Published:Updated:

திருமுருகாற்றுப்படையைப் பாடினால் என்ன கிடைக்கும்? - தினம்தோறும் திருவருள் #Video

முருகப்பெருமான் - திருமுருகாற்றுப்படை
முருகப்பெருமான் - திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படையைப் பாடினால் என்ன கிடைக்கும்? - தினம்தோறும் திருவருள் #Video

சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக அமைவது திருமுருகாற்றுப்படை. இதை எழுதியவர் நக்கீரர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகளைச் சொல்லி அதைப் போற்றினால் நாம் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதுதான் அதன் கருத்து. பொதுவாகவே ஆற்றுபடை என்பது வழிப்படுத்துவது என்பதைக் குறிக்கும். வறியவர் ஒருவரை செல்லும் பாதையில் சந்திக்கும் புலவர், தாம் வள்ளலிடம் பெற்ற செல்வங்களைக் குறிப்பிட்டு வள்ளலின் வள்ளல் தன்மையினை எடுத்துரைத்து அவரிடம் செல்ல வேண்டிய வழியையும் காட்டி அருள்வதே ஆற்றுப்படை. முருகப்பெருமானோ வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல்.

குன்றத்தூர் முருகன்
குன்றத்தூர் முருகன்

சிவபூஜை செய்யும்போது பிழை செய்பவர்களை 'கற்கிமுகி' என்னும் பூதம் தூக்கிச் சென்று சிறை வைத்து விடுமாம். ஆயிரம் பேர் சிறைப்பட்டதும் அவர்களைத் தின்றுவிடுவதாக அதற்கு சங்கல்பம். நக்கீரர் சிவபூஜை செய்யும்போது இயற்கையின் விநோதம் ஒன்றைக் கண்டு கவனம் சிதறுகிறார். உடனே அந்த பூதம் கவர்ந்துகொண்டு சென்று சிறையில் அடைத்துவிடுகிறது. ஏற்கெனவே உள்ளே தொள்ளாயிரத்துத் தொன்னூற்றி ஒன்பது பேர் சிறையில் இருக்க ஆயிரமாவது நபராக நக்கீரர் சிறைப்பட்டார்.

இப்போது ஆயிரம் பேரையும் அந்த பூதம் உண்ணப்போகிறது என்னும் நிலை. நக்கீரர் முருகப்பெருமானைத் துதித்தார். அவனின் அறுபடை வீடுகளின் பெருமையையும் ஆற்றுப்படையாகப் பாடினார். அதில் மனம் மகிழ்ந்த முருகப்பெருமான் ஆயிரம் பேரையும் சிறையிலிருந்து விடுவித்து பூதத்தையும் கொன்றார் என்கிறது புராணம்.

பொதுவாகவே பக்தர்களில் சிலர் தாம் பாராயணம் செய்யும் பதிகத்தால் பாசுரத்தால் என்ன பயன் விளையும் என்னும் கேள்வியை முன்வைப்பார்கள். அதற்காகவே பதிகங்களில் பலஸ்துதியையும் சேர்த்துப் பாடும் பழக்கமும் இருந்துவருகிறது. அவ்வாறு திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன் யாது என்று சொல்லப்படவில்லை. ஆனால் நுட்பமாக அந்த சரித்திரத்தைப் புரிந்துகொண்டால் விளங்கிவிடும். ஆனாலும் சிலர் கேட்பது உண்டு. அப்படிக் கேட்பவர்களுக்கான பதிலை இன்றைய தினந்தோறும் திருவருள் பகுதியில் பகிர்கிறார் சுமதி ஶ்ரீ. திருமுருகாற்றுப்படை மட்டுமல்ல எந்தத் துதியாக இருந்தாலும் அதை எப்படிச் சொல்லவேண்டும்? அதனால் கிடைக்கும் பயன் என்ன என்பது குறித்து அவர் தரும் விளக்கத்தை அறிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு