Published:Updated:

பாபாயணம் - 3

சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
சாய் பாபா

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

பாபாயணம் - 3

சச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாதரே சரணம்!

Published:Updated:
சாய் பாபா
பிரீமியம் ஸ்டோரி
சாய் பாபா

நான் உன்னுடனேயே இருக்கிறேன். உன் தேவைகளைத் தீர்த்து வைக்கிறேன். உனக்கு சக்தியைக் கொடுக்கிறேன்.

பாபாயணம்
பாபாயணம்

பாபா ஒரு பாற்கடல். அந்தக் கடலிலிருந்து அமிழ்தம் பருகிய பக்தர்கள் ஏராளம். அதில் கண்டோபா கோயில் பூசாரி ‘மகல்சபாதி’ முதன்மையானவரும் முக்கியமானவரும் ஆவார். இன்று உலகமே போற்றும் ‘சாயி’ என்னும் நாமத்தைச் சொல்லி முதன்முதலில் பாபாவை அழைத்தவர் இவர்தான். பாபாவை முதலில் கண்டபோது ‘யா சாயி ஆவோ’ என்று அழைத்து வரவேற்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, “இறைவன் இருக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். ஸ்ரீ சைதன்யர் போன்றோர் சித்தரில் சித்தர். இவர்கள் கடவுளைக் கண்டது மட்டுமல்லாமல், அவருடன் எப்போதும் பேசுகின்றனர், நெருங்கிப் பழகுகின்றனர். சித்தரில் சித்தரை அவர்கள் ‘சாயி’ என்கின்றனர். சாயிக்கு மேல் உயர்ந்த நிலை இல்லை” என்றார்.

கிருஷ்ணன் மேல் அர்ஜுனன் வைத்த பக்திக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை பாபா மேல் மகல்சாபதி வைத்த பக்தி.

பாபா அப்படி ஒரு சித்தரில் சித்தர் என்பதை உள்ளுணர்வால் அறிந்தே மகல்சாபதி அப்படி அழைத்திருக்க வேண்டும்.

மகல்சாபதியின் மனைவிக்குத் தொண்டையில் ஒரு கட்டி ஏற்பட்டபோது, அவரின் குழந்தைகளுக்கு நோய் வந்தபோது பாபா தொலைவிலிருந்தே அவற்றைச் சரிசெய்து அற்புதம் நிகழ்த்தினார். ஆண்குழந்தை பிறந்தபோது பாபா அவரிடம், “அதன்மீது அதிக பற்று வைக்காதே” என்று கூறினார்.

தன் பலத்தை நம்புகிறவன்தான் கவலையில் சிக்கிக்கொள்கிறான். ஆனால் மகல்சாபதியோ, “குழந்தையைக் கவனிப்பது என் சக்தி இல்லை. நீங்கள் இருக்கும்போது இதில் என் சக்தி என்று எதுவும் இல்லை” என்று கூறித் தன் துயர் தீர்ந்தார். இவையெல்லாம் அவரை பாபாவின் மேல் பெரும் பக்தியும் அன்பும் கொள்ளச் செய்தன. அதனால்தான் தன் வாழ்வை அவரின் சேவைக்கே அர்ப்பணித்துக்கொண்டார் மகல்சாபதி.

sai baba
sai baba

பொதுவாக, பிறர் தன்னை வழிபடுவதை விரும்பாத பாபாவால்கூட, முழுமையாகத் தனக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்துகொண்ட மகல்சாபதியின் வழிபாடுகளைத் தடை செய்ய முடியவில்லை. தன்னை மனப் பூர்வமாக நேசித்து நம்பும் அடியவர்களின் அன்புக்கு பாபா எப்போதும் அடிமை.

கிருஷ்ணன் மேல் அர்ஜுனன் வைத்த பக்திக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை பாபா மேல் மகல்சாபதி வைத்த பக்தி.

குருஷேத்திரப் போரின்போது துரியோதனன் கிருஷ்ணரின் சேனைகளைக் கேட்டான். ஆனால் அர்ஜுனனோ ‘கிருஷ்ணன் மட்டும் போதும்’ என்றும், அவர் தங்களுடன் இருப்பதே வேண்டும் என்றே கேட்டான். “நீ என்னுடன் இருந்தால் போதும். நீயே என் ஆத்ம சக்தி. என்னுடன் நீ இருந்தால் எதிலும் வெற்றிபெற முடியும்” என்றான்.

மகல்சாபதி சொன்னதும் அதுவேதான். “தேவா நீங்கள் என்னுடன் இருக்கும்போது என் தேவைகளை அறிந்து நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் எனும்போது நான் என் உலகாயத விஷயங்களை நினைத்துக் கவலைப்பட வேண்டுமா என்ன?” என்று கேட்டார்.

அந்த நம்பிக்கையே பாபா விரும்புவது. மகல்சாபதியை பாபா ‘பகத்’ என்றுதான் அழைப்பார். பாபா பலமுறை நிகழப்போவதைக் கூறி அவரை எச்சரித்ததுண்டு.

