Published:Updated:

திருவிழாவிற்குத் தயாராகும் பண்ணாரி! பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது!

குண்டம் விழா

திருவிழாவிற்குத் தயாராகும் பண்ணாரி ! இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விழாக்கோலம் அடையும் பண்ணாரி அம்மன்.

திருவிழாவிற்குத் தயாராகும் பண்ணாரி! பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது!

திருவிழாவிற்குத் தயாராகும் பண்ணாரி ! இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விழாக்கோலம் அடையும் பண்ணாரி அம்மன்.

Published:Updated:
குண்டம் விழா

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலார்ந்த சூழலில், மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன். தமிழக - கர்நாடக எல்லையில் இருக்கும் வனப்பகுதி என்பதால், இரு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கும் பிரியமான தெய்வமாகத் திகழ்கிறாள் இந்த அன்னை. கொரோனா பெருந்தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குண்டம் திருவிழா நடைபெறவில்லை. மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் நிலையில் இத்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பண்ணாரி அம்மனின் புகழைப் பாரெங்கும் பரப்பும் திருவிழாதான், குண்டம் இறங்கும் திருவிழா. அன்றைய தினத்தில் இத்திருக்கோயில் பக்தர்கள் வனப்பகுதிக்குள் சென்று மரங்களை வெட்டி வந்து, மலைபோல குவித்து, தீ மூட்டி மிகப் பிரமாண்டமான அக்னி குண்டத்தை உருவாக்குவார்கள்.

மாரியம்மன்
மாரியம்மன்

முதலில், கோயிலின் தலைமை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கி நடந்து வர, அவரைத் தொடர்ந்து பக்தர்களும், அவர்கள் வளர்க்கும் கால்நடைகளும் அக்னி குண்டத்தில் இறங்கிவந்து அம்மனை வேண்டுவது பல நூறு ஆண்டுகளாக நடைபெறும் விழாவாகும். இப்போதும் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் இத்திருக்கோயிலில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழாவில் தென் மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு குண்டம் இறங்கி, பண்ணாரி அம்மனின் பூரண அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர்.

குண்டம் திருவிழாவின் தொடக்கமாகக் கடந்த 7 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அம்மனை சப்பரங்களில் வைத்து வீதி உலா செல்ல தொடங்கினர்.சத்தியமங்கலம் மற்றும் அவற்றைச் சுற்றி உள்ள கிராமங்களுக்கு உலா சென்று 15 ஆம் தேதி சப்பரங்கள் கோவில் வந்தடைந்தது.அன்று இரவே திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்வும் நடந்தேறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குண்டம் விழா
குண்டம் விழா


மார்ச் 16ஆம் தேதி முதல் இரவு 7.00 மணிக்கு மேல் மலைவாழ் மக்களின் தாரை தப்பட்டை,மீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டம் போன்றவை நடைபெற உள்ளது.
இறுதியாக 21-ஆம் தேதி இரவு 1.00 மணிக்குத் திருக்குளம் சென்று அம்மன் அழைத்தல்,வரம் பெறுதல் நிகழ்வைத் தொடர்ந்து 22ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்வும் அரங்கேற உள்ளது.

இங்கு வரும் பக்தர்களுக்கு, கோயிலில் அமைந்துள்ள புற்று மண்ணே விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கண், கை கால் போன்ற உறுப்புகளில் வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருப்பவர்கள், அதேபோன்ற உறுப்புகளை வாங்கி, கோயிலில் சமர்ப்பித்து பிரார்த்திக்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகள் விரைவில் நீங்கும் என்பது நம்பிக்கை.

குண்டம் விழா
குண்டம் விழா

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் 9 வரை.

எப்படிச் செல்வது..? சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் அமைந்திருக்கும் பண்ணாரிக்குச் செல்ல, சத்தியமங்கலத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.


சக்தி விகடன் பக்கத்தில்,நேரலையும்,நிகழ்வுகளின் படங்களும் பகிரப்படும்.இணைந்திருங்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பக்தர்களுக்கு :திருவிழா நிகழ்வுகளுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படியே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே குண்டம் இறங்கும் இடத்திலும் மற்றும் திருக்கோயில் சன்னதிக்குள்ளும் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism