Election bannerElection banner
Published:Updated:

எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் தங்கவில்லையா? - இதோ 8 எளிய பரிகாரங்கள் - அதிகாலை சுபவேளை!

செல்வம் தங்க
செல்வம் தங்க

எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் செல்வம் தங்கவில்லையா? - இதோ 8 எளிய பரிகாரங்கள் - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

19. 4. 21 சித்திரை 6 திங்கள்கிழமை
திதி: சப்தமி இரவு 7.57 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: புனர்பூசம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை
நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: கேட்டை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

பணம்
பணம்

செல்வம் வீட்டில் தங்க வேண்டுமா?

சிலர் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். பணம் வருவதுபோல் இருக்கும். ஆனால் சேமிக்கவே இயலாது. இதற்கு ஆன்மிகத்தில் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கடைப்பிடித்தாலே ஓரளவு விரயங்கள் தீர்ந்து பணம் சேரத் தொடங்கும் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

ஒரு வீட்டிற்கு நாம் செல்கிறோம். அங்கே நீண்ட நாள்கள் தங்கியிருக்க வேண்டும் என்றால் அந்த இடம் எப்படிப்பட்ட இடமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம் என்று சிந்தித்தால் இதற்கான விடைகள் எளிதில் கிடைத்துவிடும் என்கிறார்கள் பெரியவர்கள்.

பொதுவாக , ஒரு வீடும் வீட்டில் உள்ளவரும் சுத்தமாக இருந்தால் நம்க்கு ரொம்பவும் பிடிக்கும். அதுபோலவே லட்சுமி தேவியும் சுத்தம் இருக்கும் இடத்தில் தங்க விரும்புவாளாம். இதன் அடிப்படை சுகாதாரமான வாழ்வுதான். சுத்தத்தைக் கடைப்பிடித்தால் நோய்நொடிகள் அண்டாது. வீண் செலவும் வராது. சுத்தமற்ற இடத்தில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகள் பல மடங்கு பெருகி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அல்லவா... இது ஆன்மிகமா இல்லை அன்றாட வாழ்வியலா... இரண்டும்தான். இப்படித்தான் நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

மேலும் ஓர் இடத்தில் நமக்கு விருப்பமான பொருள்கள் இருந்தால் அங்கேயே இருக்க விரும்புவோம் அல்லவா அதுபோன்று மகாலட்சுமிக்கு விருப்பமான பொருள்கள் சில உள்ளன. அவை உங்கள் வீட்டில் இருந்தால் உங்களிடம் வந்த செல்வம் உங்களைவிட்டுப் போகவே போகாது. அப்படிப் பட்ட பொருள்கள் எவை? பணத்தை வீட்டில் எங்கு வைத்தால் பொருள்கள் சேரும் என்னும் பல தகவல்களை கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

இன்றைய விரிவான ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம் - நிதானம் : செயல்களில் நிதானம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். செலவுகள் குறைவதால் நிம்மதி அடைவீர்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ரிஷபம் - நம்பிக்கை : மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். சகோதர உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். - நம்பிக்கை அதானே எல்லாம்!

மிதுனம் - கவனம் : செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தேவையற்ற குழப்பங்களைத் தவிருங்கள். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

கடகம் - உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும் நாள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உறவுகளுக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். - என்ஜாய் தி டே!

சிம்மம் - பொறுமை : அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. சொல்லிலும் செயலிலும் பொறுமை அவசியம். செலவுகள் அதிகரித்தவண்ணம் இருக்கும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

கன்னி - அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். மனக்குழப்பங்கள் நீங்கும். உறவினர்களிடம் கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். - ஆல் இஸ் வெல்!

துலாம் - ஆதாயம் : உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த செயல்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள். - ஆல் தி பெஸ்ட்!

விருச்சிகம் - பதற்றம் : வேலையில் பதற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் செயல்களில் தெளிவு ஏற்படும். - பதறாத காரியம் சிதறாது!

தனுசு : குழப்பம் : மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டியது அவசியம். செயல்களில் கூடுதல் கவனம் தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மகரம் - மகிழ்ச்சி : உற்சாகமான நாள். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த செயல்கள் திட்டமிட்டபடி நடந்து முடியும். - இனி எல்லாம் சுபமே!

கும்பம் - பணவரவு : எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் நாள். சகோதர உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். சாதகமான நாள். - பெஸ்ட் ஆஃப் லக்!

மீனம் - பக்தி : இறைச்சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அன்பு பிறக்கும். செலவுகளில் மட்டும் சிக்கனம் காட்டவேண்டியது அவசியம். - இறைவன் இருக்க பயம் ஏன்?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு