Published:Updated:

மதிசூடி துதிபாடி

புத்தகம் புதிது
பிரீமியம் ஸ்டோரி
புத்தகம் புதிது

புத்தகம் புதிது

மதிசூடி துதிபாடி

புத்தகம் புதிது

Published:Updated:
புத்தகம் புதிது
பிரீமியம் ஸ்டோரி
புத்தகம் புதிது

சிவபாத இருதயர் சீர்காழி திருக்குளத்தில் நீராடச் சென்றபோது, அவருடைய மூன்று வயது ஞானசம்பந்தப் பிள்ளையும் உடன் சென்றார்.

புத்தகம் புதிது
புத்தகம் புதிது


தந்தை நீராடியபோது குளக்கரையில் அமர்ந் திருந்த குழந்தை அவரைக் காணாமல் அழுதது. பார்வதிதேவி குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டி மறைந்தார். நீராடி வந்த தந்தை மகன் வாயில் பால் இருந்ததைக் கண்டு `நீ யார் கொடுத்த பாலை குடித்தாய்?' என்று கேட்டு கையை ஓங்கினாராம். உடனே அந்த ஞானக்குழந்தை

`தோடுடைய செவியன்

விடை யேறி தூவெண் மதிசூடி

காடுடைய சுடலைப் பொடி பூசி

என் உள்ளம் கவர் கள்வன்' என்று பாட ஆரம்பித்தது. இப்பாடலில் முதலடியில் உள்ள ‘மதிசூடி’ என்னும் அருமையான பதத்தைத் தலைப்பாகக் கொண்டுள்ள இந்த பக்திப் பாமாலை நூல், 21-ம் நூற்றாண்டில் வந்த புதிய தேவாரம் என்று சொல்லலாம்.

`வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்' எனும் அருளாளர் வாக்கிற்கிணங்க, இறைவன் அவ்வப்போது அடியார்கள் உளத்திருந்து, எனதுரை தனதுரையாகப் பாடவைத்து மகிழ்கிறான். `யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது' என்பார் அருணகிரிநாதர்.

தற்போது, அமெரிக்காவில் வசிக்கும் திருச்செல்வர் வி.சுப்பிரமணியன் என்னும் அடியாரை ஈர்த்து ஆட்கொண்ட சிவபெருமான், தேவாரப் பாடல்களைப் போல இலக்கணத்துடன் மரபுக் கவிதைகளை மளமளவென்று பாடவைத்து இன்புறுகிறார்.

அன்பர் வி.சுப்பிரமணியன் 1908-ம் ஆண்டில் திருச்சியில் பிறந்து, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT - MADRAS) பி.டெக் பட்டமும், கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (IIM), எம்.பி.ஏ பட்டமும் பெற்று 30 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் கணினித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

`சிவசிவா' என்று அனைவரும் அவரை அழைப்ப தற்கு ஏற்ப, வாரம்தோறும் தேவார வகுப்புகளுடன் தமிழ் மொழி தெரியாதவர்களுக்கும் ஆங்கிலத்தில் சொல்லி புரியவைத்து பணி செய்கிறார். 2007 முதல் 2010 வரை அவர் படைத்துள்ள 907 பாடல்களைக் கொண்ட முதல் தொகுதி `மதிசூடி துதிபாடி' என்ற அருமையான தலைப்புடன் வெளிவந்துள்ளது.

இதில் 51 தலப் பதிகங்கள், 31 பொதுப் பதிகங்கள் என்று வகைப்படுத்தி உள்ளார். இந்த நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் அவரே குறிப்புரை எழுதி, அவரே ஒளியச்சு செய்து அச்சகத்தில் புத்தகமாக உருவாக்கும் வகையில் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு பதிகத்தின் தொடக்கத்திலும் அது என்ன யாப்பில் என்ன வாய்ப்பாட்டில் பாடப் பெற்றுள்ளது என்ற இலக்கணக் குறிப்பையும் காணும் போது அவரது இலக்கண அறிவு, மரபு வழிப் புலமை முதலியன நம்மை வியக்க வைக்கின்றன.

