சிதம்பரத்தில் சாயங்காலம் 2-ஆம் கால பூஜையின்போது இறைவனுக்கு சம்பா சாதத்துடன், கத்திரிக்காய் கொத்சு நைவேத்தியம் படைப்பது விசேஷம். அதேபோல் இன்னும் சில பிரசாத தகவல்கள்...
கேரளாவில், கூடல்மாணிக்க க்ஷேத்திரம் என்ற ஊரிலும் கத்தரிக்காய் நைவேத்தியம் பிரபலம்.
மார்கழி மாதம் குருவாயூரப்பன் ஆலயத்தில் குசேல தினம் கொண்டாடப்படுகிறது. அன்று முழுவதும் குருவாயூரப்பனுக்கு அவல் சம்பந்தப்பட்ட நிவேதனமே சமர்ப்பிக்கப்படும்.

மானசரோவரின் கரையில் பழைமையான புத்தர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு வேக வைத்த கிழங்குடன், பிஸ்கட்டையும் பிரசாதமாகத் தருகின்றனர்.
ஸ்ரீரங்கம்- ரங்கநாதருக்கு, தேங்காயை உடைத்து நைவேத்தியம் செய்வதில்லை. தேங்காயைத் துருவி அந்தத் துருவலையே படைக்கிறார்கள். தேங்காயை உடைத்தால் அந்த சத்தம், பள்ளிகொண்டிருக்கும் இறைவனை எழுப்பிவிடும் என்பது ஐதிகமாம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகுற்றாலத்தில் குற்றால நாதருக்கு, நாள்தோறும் சுக்கு, மிளகு போட்டு கஷாயம் வைத்து படைக்கிறார்கள்.
தஞ்சை பெருவுடையார் கோயிலில் பச்சை வாழைப்பழம் பிரசாதமாக விநியோகிக்கப்படுவது விசேஷம்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக ஸ்வாமி திருக்கோயிலில், கோரைக் கிழங்கைப் பக்குவமாகச் சமைத்து பகவானுக்குப் படைத்து வழிபடுவர்.

திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியம் மிகவும் வித்தியாசமானது. காலை வேளைகளில் புழுங்கல் அரிசிச் சோறும் கீரையும் படைக்கப்படுகின்றன. இரவில் வேகவைத்த பாகற்காயுடன் அன்னம் படைக்கப்படுகிறது. இவற்றை ஈசனின் கருவறைக்கு முன் உள்ள கருங்கல் மேடையில் சமர்ப்பிக்கிறார்கள்.
திருச்செந்தூர் ஸ்ரீஆறுமுகப் பெருமானுக்கு உதய மார்த்தாண்ட நைவேத்தியம் விசேஷம். அதாவது தோசையும், கஞ்சியும்!
- ஆர்.மகாதேவன், திருநெல்வேலி