Published:Updated:

பிள்ளை வரம் அருளும் திரைலோக்கிய கெளரி விரதம்

கெளரி விரதம்
பிரீமியம் ஸ்டோரி
News
கெளரி விரதம்

பூசை ச.அருணவசந்தன்

கெளரி விரதம் என்றதும் நம் எல்லோருக்கும் தெரிந்த கேதார கெளரி விரதமே நினைவுக்கு வரும். அந்த விரதத்தைப் போன்றே கெளரி தேவிக்கு உரிய மேலும் பல விரதங்கள் உண்டு.

உலக மக்களுக்குத் தேவையான பதினாறு செல்வங்களையும் அருளும் பதினாறு வடிவங்களாக கெளரிதேவி அருள்புரிகிறாள் என்கின்றன ஞானநூல்கள். தேவியின் பதினாறு திருவடிவங்களையும் தரிசித்து, முறைப்படி வழிபட்டால் சகல சம்பத்துகளும் உண்டாகும்.

அமிர்த கௌரி, சுமித்ரா கௌரி, யோக கௌரி, வஜ்ர ச்ருங்கல கௌரி, கஜ கௌரி, சுயம் கௌரி, சுயம்வர கௌரி, சுந்தர கௌரி, மோஹன கௌரி, விஜய கௌரி, வரதான கௌரி, சத்யவீர கௌரி, சொர்ண கௌரி, சாம்ராஜ்ய மகா கௌரி, அசோக கௌரி, விஸ்வபுஜா மகா கௌரி என 16 கௌரிகள் தனித்தனியே பல பலன் களை அளிக்க வல்லவர்கள்.

பிள்ளை வரம் அருளும் திரைலோக்கிய கெளரி விரதம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவர்களில், மோஹன கௌரி எனும் திரைலோக்கிய கௌரியின் விரத நாள், தை மாதம் 24-ம் நாள் வருகிறது (6.2.2021). இந்த விரதம் பிள்ளை வரம் அளிக்கவல்லது. இந்த விரதம் குறித்து அறியுமுன், கெளரி வழிபாட்டின் மகிமைகள் மற்றும் நியதிகளை அறிந்துகொள்வோம்.

இல்லறத்தைச் செழிக்கவைக்கும் வழிபாடு

கெளரிதேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமம். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள்.

ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினாள்.

உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் ‘கெளரி’ என்று அழைக்கப்பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்) என்கின்றன ஞானநூல்கள்.

ஸ்ரீகெளரி வழிபாடு இல்லறத்தை செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு. அது வீட்டில் செல்வம், தான்யம், மனமகிழ்ச்சி ஆகியவை நிறையும்படி செய்கிறது. முன்னாளில் பெண்கள் நல்ல கணவனை வேண்டி கெளரி விரதம் நோற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வழிபாட்டு நியதிகள் என்னென்ன?

கெளரி தேவியை திருவுருவமாக அமைத்து வழிபட முடியாதபோது, பூரண கும்பங்களை நிறுவி அவற்றில் கெளரிதேவியை நிலைப்படுத்தி இயன்ற உபசாரங்களைச் செய்து வழிபடலாம். பதினாறு விளக்கு களை ஏற்றி வைத்து அவற்றுக்கு மாலை சூட்டி அவற்றில் அம்பிகையை நிலைப்படுத்தியும் வழிபடுவர்.

பிள்ளை வரம் அருளும் திரைலோக்கிய கெளரி விரதம்

நம் வீட்டிலுள்ள அம்பாள் திருவுருவப்படத்தை அலங்கரித்து, கெளரிதேவியாக பாவித்து சந்தன-குங்குமத் திலகமிட்டு மலர்கள் சமர்ப்பித்து வணங்கலாம்.

அதேபோல், கெளரி வழிபாட்டின் ஒரு அங்கம், அன்பர்களுக்கு உணவிடுவது ஆகும். அவளுடைய பூஜையில் கலந்துகொண்டு பிரசாதங்களை உண்டு மகிழ்பவர்களைக் கண்டு அவள் மகிழ்கிறாள் என்கின்றன ஞானநூல்கள்.

கெளரி வழிபாடு ஒரு கூட்டு வழிபாடு. பெண்கள் இல்லங்களில் தனித்தனியாக விரதமிருந்து இந்த பூஜையைச் செய்தாலும், பூஜை முடிந்தபிறகு அருகிலுள்ள பெண்களை அழைத்து, அவர்களுக்குத் தேங்காய், ஆடைகள், பழம், தாம்பூலம், குங்குமம் முதலான செளபாக்கியத் திரவியங்களை அளித்து வணங்கி ஆசிபெற வேண்டும். அவர்கள் கூறும் நல்லாசி மொழிகள் மூலம் கெளரிதேவி வரமளிப்பதாக எண்ணவேண்டும்.

திரைலோக்கிய கௌரி விரதம்

மோஹன கௌரி எனும் திரைலோக்கிய கௌரி விரத நாளில் கணபதியைத் தாங்கி இருக்கும் கௌரி தேவியை வணங்கி விரதமிருந்தால் சந்தானப் பாக்கியம் கிட்டும்.

துன்பத்தில் வீழாது இருக்கவும், மாயை களில் சிக்கி மனவருத்தம் கொள்ளாமல் இருக்கவும் இந்த கௌரி அருள்புரிவாள். உடலுக்கு உற்சாகத்தையும், மனத்துக்கு தெய்விக சக்திகளையும் அளிப்பவள் இந்த தேவி. இவளுடன் திரைலோக்கிய (மோஹன) கணபதி வீற்றிருப்பதால், சகல காரியங்களிலும் ஸித்தியையும் அளிப்பாள்.

இந்த விரத நாளில் ஒரு வேளை உபவாசம் இருந்து தேவிக்குக் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது நிச்சயம். இந்நாளில் காலை 7:30 முதல் 8:30 மணிக்குள் அம்பிகை படத்தை அல்லது திருவிளக்கை அம்பாளாக பாவித்து மலர்கள் சாத்தி அலங்கரித்து, தீபமேற்றி, தூபமிட்டு வழிபட வேண்டும்.

பூஜையில் அனைத்துமே மஞ்சள் வண்ணத்தில் இருப்பது சிறப்பாகும். முருகப்பெருமானை மணக்க தெய்வயானை அனுஷ்டித்த விரதம் இது எனப்படுகிறது. எனவே கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருப்பது விசேஷம். இதனால், விரைவில் கல்யாண வரம் கிடைக்கும்!