அனுதினமும் கீழ்க்காணும் ஸ்லோகம் சொல்லி வழிபட்டால், நவகிரகங்களின் நல்லருளைப் பெறலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் நம்மைவிட்டு விலகும்.
ஆரோக்கியம் ப்ரதாது கோ திகைர
சந்த்ரோ யசோநிர்மலம்
பூதிம் பூமிசுத; சுதாம் சுதநய:
பிரக் ஞாம் குருர் கௌரவம் காவ்ய்;
கோமள வாக் விலாஸ மதுலம் மந்தோ
முகம் ஸ்ர்வதா ராஸூர் பாஹீ பலம்
விரோத சமனம் கேது குலஸ்தியோ நதிம்.

கருத்து: `ஆரோக்கியத்தைச் சூரியனும் கீர்த்தியைச் சந்திரனும் ஐஸ்வர்யத்தை அங்காரகனும் நல்ல புத்தியைப் புதனும் நல்லமதிப்பை பிரகஸ்பதியும் பேசும் திறமையைச் சுக்கிரனும் தயக்கமின்மையை சனியும் சத்ரு நிவர்த்தியை ராகுவும் குலத்தின் வளர்ச்சியைக் கேதுவும் தரட்டும்' என்பதே மேலே சொன்ன ஸ்லோகத்தின் பொருள்
- முருகேசன், தேனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism