Published:Updated:

ஆவணி அவிட்டம்: இந்த நாளின் நோக்கம் என்ன? காஞ்சி மகா பெரியவா வழிகாட்டுகிறார்!

மகா பெரியவா

ஆவணி அவிட்ட நாளில் பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு கொஞ்ச நேரமாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும் என்பது காஞ்சி மகா முனிவரின் விருப்பம்.

ஆவணி அவிட்டம்: இந்த நாளின் நோக்கம் என்ன? காஞ்சி மகா பெரியவா வழிகாட்டுகிறார்!

ஆவணி அவிட்ட நாளில் பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு கொஞ்ச நேரமாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும் என்பது காஞ்சி மகா முனிவரின் விருப்பம்.

Published:Updated:
மகா பெரியவா
தெய்வங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பண்டிகை மாதம்தோறும் வருகின்றன என்றால், வேதத்துக்கு உண்டான பண்டிகை என்றால் அது ஆவணி அவிட்டமே என்பார்கள் பெரியோர்கள். ஆவணி அவிட்டம் என்றால் அந்தணர்கள் புதிய பூணூலை மாற்றிக் கொள்ளும் ஒரு சடங்குத் திருவிழா என்று மட்டும் இல்லை. இது வேத பாடங்களைக் கற்றுக் கொள்ள தொடங்கும் ஒரு திருநாளாகவே ஆரம்பத்தில் இருந்து வந்துள்ளது.

அதனால்தான் ஆவணி அவிட்டத்தை 'உபாகர்மா' என்று பெரியோர்கள் அழைத்தனர். உபாகர்மா என்றால் ஆரம்பம், வேதாரம்பம் என்றே பொருள். ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமியே ஆவணி அவிட்ட நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

வேதங்கள் பரப்பிரம்மமான கடவுளிடம் இருந்து ரிஷிகளிடம் ஓதப்பட்டு அவை மண்ணுலகில் சகல ஜீவன்களின் நன்மைக்காக பயன்படுகின்றன. அன்றாடம் பூஜைகள், ஹோமங்கள் என பல்வேறு சடங்குகளில் ஓதப்படும் இந்த வேதங்களுக்கும் தோஷங்கள் உண்டாகின்றன என்று ஆன்றோர்கள் கூறுவர். குறிப்பிட்ட கால இடைவெளி இன்றி வேகமாகச் சொல்லுதல், புரியாமல் அரைகுறையாகச் சொல்லுதல், சுருக்கமாக முடித்துக் கொள்ள பாதி அளவுக்கே சொல்லுதல் எனப் பல தவறுகள் வேத பாராயணத்தை போது நடந்து விடலாம்.

உபகர்மா
உபகர்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது மிக மிகத் தவறான செயல். குறைவு கொண்ட வேத பாராயணம் இந்த பூமிக்கும் ஜீவராசிகளுக்கும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி விடலாம். அதனால் தெரிந்தோ தெரியாமலோ வேத பாராயணத்தின்போது உண்டாகும் தோஷங்களை இந்த ஆவணி அவிட்ட நாளில் தேவர்களை அழைத்து தோஷ நிவர்த்தியாக வேத விற்பன்னர்கள் சில ஷாந்தி மந்திரங்களையும் வழிபாட்டையும் மேற்கொள்வர். இதனால் சகலருக்கும் நன்மையும் சந்தோஷமும் உண்டாகும் என்பது ஐதிகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமின்றி இந்த ஆவணி அவிட்ட நாளில் எல்லா தேவதைகளையும் மானசீகமாக வணங்கி தாங்கள் உச்சரிக்கும் வேத மந்திரங்கள் எல்லோருக்கும் நன்மைகளை உண்டாக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வார்கள்.

இந்த நாளில் புதிதாகக் குழந்தைகளுக்கு உபநயனம் செய்தும் வைப்பார்கள். உபநயனம் என்றால் துணையான கண்கள் என்று பொருள். அதாவது ஏற்கெனவே இருக்கும் இரண்டு கண்கள் மட்டுமின்றி, வேதம்; ஒழுக்கம் எனும் இந்த உபகண் ஞானத்தை அறிய உதவும் என்பது நம்பிக்கை. 'நமக்குத் துணையாக வரும் இன்னுமொரு கண்' என்று பொருள்படும் உபநயனத் தத்துவத்தை ஆத்மார்த்தமாக உணர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதே முக்கியம்.

