Published:Updated:

`வில்லுப்பாட்டுடன் விநாயகர் சதுர்த்தி!’ - இணையம் மூலம் கொண்டாடுவோம்

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

பிரணவத்தின் உருவமான விநாயகரை அவர் அவதரித்த திருநாளில் வழிபடுவதால், அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. அவ்வகையில் நம் விக்னங்கள் அனைத்தும் விலக வில்லுப்பாட்டுடன் விநாயகரைத் துதிப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் சுக்லபட்ச சதுர்த்தி கூடிய நன்னாளில்தான் முழுமுதற் கடவுளான மூஷிக வாகனன் கணநாதன் தோன்றினார். சகல தேவர்களும் ஈசனை வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவார்கள் என்றால், சர்வேஸ்வரனான அந்த மகேசனே தனது தியானத்தில் கணபதியையே தியானிக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரணவத்தின் உருவமான விநாயகரை அவர் அவதரித்த திருநாளில் வழிபடுவதால், அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. அவ்வகையில் நம் விக்னங்கள் அனைத்தும் விலக, வாழ்வில் முன்னேற்றம் உண்டாக, இன்னல்கள் அனைத்தும் நீங்கி இன்பம் சூழ, மிக விசேஷமாக வணங்கி வழிபடப்போகிறோம் விநாயகரை, ஆம்! வில்லுப்பாட்டுடன் விநாயகரின் மகிமைகளைப் பாடிக் கொண்டாடப்போகிறோம் விநாயகர் சதுர்த்தியை!

விநாயகர்
விநாயகர்

விநாயகருக்கு ஏன் வில்லுப்பாட்டு?

தமிழின் மூன்று வடிவமான இயல், இசை, நாடகம் ஆகிய அனைத்துக்கும் நாயகனாக விளங்குபவர் விநாயகர். தமிழ் மூதாட்டி ஒளவையும் 'சங்கத் தமிழ் மூன்றும் தா!' என வேண்டித் தொழுகிறார் விநாயகரை.

இயல் (பேச்சு) இசை (பாட்டு) நாடகம் (நடிப்பு) என மூன்றும் கலந்த கலை வில்லுப்பாட்டு. அதனாலேயே மூன்று தமிழின் முதல்வனான கணநாதனை வரும் விநாயகர் சதுர்த்தி நாளில் வில்லிசையோடுக் கொண்டாடி மகிழவிருக்கிறோம். வில்லுப்பாட்டு கலையின் முன்னோடிக் கலைஞரான சுப்பு ஆறுமுகத்தின் மகளும் பிரபல வில்லிசைக் கலைஞருமான கலைமாமணி பாரதி திருமகன், வில்லுப்பாட்டில் விநாயகர் மகிமைகளை வழங்கவுள்ளார். கல்லையும் கனிய வைக்கும் இவரின் வில்லிசையாலும் பேச்சாலும் விநாயகப் பெருமானின் மகிமைகளைக் கொண்டாடலாம், வாருங்கள்!

'தந்தனத்தோம் என்று சொல்லியே’

கலைகளின் பிறப்பிடமான தமிழகத்தின் திருநெல்வேலி சீமையில் அக்காலத்தில் தோன்றிய இந்தக் கலை எளிய மக்களின் சிறப்பான விருப்பமான கலையாக உள்ளது. கொல்லும் கருவியான வில், கலைக் கருவியானதும், நல்ல கருத்துகளைச் சொல்லும் வில்லுப்பாட்டு கச்சேரியாக உருவானதும் இறைவனின் விருப்பத்தால்தான் எனலாம். இனிய தாள நயத்துடனும் கருத்தான பாடல்கள், காலத்துக்கேற்ற வசனங்கள் போன்றவற்றை இணைத்து நகைச்சுவை நயத்துடன் பாடப்படும் இந்த வில்லுப்பாட்டு தற்போது நகர மக்களுக்கு பெரிதும் அறியப்படாத கலையாக மாறிவருகிறது.

விநாயகர்
விநாயகர்

எல்லா இசை வடிவங்களை விடவும் சுவையான மக்கள் கலையான வில்லுப்பாட்டை உங்களிடம் கொண்டு வருவதில் சக்தி விகடன் மகிழ்ச்சி கொள்கிறது. வாசகர்களின் விருப்பத்துக்கேற்ப ஆன்மிகத்தை அளித்துவரும் நாங்கள் 'தந்தனத்தோம் என்று சொல்லியே’ (தலைமையான வணக்கத்தைச் சொல்லி) இந்த விநாயகர் சதுர்த்தியில் உங்களோடு சங்கமிக்க உள்ளோம்.

வாருங்கள் (இணைய வீடியோ வழி) வில்லிசையுடன் விநாயகர் கொண்டாட்டத்தில் சங்கமிப்போம்.

நாள்: 21.8.2020 (வெள்ளி) நேரம்: 6 - 7 P.M

நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு