ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

திருமாலும் நெல்லிக்கனியும்!

நெல்லிக்காய்
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லிக்காய்

நெல்லிக்காய்

எந்த வீட்டில் நெல்லிமரமோ, நெல்லிக்கனிகளோ இருந்து கொண்டே இருக்கின்றனவோ, அங்கு செல்வகடாட்சம் நிறைந்து இருக்கும் என்பது திருமகளின் வாக்கு.

நெல்லிக்காய்
நெல்லிக்காய்


 'நெல்லி எங்கு இருக்கிறதோ, அங்கு நான் வாசம் செய்வேன்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். நெல்லி மரம் இருக்கும் இடத்தில் மகா விஷ்ணு திருமகளுடன் உறைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

 நெல்லி இலைகளால் அர்ச்சிப்பதாலும், நெல்லிக்கனியை சமர்ப்பிப்பதாலும், தானம் செய்வதாலும் விஷ்ணு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.

 பிரம்மனால் உருவாக்கப்பட்ட நெல்லி மரம் காமம், கோபம், மயக்கம் போன்ற தீய குணங்களைப் போக்கும் வல்லமை படைத்தது என்கிறது கந்த புராணம்.

 துவாதசி அன்று உணவில் நெல்லிக்கனியை சேர்த்துக் கொண்டு ஏகாதசி விரதத்தைப் பூர்த்தி செய்பவர்கள், கங்கையில் நீராடிய பலனையும், காசியில் வசித்த பலனையும் பெறுவர்.

 அதியமான், தனக்குக் கிடைத்த உயிர் காக்கும் நெல்லிக்கனியை ஒளவையாருக்குக் கொடுத்து உண்ணச் சொல்லி மகிழ்ந்தான் என்கிறது வரலாறு.

 வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமம் தாம்பூலத்துடன், நெல்லிக்காயையும் சேர்த்துக் கொடுத்தால் மங்கல வாழ்வு கிட்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.

 கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் நீங்கிட, வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குச் சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு நெல்லிக்கனியைத் தானம் செய்வது நல்ல பலன் அளிக்கும்.

 நெல்லிமரக் கன்றுகளை வளர்க்கும் விதம், அவற்றை மற்றவர்களுக்குத் தானமாக அளிப்பதால் நோய்களும் தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

 புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, மெல்லிய இனிப்பு ஆகிய 4 சுவைகளும் இருப்பதால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையுமே சமன்படுத்தக்கூடிய வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு.

 மஹாஞானி சுச்ருதர் 'நெல்லிக் கனியின் புளிப்புத் தன்மை, இளமையைத் தரும் காயகல்பம், அதுவே தேவாமிர்தம்’ என்கிறார்.

 சரக முனிவர் சரக சம்ஹிதை என்ற நூலில் ‘நெல்லிக்கனியின் சாறு இதயக் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்து’ என்று குறிப்பிட்டுள்ளார். நெல்லிக்கனி இன்றி காயகல்பம் செய்ய முடியாது என்கிறது ஆயுர்வேதம்.

 இயற்கையின் படைப்பில் உன்னத கனி நெல்லி. இதில் நார்ச் சத்து, புரதம், மாவுச் சத்து, தாதுப் பொருள்கள் ஆகியவை உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், வைட்டமின் பி மற்றும் சி இதோடு காலிக் அமிலமும் பாலிபீனாலும் உள்ளதாக அறிவியலும் கூறும்.

 'நெல்லிக்காய் உண்டால் பல நோய்கள் சொல்லிக்காமல் போகும்' என்பது மக்கள் மொழி.