Published:Updated:

நவராத்திரி: உங்க வீட்டுக் கொலுவை எப்படி அழகுபடுத்தலாம்? - வழிகாட்டும் அவள் விகடன் ஆன்லைன் பயிற்சி

கொலுவை வித்தியாசமாக அலங்கரிக்க பயனுள்ள கிரியேட்டிவ் பயிற்சியை அவள் விகடன் அளிக்கவுள்ளது. நவராத்திரியை முன்னிட்டு `குறைந்த செலவில் உங்கள் வீட்டுக் கொலுவை அழகுபடுத்தலாம்!' என்கிற கிரியேட்டிவ் பயிற்சி ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவராத்திரி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கொலு அலங்காரம்தான். கொலு வைப்பவர்களில் பெரும்பாலானோர் முதல் கொலுவை தங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை அடுக்கித்தான் தொடங்கியிருப்பார்கள்.

நவராத்திரி விழா கொலு பொம்மைகள்
நவராத்திரி விழா கொலு பொம்மைகள்
ரா.ராம்குமார்
நவராத்திரி ஸ்பெஷல் - சுவையான பாயசம்... மணமணக்கும் சாம்பார் சாதம்... சிறுதானிய ரெசிப்பிகள்!

கொலு வைப்பதில் நிறைய சாஸ்திர சம்பிரதாயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி, பெண்களின் கிரியேட்டிவிட்டியை அதில் காணலாம். ஒவ்வொரு வருடமும் புது கான்செப்ட், அலங்காரங்கள் எனக் கலக்குவார்கள். இந்த வருடம் உங்கள் கொலுவை அழகாக்க எளிமையான சில டிப்ஸை வழங்குகிறார் கிராஃப்ட் பயிற்சியாளர் ஆண்டாள்.

``கொலுவிற்கான பேக்கிரவுண்டு அமைப்பது என்பது ஒவ்வொரு வருடமும் சவாலான காரியம்தான். வீட்டில் இருக்கும் அட்டைப் பெட்டிகளை எடுத்து, 30 செ.மீ அளவில் சதுரமாக வெட்டிக் கொள்ளவும். அதில் வெள்ளை நிற அக்ரிலிக் பெயின்ட் அடித்து அரை மணி நேரம் காயவிடவும். உங்களுக்குத் தெரிந்த கம்பிக் கோலங்களை பெயின்ட் பயன்படுத்தி அட்டையில் வரைந்து கொள்ளவும். இதே போன்று 10 கோல அட்டைகளை தயார் செய்யவும். கொலு வைக்கும் இடத்தின் பின்புறம் திரை போன்று புடவையைத் தொங்கவிட்டு, கோல அட்டைகளில் டபுள் டேப் ஒட்டி புடவையில் ஆங்காகே ஒட்டினால் வித்தியாசமான பேக்கிரவுண்டு தயார்.

கொலு பொம்மைகள்
கொலு பொம்மைகள்
என்.ஜி.மணிகண்டன்

பொம்மைகளை அடுக்கும் முன் படிக்கட்டில் விரித்திருக்கும் துணியை ஒரு கயிறுவைத்து படியுடன் சேர்த்துக் கட்டிவிட்டால், துணி நழுவி பொம்மைகள் கீழே விழும் என்ற பயம் இல்லாமல் இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலுவில் புகை எஃபெக்ட் கொண்டு வர பொம்மைகளின் பின்புறம் சாம்பிராணி தூபம் வைப்பதற்கு பதிலாகப் படிக்கடுகளின் கீழ் வைத்தால், புகையால் பொம்மை மங்குவதை தவிர்க்கலாம். ரெடிமேடு படிக்கட்டுகள் இல்லாமல் அட்டைப்பெட்டிகள், புத்தகங்களைக் கொண்டு படிக்கட்டுகள் தயார் செய்கிறீர்கள் என்றால் நெருப்பினைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

கொலு டிப்ஸ்
கொலு டிப்ஸ்

கடவுள் சிலைகளுக்கு நகைகள் அணிவிக்க விரும்புகிறீர்கள் என்றால் ஒரு பிளவுஸ் துணி எடுத்துக் கொள்ளுங்கள் அதனை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி, ஸ்டோன், செயின், பால் செயின், குந்தன் கற்கள் போன்றவற்றால் அலங்கரிக்கவும். அதன் பின் வெட்டிய பிளவுஸ் துணியின் இரு முனையிலும் நூல் கொண்டு பேக் செயின் போன்று தைத்தால் அழகான நகை தயார்.

படிக்கட்டுகளை அலங்கரிக்க படிக்கட்டுகளில் ஸ்டோன் செயின்களை பார்டர்கள் போன்று ஒட்டி அலங்கரிக்கலாம்." என்கிறார் ஆண்டாள்.

இதே போன்று கொலுவை வித்தியாசமாக அலங்கரிக்க பயனுள்ள கிரியேட்டிவ் பயிற்சியை அவள் விகடன் அளிக்கவுள்ளது. நவராத்திரியை முன்னிட்டு `குறைந்த செலவில் உங்கள் வீட்டுக் கொலுவை அழகுபடுத்தலாம்!' என்கிற கிரியேட்டிவ் பயிற்சி ஆன்லைனில் அக்டோபர் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. கிராஃப்ட் பயிற்சியாளர் ஆண்டாள் பயிற்சியை வழங்க உள்ளார்.

கொலு
கொலு
குழந்தை புத்தர், கிருஷ்ண லீலை, விவசாயி; கண்ணைக்கவரும் வண்ணமயமான நவராத்திரி கொலு பொம்மைகள்!

கொலு அமைக்க புதிய கிரியேட்டிப் ஐடியாக்கள், மண் இல்லாமல் பார்க் , மலை, குளம் அமைப்பதற்கான வழிமுறைகள், கொலு பொம்மைகளுக்களுக்கான நகை அலங்காரம் தொடர்பான டிப்ஸ் மற்றும் ரிட்டன் கிஃப்ட் தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்போரின் தனிப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பயிற்சியாளர் ஆண்டாள் பதிலளிப்பார்.

கட்டணமில்லா இந்த வெபினாரில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கில் பதிவு செய்யவும்: https://bit.ly/39Gwp92

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு