Published:Updated:

இறைமகனை ஈன்றெடுக்க தேவமாதா கருவுற்ற புனித தினம்... புனித மரியாவின் அமல உற்பவ விழா!

இயேசு
News
இயேசு

நாளை தேவமாதா கருவுற்ற புனித தினம்! ஜெருசலேம் நகரில் பிறந்த மரியாளின் பிறப்பை இறைதூதர் மரியாளின் பெற்றோர்களுக்கு முன்பே அறிவித்தார் என்கிறது வேதாகமம்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 'முக்கால கன்னி' என்று பெருமையோடு வணங்கும் புனிதத்தன்மை கொண்டவர் தேவமாதா மரியன்னை. இதை புனித பைபிளும் 'இறைமகன் இயேசு பிரான் பிறப்பதற்கு முன்பும், அவரைக் கருவில் தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பிறகும், பிதாவின் அருளால் கன்னிமை குன்றாமல் பாதுகாக்கப்பட்டவர்' என்று இவரைப் போற்றுகின்றது. கன்னிப் பெண்ணான தேவமாதா இறையருளால் இறைமகனை ஈன்றெடுக்க கருவுற்ற புனித தினம் நாளை (டிசம்பர் 8). இது புனித மரியாவின் அமல உற்பவ விழா என்றும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

புனித மரியா
புனித மரியா

ஜெருசலேம் நகரில் பிறந்த மரியாளின் பிறப்பை இறைதூதர் மரியாளின் பெற்றோர்களுக்கு முன்பே அறிவித்தார் என்கிறது வேதாகமம். இதனால் மனம் மகிழ்ந்த மரியாளின் பெற்றோர் பிறக்கப் போகும் குழந்தையை ஜெருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். மரியாள் பிறந்ததும் இறைதூதர் சொன்னபடியே மரியா அதாவது கடலின் ஒளிமிக்க நட்சத்திரம் என்று பெயரிட்டனர். வேண்டிக்கொண்டபடியே மரியாவுக்கு 3 வயது ஆனபோது, ஜெருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். கல்வியின் மீது கொண்ட ஆவலால் மரியா எபிரேய எழுத்துகளைக் கற்றுக்கொண்டார். பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்களைக் கற்று, இறைவனான மெசியாவின் வாக்குகளை அப்படியே கடைப்பிடித்து ஒழுக்கமாகவும் இறைவனுக்குக் கட்டுப்பட்டும் வாழ்ந்தார். இறைவனைத் துதிக்கும் பாடல்களைப் பாடுவதிலும் தேவாலயத்துக்குத் தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் மனம் மகிழ்ந்து வாழ்ந்தார் மரியா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இறைவனை ஆராதிப்பதில் நிகரற்று விளங்கிய மரியாவை ஜோசப்புக்கு மணம் முடிக்க திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த வேளையில்தான், மரியாளின் பிறப்பைப் போலவே இறைமகன் இயேசுவின் பிறப்பும் மரியாவிடம் அறிவிக்கப்பட்டது. இறைதூதர் காபிரியேல் மரியாவுக்கு முன் தோன்றி, "அருள் நிறைந்த மரியே வாழ்க! தேவன் அருளால் மாசற்ற விதத்தில் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவரே உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய மகிமை மிகுந்த ஆட்சிக்கு முடிவே இருக்காது!" என்று ஆசிர்வதித்தார்.

