதி பூஜை
பகவதி பூஜை
ம.அரவிந்த்

சோழர்களின் சொர்க்க பூமியாம் தஞ்சையில் புகழ்பெற்ற தர்மசாஸ்தா ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீஐயப்ப மகாஆராதனை விழா சக்தி விகடன் வாசகர்களோடு நடைபெற உள்ளது. சபரிமலை முன்னாள் மாளிகைபுரம் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ அனிஸ் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி ஆகியோர் தலைமையில், காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள், மஹாசாஸ்த்ரு பிரியதாசன் ஸ்ரீ அரவிந்த் சுப்ரமண்யன் மற்றும் பெரியோர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை, மகாகுருசாமி, நடிகர் நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த 18 படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளோம். மேலும் இங்கு மட்டுமே விசேஷமாக நடைபெறும் 'நூறும் பாலும்' என்ற சர்ப்ப தோஷ வழிபாடு சிறப்பானது. இந்த வழிபட்டால் நாக தோஷம் விலகி விரும்பிய வரன் கிடைக்கும். மேலும் மாலை 5.30 அளவில் ஸ்ரீஐயப்பனுக்கு 1008 தாமரை மலர் அர்ச்சனை. 108 தேங்காய் உடைத்து நீராஞ்சனம். சனிப்பெயர்ச்சியை ஒட்டி நவகிரக பூஜை. விளக்கு பூஜை நடைபெறும்.

படி பூஜை
படி பூஜை
ம.அரவிந்த்

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் சுகமான வாழ்வும் சௌபாக்கிய நலமும் கிட்டும். நாக தோஷங்கள் உள்ளிட்ட கலியுக தோஷங்கள் அத்தனையுமே நீங்கும் என்பது உறுதி. திருமண யோகம், புத்திர பாக்கியம், வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் நலமாக அமையும். நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும். அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.