Published:Updated:

அத்திவரதர் கையில் இருக்கும் ‘மாசுச’ என்பதற்கு என்ன பொருள்?

சி.வெற்றிவேல்

2012-ம் ஆண்டு, ஜூன் மாதம் 8-ம் தேதி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணன் என்பவரால் இந்தத் தங்கக் கவசம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டது.

ஹஸ்த முத்திரை
ஹஸ்த முத்திரை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சயன கோலத்தில் 31 நாள்களாக அருள்பாலித்த அத்திவரதரை இதுவரை 45 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் தரிசித்துள்ளனர்.

அத்திவரதர்
அத்திவரதர்

32 -வது நாளான இன்று (1.8.2019) முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நின்ற கோலத்தில் அருள்புரியும் அத்திவரதர், வலது கரம் ஒன்றில் அபய ஹஸ்தத்திலும் மற்ற கரங்கள் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தாங்கியபடியும் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கும் அத்திவரதரின் கை, தங்கக் கவசத்தால் சூழப்பட்டிருக்கிறது. இந்தத் தங்கக் கவசத்தில் 16 வைரக் கற்கள், 188 ரூபி கற்கள், மூன்று மரகதக் கற்கள், 107 அமெரிக்கன் டைமண்ட் கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன.

அத்திவரதர் வைபவம்
அத்திவரதர் வைபவம்

2012-ம் ஆண்டு, ஜூன் மாதம் 8 -ம் தேதி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணன் என்பவரால் இந்தத் தங்கக் கவசம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டது. தங்கக் கவசம் மட்டுமன்றி தங்கச் சங்கு, சக்கரம் ஆகியவற்றையும் அவர் கொடையாக வழங்கினார். மூலவருக்குச் சாத்தப்பட்ட தங்கக் கை கவசம்தான் தற்போது அத்தி வரதருக்கும் சாத்தப்பட்டுள்ளது.

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள்... கும்பகோணம் அருகே ஓர் அத்திவரதர் !

இந்தத் தங்கக் கவசத்தில் `மாசுச’ என்று எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் என்ன என்று அனந்த பத்மனாச்சார்யார் சுவாமிகளிடம் கேட்டோம்.

அத்திவரதர்
அத்திவரதர்

“`மாசுச' என்பது வடமொழிச் சொல்லாகும்.`மாசுச' என்றால் ‘கவலைப்படாதே’ என்று அர்த்தம். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனிடம் கடைசியில் சொன்ன வார்த்தை இது. ‘மாசுசஹா’ என்று சொல்லியிருப்பார். `மாசுசஹா' என்பதைத்தான் `மாசுச’ என்று சுருக்கி அத்திரவரதரின் கையில் உள்ள கவசத்தில் பொறித்திருக்கிறார்கள். `மாசுசஹா' என்றால் ’எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன்’ என்று பொருள்'' என்றார்.