இதுவரை தரிசித்திராத சாயிபாபா திருவுருவப் படங்கள் புதிய பரிமாணங்களில். வாரந்தோறும் பாதுகாக்கத் தயாராகுங்கள்!

ஏழை மனிதரான மகல்சபாதி தன் மூன்று பெண்களுக்கும் பக்கத்து கிராமங்களில் திருமணம் செய்துகொடுத்திருந்தார். அவருடைய சம்பந்திகள் அவரை மதிப்பதில்லை. அவமானப்படுத்தினர். இவ்வாறெல்லாம் நேரும் என்று ஏற்கெனவே பாபா கூறி அவரை எச்சரித்தே இருந்தார். அதனால் மகல்சாபதி, பெரிய கவலையின்றி அவற்றையெல்லாம் சாயிநாதனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு சலனமின்றியிருந்தார்.

மகல்சாபதி பாபாவின் அனுமதியின்றி எதையும் செய்வதில்லை. ஏன், இரவு உணவு உண்ண வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றாலும் பாபாவிடம் அனுமதி கேட்பார். அப்போதெல்லாம் “கவலையின்றிச் செல்லுங்கள். நான் உங்களுடனேயே இருக்கிறேன்” என்று பாபா சொல்வது வழக்கம். அதேபோன்று எப்போதும் கண்ணுக்குத் தெரியாமல் உடனிருந்து பாதுகாக்கவும் செய்தார் பாபா.

பாபாயணம் - 3

பாபாவிடம் அருகிலிருந்து அவரின் உயரிய வாழ்க்கை முறை, உபதேசங்கள் ஆகியவற்றை அறிந்து உயர்ந்த ஆன்மிக நெறியில் தன் வாழ்வைச் செலுத்தினார் மகல்சாபதி.

பாபாவும் தன் மனம்விட்டுப் பேசுவது இவரிடம் மட்டுமே. பாபா தன் பூர்வாசிரமத் தாய் தந்தையரைக் குறித்து இவரிடம் மட்டுமே பகிர்ந்துகொண்டுள்ளார். மூன்று நாள் பாபா தன் உடலை விட்டு விலகி இருந்தபோது மகல்சாபதியை நம்பியே உடலை ஒப்புவித்தார். அந்த அளவுக்கு நர - நாராயணர் போல இருவரும் வாழ்ந்தனர்.

‘பக்தி’, ‘சரணாகதி’, ‘தன்னலம் இல்லாமை’ என்று உயர் நிலையை அடைய பாபா உதவியாக இருந்தார். வரப்போவதை முன் கூட்டியே எச்சரித்து, அவரின் அடிமன ஆசைகளையும் நிறைவேற்றித் தந்தார்.

உயரிய ஆன்மிக நிலையை அவருக்குள் வளர்த்தார் பாபா. ‘அர்ப்பணிக்கப்பட்ட பிரேமை’, ‘விஸ்வாசம்’, ‘பூரண சரணாகதியின் உருவம்’ எனத் திகழ்ந்தார் மகல்சாபதி.

மகல்சாபதி தன் குலதெய்வம் கண்டோபாவை பாபா ரூபத்தில் தரிசித்தார். ‘நல்ல வழியில் செல்லும் எவனும் நல்லதையே அடைவான்’ என்று பாபா நமக்குச் சொல்வதன் உதாரணம் மகல்சாபதிதான்.

மகல்சாபதியைப்போல ஒவ்வொரு பக்தனையும் மிக உன்னத நிலையில் வைக்க பாபா பல வழிகளில் முயல்கிறார். அதற்கு நமக்கு ஏதுவாக இருப்பது அவரின் நாம ஜபமே. அதை எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருந்தால் அந்நிலை தானே அமையும். மகல்சாபதி எப்போதும் ‘ஸ்ரீசாயி நாதாய நமஹா’ என்று உச்சரித்தபடியே இருந்தார். அந்த நாமத்தைச் சொல்லியபடியே 1922-ல் ஓர் ஏகாதசி அன்று பாபாவோடு ஐக்கியம் ஆனார்.

ஒரு தாயின் கர்ப்பத்தில் உள்ள குழந்தை வெளியில் வருவதற்கு முன்பே அதற்குத் தேவையான அனைத்தையும் இறைவன் செய்து வைக்கிறான். அவனின் வருகைக்காக குரு காத்துக்கொண்டிருக்கிறார். சரியான நேரத்தில் குருவி காலில் கட்டிய நூலைப் போல தன்னிடம் குரு இழுத்துக்கொள்கிறார்.

‘ஸ்ரீசாயிநாதாய நமஹ’ என்று எந்நேரமும் சொல்லிக்கொண்டிருந்தால்போதும். அந்த நிலை நமக்கும் தானே கைகூடிவிடும்.

உன் நாமம் நான் பாட...

உனதருளைத் தருவாயே சாயிநாதா.

