திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

நீரில் நிழலைப் பார்க்கலாமா?

நீதி சாஸ்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீதி சாஸ்திரம்

வியப்பூட்டும் தகவல்களைச் சொல்லும் அபூர்வ நூல்! - பி.சந்திரமெளலி

அன்றாட தேவைகளுக்கான பொருள்களை ஒவ்வோர் இடமாகத் தேடி அலைய அவசியமின்றி, அனைத்தையும் வாங்கிக்கொள்ள சூப்பர் மார்க்கெட் உள்ளது போன்று, நாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத் தேவையான எல்லாம் ஒரே நூலில் இருந்தால் எப்படி இருக்கும்?

நீரில் நிழலைப் பார்க்கலாமா?

ராமாயணம், மகாபாரதம், மனுஸ்ம்ருதி, பர்த்ருஹரியின் வாக்கு... என ஏராளமான நூல்களில் இருந்து அற்புதமான நீதிகளையெல்லாம் தொகுத்து, ஒரே புத்தகமாகக் கிடைத்தால் எல்லோருக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்தானே?அப்படியான ஓர் அற்புத நூல்தான் ‘நீதி சாஸ்திரம்’. எல்லோருக்கும் எக்காலத்துக்கும் பயன் தரக்கூடிய இந்நூலின் வழிகாட்டல்கள் உங்களுக்காக!

மற்றவரிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்

வயது, செல்வம், குடும்பத்தில் கலகம், மந்திரம், மருந்து, கணவன்- மனைவி சேர்க்கை, தானம், மானம், அவமானம் - இந்த ஒன்பதையும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் பாதுகாக்க வேண்டும்.

அஸ்வமேத யாகத்தின் பலனைத் தரும் செயல்கள்

ஏழைகளுக்குக் கொடுக்கும் தானம், பூஜையில்லாத கோயிலுக்குப் பூஜை நடக்க ஏற்பாடு செய்வது, அனாதைப் பிரேதத்துக்குப் பிரேத ஸம்ஸ்காரம் செய்வது ஆகிய மூன்றும் அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானமாகும்!

ஆயுளை வளர்ப்பவை; குறைப்பவை!

மாலை வெயில், ஹோமப் புகை, இரவில் பால் அன்னம் ஆகியவை ஆயுளை வளர்க்கும். காலை வெயில், பிணப் புகை, தன்னைவிட வயதில் மூத்த பெண்ணின் சேர்க்கை, குட்டையாய் தேங்கிய அழுக்கு நீர், இரவில் தயிர் சாதம் உண்ணுதல் ஆகியவை ஆயுளைக் குறைக்கும்.

வெட்கம் கூடாது எப்போது தெரியுமா?

பாடும்போது, வாத்தியம் வாசிக்கும்போது, நடனமாடும்போது, பகைவனுடன் போர் செய்யும்போது, சாப்பிடும்போது, ஏதாவது பிரச்னை-விவகாரம் என்று பேசும்போது வெட்கம் கூடாது!

தரித்திரத்தைத் தரும் செயல்கள்

கல்லின் மேல் வைத்த சந்தனத்தைப் பூசிக்கொள்வது, பூனை தீண்டிய உணவை உண்பது, நீரில் தன் நிழலைப் பார்ப்பது ஆகிய செயல்கள், ஒருவன் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவனை ஏழையாக்கிவிடுமாம்.