ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

புத்தனாக மாற ஆசைப்படலாமா?

புத்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தன்

குட்டிக் கதைகள்

ஜென் குரு ஒருவரிடம் வந்த சீடன், ‘`துன்பத்தில் இருந்து விடுபட்டு, புத்தராக மாற விரும்புகிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான். குரு, ‘`இவனை மடாலயத்தில் இருந்து உடனே வெளியேற்றுங்கள்’’ என்று தன் சீடர்களுக்கு உத்தரவிட்டார்.
புத்தன்
புத்தன்
Rakhee Verma

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவனை வெளியேற்றியதற்காகப் பரிதாபப்பட்டார். ஜென் குருவிடம், ‘’அவன் தவறாக ஒன்றும் கேட்கவில்லையே. புத்தராக ஆசைப்பட்டதற்காக இப்படி அடித்துத் துரத்தலாமா?’’ என்று வினவினார்.

‘`அவனது கேள்வி முட்டாள்தனமானது. அதனால்தான் அடித்துத் துரத்தச் சொன்னேன். அப்போதுதான் மீண்டும் இந்தக் கேள்வியுடன் இங்கு அவன் வர மாட்டான். ஏற்கெனவே அவன் புத்தராகத்தான் இருக்கிறான். மேலும் முயற்சி செய்தால், அந்த நிலையை இழந்துவிடுவான். அவன் எப்படி இருக்கிறானோ, அப்படி இருப்பதே அவனுக்கு நல்லது’’ என்று விளக்கம் தந்தார் ஜென் குரு.

மேலானவர் என்றும் கீழானவர் என்றும் யாரோடும் யாரையும் ஒப்பிடுதல் தகாது. கண்ணனும் அர்ஜுனனிடத்தில் `` உன் தனித் தன்மையை எப்போதும் தக்கவைத்துக் கொள். நீ என்னவாக இருக்கிறாயோ, அதிலிருந்து வேறுபடாதே. உன் பிரதான இருப்பை நிலைப்படுத்து’’ என்றே வலியுறுத்துகிறார் கண்ணன்.

`ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது மன திருப்தி’ என்கிறது மகாபாரதம். ஆகவே, உள்ளது உள்ளபடி வாழப் பழகுவதே நல்லது.

கே. கதிரவன், சென்னை 44

புத்தனாக மாற ஆசைப்படலாமா?

பதினெட்டு பெயர்கள்!

சபரிமலையின் பதினெட்டுப் படிகளில் ஏறும்போதும், சுவாமி ஐயப்பனை தினமும் வழிபடும்போதும் கீழ்க்காணும் 18 திருப் பெயர்களை தியானித்து வணங்குவது விசேஷம்.

இந்தப் பெயர்களோடு சுவாமி ஐயப்பன் 18 படிகளிலும் அருள்வதாக ஐதீகம். ஐயனின் அந்தப் பெயர்கள்: குளத்தூர் பாலன், ஆரியங்காவு ஆனந்தரூபன், எரிமேலி ஏழைப்பங்காளன், ஐந்து மலைத்தகன், ஐங்கரச் சகோதரன், கலியுக வரதன், கருணாகரதேவன், சத்தியபரிபாலர், சற்குணசீலன், சபரிமலைவாசன், வீரமணிகண்டன், விண்ணகர் தேவன், விஷ்ணுமோகினி பாலன், சாந்தசொரூபன், சற்குணநாதன், நற்குணக் கொழுந்தன், உள்ளத்தமர்வான், ஐயப்பன். இந்தத் திருநாமங்களை தியானித்தால் ஐயப்பனின் அருள் கிட்டும்.

- எஸ்.வள்ளிநாயகம், தூத்துக்குடி