(தரிசனம் தொடரும்)

பாபா தி பாஸ், பாபா தி மாஸ்

ந்தியாவைப் பொறுத்தவரை பல ஆன்மிகப் பெரியவர்கள், மகான்கள் பிறந்திருக்கிறார்கள். பிறந்துகொண்டுமிருக்கிறார்கள். யார் என்ன வேண்டுதல் வைத்தாலும் ஓடோடிவந்து உதவி செய்வதில் முதன்மையான சித்தர் ஷீர்டி சாயிபாபா.

Vivek
Vivek

பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டிய மாநிலத்தில் பிறந்த ஆன்மிக குரு சாயிபாபா. 21-ம் நூற்றாண்டான இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான ஆட்டோக்களில் சாயிபாபா கைகாட்டி முகம் மலர ஆசீர்வதிக்கிறார். ஒரு ஆட்டோ ஓட்டுநரை அழைத்தேன். பாபா போட்டோவைக் காட்டி, ‘இவர் யாரு, எந்த ஊர், என்ன செய்தார் தெரியுமா?’ என்று கேட்டேன். எல்லாத்துக்கும் ‘தெரியாது... தெரியாது... தெரியாது’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவரிடம் ‘அப்புறம் எதற்காக அவரோட போட்டோவை ஆட்டோவுல ஒட்டி வெச்சிருக்கீங்க?’ என்று கேட்டேன். ‘இந்த போட்டோவை ஆட்டோவுல வெச்சதிலிருந்து வீட்டுல சாப்பாட்டுக்குக் கஷ்டம் இல்லை, சவாரி நிறைய வருது சார்’ என்று பதில் சொன்னபோது ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு நீதிபதிக்கு பாபாவின் மேல் பெரிதாக பக்தி கிடையாது. அவர் மனைவியோ தீவிர சாயிபாபா பக்தை. அவருக்கு யாரோ ஒருவர் பாபாவின் போட்டோவைக் கொடுத்துள்ளார். பாபா போட்டோவிலிருந்து விபூதி கொட்டிக்கொண்டே இருக்க கணவரும் மனைவியும் ஆச்சர்யத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள். சாயிபாபாவின் விபூதி ஆசீர்வாதத்தில் அகமகிழ்ந்து தன் வீட்டுக்குப் பின்னால் பாபாவுக்குப் பெரிய கோயிலே கட்டிவைத்திருக்கிறார் நீதிபதி.

ஒருமுறை என்னை வீட்டுக்கு அழைத்து, பயபக்தியுடன் வீட்டுக்குப் பின்னால் இருந்த கோயிலில் உள்ள பாபா சிலையைக் காட்டினார். அந்தச் சிலையிலிருந்து விபூதி பூத்துப்பூத்துக் கொட்டிக் கொண்டே இருந்தது. பாபாவின் பூரண அருள் அந்தத் தம்பதிகளுக்கு இருப்பதைப்பார்த்து வியந்துபோனேன். நம் கண்ணுக்குப் புலப்படாத, அறிவுக்கு எட்டாத நிறைய சக்திகள் மண்ணில் இருக்கின்றன. அப்படி ஒரு மாபெரும் சக்திதான் சாயிபாபா. என்னை பாபாவின் புகழ்பாடும் ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். அங்கே ‘பாபா தி பாஸ், பாபா தி மாஸ்’ என்று பேசினேன்.

பாபாவால் நடந்த அற்புதம்!

14 வருடங்கள் முன்பு கால் மூட்டு நழுவி அலுவலகத்தில் அனைவர் முன் விழுந்தேன் . என்னோடு சேர்ந்து என் நம்பிக்கையும் விழுந்தது. அறுவைச்சிகிச்சை இல்லாமல் எலும்பு முறிவிற்கு சிகிச்சை பெற்றேன். ஆனால் எப்போது வேண்டுமானாலும் மூட்டு நழுவி விழலாம் என்ற பயம் வளர்ந்தது.

சிவப்பு உடையில் பாபா
சிவப்பு உடையில் பாபா

இரு கால்களிலும் KNEE Cap அணிய ஆரம்பித்தேன் . சிவப்பு உடையில் பாபா என் கண் முன்னர் தோன்றினார். 'என் மேல் நம்பிக்கை இருந்தால் இதைக் கழட்டு. இனி நீ வாழ்க்கையில் என்றும் விழ மாட்டாய்' என்று சொல்லி மறைந்தார். சாய்பாபா யார் என்று என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. ஆனாலும் ஒரு நம்பிக்கையில் அதைக் கழட்டிவைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். எது என்னை நடக்க வைத்ததோ அது என்னை வாழ வைத்து வழிகாட்டுகிறது.

- வி. உமாமகேஸ்வரி

சாயிபாபா உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை ஆனந்த விகடன், 757 அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கோ, saibaba@vikatan.com மின்னஞ்சலுக்கோ எழுதி அனுப்புங்கள். சிறந்த அனுபவங்கள் வெளியிடப்படும்.