அவிட்ட நட்சத்திரம்
அவிட்ட நட்சத்திரம்

உபநயனம் எனும் பூணூல் மற்றும் மந்திர உபதேசங்கள் ஏற்றுக்கொண்ட பிள்ளைகள் அன்று முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கை நடைமுறையாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பது கட்டளை. உபநயனம் என்பது குருவின் துணையுடன் இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லும் ஓர் ஆன்மிக நோக்கம். பெரியோர், தகப்பனார், ஆச்சார்யர் ஆகியோர் வழியாகவே உபநயனம் செய்விக்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆவணி அவிட்ட நாளில் அதிகாலை நீராடி ஆண்டவனைத் துதித்துப் புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் போன்ற ஜபதபங்கள் செய்ய வேண்டும். பிறகு

பாரத தேசத்தில் உறையும் தெய்வங்கள், நதிகளின் தேவியர்களை அழைத்து மகா சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். இதில் லோக க்ஷேமமே முதலாக இருக்க வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும். பிறகு மீண்டும் அவரவர் வசதிக்கேற்ப நீர் நிலைகளிலோ, வீட்டிலோ நீராடி புது ஆடைகள் அணியவேண்டும். ஆவணி அவிட்ட நாளில் இரு முறை நீராட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். முறையான பூஜைகளும் ஆசார்யர்களுக்கான தானங்களும் ஆதரவற்றோருக்குச் செய்யும் தருமங்களும் நிச்சயம் இந்த பூமியைக் காக்கும் என்பதே இந்த நாளின் தாத்பர்யம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை ஓதிய வேத மந்திரங்களில் ஏதேனும் குறையிருப்பின் அதை நிவர்த்தி செய்யவும், இனி கற்க இருக்கும் வேத மந்திரங்களை முழுமையான பலத்துடன் கற்கவும் இந்நாளில் காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என ஆன்மிக கூறுகின்றன. இந்தப் பிரபஞ்சமும் அதில் வாழும் சகல ஜீவராசிகளும் சிறப்புற்று வாழ வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலிக்கும் சகல தேவதைகளும் திருப்தியோடு செயல் புரியவும் இந்த நாளில் சங்கல்பம் ஏற்க வேண்டும். பூமியில் குற்றங்கள் குறைந்து அன்பும் ஒழுக்கமும் பெருகி எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்று பிரார்த்திப்பதே ஆவணி அவிட்டத்தின் நோக்கம் என்பர் பெரியோர்.

சந்தியா வந்தனம்
சந்தியா வந்தனம்

மூலத்தில் பிடித்ததை அவிட்டதில் விடு என்பார்கள் பெரியோர்கள். அதாவது தேவதைகள் திருப்தி பெற, சகல உயிர்களும் இன்புற்று வாழ தினமும் காயத்ரீ மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது விதி. ஒருவேளை தினமும் சொல்ல முடியாதவர்கள் மாதத்தில் மூல நட்சத்திர நாளில் தொடங்கி அவிட்டம் வரையாவது, ஐந்து நாள்களிலாவது காயத்ரீ மந்திரத்தை விடாமல் ஜபிக்க வேண்டும் என்பார்கள். அவிட்ட நாளில் ஓதப்படும் வேத மந்திரங்கள் வலுவானவை என்பதும் ஆன்றோர் வாக்கு. ஆவணி அவிட்ட நாளில் பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு கொஞ்ச நேரமாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும் என்பது காஞ்சி மகா முனிவரின் விருப்பம்.

பூணூல் போடுபவர்களுக்கு மட்டுமான பண்டிகை மட்டுமல்ல இது. மற்றவர்கள் சூரியனை நமஸ்கரிக்கவும், ஆலய வழிபாடுகள் செய்யவும், புதிய கல்வி, கலைகளைக் கற்றுக்கொள்ளவும் ஏற்ற நாள் இது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism