Published:Updated:

நேற்றுவரை தீயவழியில் இருந்தவர் இன்று நல்லவராக மாறிவிட்டால் அவர் செய்யும் உபதேசத்தைக் கேட்கலாமா?

பக்தி
பக்தி

நேற்றுவரை தீயவழியில் இருந்தவர் இன்று நல்லவராக மாறிவிட்டால் அவர் செய்யும் உபதேசத்தைக் கேட்கலாமா?

இன்றைய பஞ்சாங்கம்

1. 6. 21 வைகாசி 18 செவ்வாய்க்கிழமை

திதி: சஷ்டி காலை 6.49 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: அவிட்டம் இரவு 9.33 வரை பிறகு சதயம்

யோகம்: சித்தயோகம் இரவு 9.33 வரை மரணயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

சந்திராஷ்டமம்: புனர்பூசம் இரவு 9.33 வரை பிறகு பூசம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

நேற்றுவரை தீயவழியில் இருந்தவர் இன்று நல்லவராகிச் செய்யும் உபதேசத்தைக் கேட்கலாமா?

ஒருவர் தன் கடந்த காலத்தில் தீய வழியில் இருந்திருப்பார். பின்பு இறையருளால் நல்வழிக்குத் திரும்பியிருப்பார். அப்படி நல்வழி திரும்பியது தனிப்பட்ட அனுபவத்தினால் என்பதால் அவர் நல்லுபதேசங்களை மற்றவர்களுக்குச் சொல்வார். நம் மரபில் அப்படித் தீய வாழ்வில் இருந்து நன்னெறிக்கு மாறிய ஞானிகள் அநேகர். இப்போதும் அப்படிப்பட்ட சிலரை நாம் வாழ்க்கையில் சந்திப்போம். அப்படிப்பட்டவர்கள் செய்யும் உபதேசத்தை சிலர் ஏற்க மறுப்பார்கள். ‘உன்னைப்பற்றித் தெரியாதா...’ என்று அவர்களின் பழைய வாழ்வை நினைத்து அவமதித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். கடந்த காலத்தில் கெட்டவர்களாக இருந்து நல்லவர்களாக மாறிவிட்டவர்கள் சொல்லும் உபதேசங்களைக் கேட்கலாமா என்னும் கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. அதற்கான பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

சாதகம் : நன்மைகள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். - சாதகமான ஜாதகம் இன்று!

ரிஷபம்

ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உணவு தொடர்பான அலர்ஜி அல்லது அஜீரணம் ஏற்படலாம். பேச்சில் பொறுமை அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்!

மிதுனம்

தெளிவு : நேற்று வரையிருந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையும். உடல்நலனில் சிறிது அக்கறை தேவை. பிற்பகலுக்கு மேல் சூழ்நிலை அனுகூலமாகும் என்பதால் கவலையில்லை. - ஆல் இஸ் வெல்!

கடகம்

கவனம் : முற்பகல் உற்சாகமாகவும் பிற்பகலில் கவனமாகவும் இருக்கவேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். சகோதர உறவுகள் உதவிக்கு வருவார்கள். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம்

ஆலோசனை : செயல்களைத் திட்டமிட உகந்த நாள். என்றாலும் செலவுகள் அதிகரிப்பதால் கவலைப்படுவீர்கள். முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசிக்க வேண்டியது அவசியம். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கன்னி

பொறுமை : பொறுமை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

துலாம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். - ஜாலி டே!

விருச்சிகம்

பணவரவு : தடைப்பட்டிருந்த பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். - என்ஜாய் தி டே!

தனுசு:

அலைச்சல் : உறவினர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம். திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - நாள் நல்ல நாள்!

மகரம்

பிரச்னை : சின்னச் சின்னப் பிரச்னைகள் தோன்றிமறையும். யாரிடமும் கோபத்தைக்காட்ட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கும்பம்

குழப்பம் : குழப்பங்களால் மனம் அலைபாயும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தினரோடு வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

மீனம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொடங்கும் செயல்கள் சாதகமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளிக்கு ஆதரவாக இருப்பார்கள். - பெஸ்ட் ஆஃப் லக்!

அடுத்த கட்டுரைக்கு