சென்னையிலுள்ள பி.நாகராஜன் எனும் சிவநெறிச் செல்வர் ‘மதிசூடி நிலையம்’ எனும் தமது இல்ல முகவரியில் இந்நூலை வெளியிட்டுள்ளார். அவர் நமக்கு அனுப்பி வைத்த பிரதியை ஆங்காங்கே படித்து பார்த்த போது, நாம் அடைந்த வியப்புக்கு எல்லை யில்லை. அமெரிக்காவிலுள்ள அன்பர் வி.சுப்பிரமணியனுடன் தொலைபேசியில் பேசினோம்.

``எப்போது எப்படி இதனைப் பாடினீர்கள்?'' என்று கேட்டதற்கு, ``அவ்வப்போது மன அலைகளில் தோன்றும் செய்திகள் பாடலாக உருவெடுக்கும். தேவார மூவர் பாடியுள்ள சந்தங்களை அசை போடுவேன்.

இன்று காலையில்கூட ‘நிலையாத சமுத்திரமான...’ என்று தொடங்கும் திருத்தணித் திருப்புகழைச் சிந்தித்தபோது, அதே சந்தத்தில் அஷ்ட வீரட்டத் தலத்தில் ஒன்றான ‘வழுவூர்’ வீரட்டத்திற்கு ஒரு பதிகம் வந்தது” என்று பதில் அளித்தார். நமக்கு ஆச்சரியம்!

`எத்தனை விதமான பாடல்கள்! எந்தப் பாடல் வகையை எடுத்தாலும் அந்தப் பாவினத்தின் முழு அழகையும் அதில் கொண்டு வரும் வித்தகர் சிவசிவா. அவரின் பாடல்களில் பெரும்பாலும் தலையாகு எதுகைகள் அமைவதைப் பார்க்கலாம்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, தேவாரத்தின் ருசி, பக்தியின் வெளிப்பாடு இலக்கண வித்தகம், உணர்ச்சி விகசிப்பு, கவிதை நயம், எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழைக் கையாண்டிருக்கும் அழகு ஆகிய அனைத்தையும் காண முடியும்' என்று அணிந்துரையில் ஆத்மார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். கவிமாமணி இலந்தை ராமசாமி.

‘சந்த வசந்தம்’ என்ற குழுமத்தில் மரபிலக்கணம் சார்ந்த கவிதைகளை அறிமுகப்படுத்தி வருபவர் இவர்.

`சிவசிவா' சுப்பிரமணியன் தாய்நாடு வரும் போது, ஒன்றிரண்டு நாட்கள் தமிழகத்தில் பல சிவத்தலங்களைத் தரிசித்து, சம்பந்தர் பாடியது போன்று `பேச வருவார் ஒருவர்' என்ற முறையில் பெருமானோடு உறவாடி வருவார் போலிருக்கிறது!

`சிவசிவா சுப்பிரமணியன் மூலம் சிவம் வெளிப்படுத்தியிருக்கும் இந்தப் பாடல்களில் எல்லாம் திருமுறையின் மொழியை, வீச்சை உட்கிடக்கையை, அமைப்பைத் தாராளமாகக் காணலாம்' என்று இசைக்கவி ரமணன் பாராட்டியுள்ளார்.

`சிவசிவா' சுப்பிரமணியன் படைப்பில் 2-வது தொகுதியும் விரைவில் வர உள்ளது. அவரின் சிவப்பணி பெருகி வளர இறையருளை வேண்டி வாழ்த்துவோம் (தொடர்புக்கு பி.நாகராஜன்: 98410 24669).

பதிகங்கள்

கந்த மாமலர் கைக்கொடு நாள்தொறும்

சந்தமார்தமி ழாலடி போற்றுவார்

முந்தை வல்வினை முற்றிலும் தீர்த்திடும்

அந்தண் ஆலவாய் மேவிய அண்ணலே

(ஆலவாய் கலிவிருத்தம்)தாயவன் தத்துவன் சங்கரன் தந்தையும்

ஆயவன் கேளவன் மண் புனல் காற்று விண்

தீயவன் பத்தருள் நிற்பவன் நீதிலாத்

தூயவன் பேர்நிதம் சொல்லுவார்க் கின்பமே

(பொது - சந்தக் கலிவிருத்தம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism