Published:Updated:

இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியுமா? - அதிகாலை சுபவேளை!

கந்தக் கடவுள்
கந்தக் கடவுள்

இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியுமா? - அதிகாலை சுபவேளை!

இன்றைய ராசிபலன்

18.6.21 ஆனி 4 வெள்ளிக்கிழமை

திதி: அஷ்டமி மாலை 4.45 வரை பிறகு நவமி

நட்சத்திரம்: உத்திரம் மாலை 6.14 வரை பிறகு அஸ்தம்

யோகம்: சித்தயோகம் மாலை 6.14 வரை பிறகு அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

காளிகாம்பாள் கோயில் உற்சவம் - அதிகாலை சுபவேளை!
காளிகாம்பாள் கோயில் உற்சவம் - அதிகாலை சுபவேளை!

சந்திராஷ்டமம்: அவிட்டம் மாலை 6.14 வரை பிறகு சதயம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: காளிகாம்பாள்

இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியுமா? - அதிகாலை சுபவேளை!

மனிதர்களுக்கு இறை நம்பிக்கையைப் போலவே ஆவி நம்பிக்கையும் உள்ளது. கிராமப் புறங்களில் விளையாட்டாக ஒரு வாசகம் சொல்வார்கள். அதாவது, ‘சாமியைப் பார்த்தேன் என்று சொன்னால் ஒருவனும் நம்ப மாட்டான். ஆனால் பேயைப் பார்த்தேன் என்று சொன்னால் எல்லோரும் நம்புவார்கள்’ என்று. இந்த வரி கேட்பதற்கு நகைச்சுவையைப் போலத் தோன்றினாலும் இது சமூகத்தில் இருக்கும் ஆவி குறித்த ஆழ்ந்த நம்பிக்கையைப் பேசுகிறது. நாம் பல ஆலயங்களில் பேய் பிடித்து ஆடுகிறவர்களையும் சில இடங்களில் பேய்களோடு தொடர்பு கொண்டு பேசுகிறவர்களையும் பார்த்திருப்போம். தங்களின் இனிய உறவுகளை இழந்தவர்கள் எப்படியேனும் இறந்தவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் கடைசி ஆசை என்னவாக இருந்தது என்று அறிந்துகொள்ள விரும்புவதுதான். ஆனால், இவை எல்லாம் உண்மையா... அவ்வாறு இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேசமுடியுமா என்னும் கேள்விக்கான விடை குறித்த வாதங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

மகிழ்ச்சி : நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலை வாய்க்கும். குடும்ப உறுப்பினர்களோடு இருந்த பிணக்குகள் நீங்கும். துணிவோடு செயலாற்றி வெற்றிபெறுவீர்கள். - ஆல் தி பெஸ்ட்!

ரிஷபம்

கவனம் : சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் தேவை. உணவு தொடர்பாக நோய்கள் ஏற்படும் என்பதால் வெளி உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். - டேக் கேர் ப்ளீஸ்!

மிதுனம்

நன்மை :முற்பகலில் சில தடை காணப்பட்டாலும் பிற்பகலில் நன்மைகள் நடைபெறும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. - நாள் நல்ல நாள்!

கடகம்

பணவரவு : பணவரவுக்குப் பஞ்சமில்லை. எதிர்பார்த்த உதவிகளும் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மனநிலை வாய்க்கும். பேச்சில் மட்டும் பொறுமை தேவை. - ஜாலி டே!

சிம்மம்

உற்சாகம் : மனதில் உற்சாகமும் நிறைந்திருக்கும். மூத்த உறவினர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் நீங்கும். பதற்றமின்றிச் செயல்பட்டால் வெற்றிகள் அதிகரிக்கும். - பதறாத காரியம் சிதறாது!

கன்னி

குழப்பம் : ராசியில் சந்திரன் இருக்கும் நாள். தேவையற்ற குழப்பங்கள் அலைமோதும். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம். இறைவழிபாடு அவசியம். - எல்லாம் அவன் செயல்!

துலாம்

ஆதாயம் : சகோதர உறவுகளால் நன்மைகள் ஏற்படும் நாள். முற்பகலில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் பிற்பகலில் தீரும். விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் சாதிக்கலாம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விருச்சிகம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். பொறுப்புகள் அதிகரித்தாலும் குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக இருப்பது ஆறுதல் அளிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. - என்ஜாய் தி டே!

தனுசு:

சுறுசுறுப்பு : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் உண்டாகும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். ஆரோக்கியம் மேம்படும். பணவரவும் உண்டு. - ஆல் இஸ் வெல்!

மகரம்

நிதானம் : அதிகரிக்கும் செலவுகளால் தடுமாறும் நாள். சகோதர உறவுகளோடு சிறு வாக்குவாதம் ஏற்பட்டு நீங்கும். அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமல் இருப்பது நல்லது. - நா காக்க!

கும்பம்

விவாதம் : வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். கூடுமானவரை விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இறைவழிபாடு அவசியம் - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

மீனம்

வெற்றி : செயல்கள் வெற்றிகரமாக முடியும். பணவரவுக்குக் குறைவில்லை. எதிரிகளால் உண்டான தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். - வெற்றிக்கொடிகட்டு!

அடுத்த கட்டுரைக்கு