மரியாவின் அமல உற்பவ விழா
மரியாவின் அமல உற்பவ விழா

திருமணம் ஆகாத தனக்கு கரு உண்டானால், அது பிரச்னை ஆயிற்றே என்று மரியாள் தவிக்க, 'மரியாளின் உறவினராகிய எலிசபெத்தும் தன்னுடைய முதிர்ந்த வயதில் இறைவனின் ஆசியால் கருவுற்று இருப்பதாகவும், கவலை வேண்டாம்!' என்றும் சமாதானம் சொல்லப்பட்டது. இதனால் மகிழ்ந்த தேவமாதாவான அன்னை மரியாள் தேவகிருபையின் படி கருவுற்றாள். இந்த நாள் ஆகஸ்ட் 8-ம் நாள் என்று ஒவ்வொரு ஆண்டும் கத்தோலிக்கத் திருச்சபையால் கொண்டாடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் 'மரியாவின் அமல உற்பவ விழா' என்று கொண்டாடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆரம்பத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில், டிசம்பர் 9-ம் நாள் தூய அன்னை விழாவாக சிரியாவில் கொண்டாடப்பட்டது என்கிறது வரலாறு. பிறகு 7-ம் நூற்றாண்டில், ஐரோப்பியத் திருச்சபையின் சார்பில் இவ்விழா அதிகாரப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு 8-ம் நூற்றாண்டில், இவ்விழா டிசம்பர் 8-தேதிக்கு மாற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. 11-ம் நூற்றாண்டில், அன்னை மரியாள் இறைவனின் விருப்பப்படி இறைமகனை ஈன்றெடுத்தார் என்ற கருத்து உலகெங்கும் உருவானது. இதனால் 1476-ம் ஆண்டு, கத்தோலிக்க தலைமை திருத்தந்தை அறிவுரைப்படி அன்னை மரியாவின் அமல உற்பவத் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதற்கு சான்றாக உலகெங்கும் பல நாடுகளில் அன்னை மரியாளை சாட்சியாக தரிசனம் செய்த பல மக்கள் இறைமகனின் புனித அன்னையை ஆராதித்தார்கள். 1858-ம் ஆண்டு பிரான்சு நாட்டில் லூர்து அன்னையாக திருக்காட்சி அளித்த மரியன்னை, 'நானே அமல உற்பவம்' என்று அருளாசி செய்தார். கத்தோலிக்க மக்களின் பெரும் நம்பிக்கையாக விளங்குபவர் அன்னை மரியாள். ஏழைகளுக்கு
இரங்குவதிலும், அவர்களுக்கு வல்லமை அளிப்பதிலும், வரப்பிரசாதம் வழங்குவதிலும் சிறந்தவர் என்று போற்றப்படுகிறார். தேவனைக் குறித்து எவர் கண்ணீர் விட்டு மன்றாடினாலும் அநேக முறை அவர்களிடையே தோன்றி அருள் செய்த பெருமைக்கு உரியவர் அன்னை மரியாள்.

அன்னை மரியாள்
அன்னை மரியாள்

மேலும் இறைமகனான இயேசுபிரானின் புரட்சிகரமான வாதங்களால் அப்போதைய பழைமைவாதிகளால் சொல்லொண்ணா துன்பங்களையும் வசைச் சொற்களையும் எதிர்கொண்டார் மரியாள். காலம் முழுக்க இயேசுவுக்காக அவர் பல தியாகங்களை எதிர்கொண்டார். 'அருள் நிறைந்த மரியே' என்று இறைதூதர் வழிமொழிந்தாலும் வாழ்ந்த காலம் முழுக்க, இயேசுபிரானுக்காக எந்த அற்புதங்களையும் செய்யாமல் பொறுமை காத்தார். பெண்களுக்குள் புகழ் கொண்டவராக, தியாகம் நிறைந்தவராக வாழ்ந்ததால், உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல்களை அன்னை மரியாளின் வழியாகவே சொல்லி மன்றாடி வருகிறார்கள்.

தேவனுக்காகத் தன்னை தாழ்த்திக்கொண்டு மகிமை கொண்டவர் தேவமாதா. தேவகுமாரனின் தாயானபோதும் அவர் எப்போதுமே தமக்காக ஒன்றுமே ஆண்டவரிடத்தில் கேட்காத தியாக குணம் கொண்டவர். அவரை ஆராதிப்பதும் ஆண்டவரை ஆராதிப்பதும் ஒன்றே என்பார்கள் கத்தோலிக்க மக்கள். தூய ஆவியாலே கருவுற்று இறைமகனை ஈன்றபோதிலும் ஏழ்மையான குணவதியாகவே வாழ்ந்தவர் அன்னை மரியாள்.

தேவமாதா
தேவமாதா

புனித மாதாவே, தருமத்தின் தாயகமே, ஞானத்தின் இருப்பிடமே, தியாகத்தின் பிறப்பிடமே, எங்களுக்காக எங்கள் பிரார்த்தனைகளை செவிமடுத்து அருள் செய்ய வேண்டும் தாயே! பாவங்களில் இருந்து எங்களை ரட்சித்து, எங்களின் தேவைகளை அறிந்து அதை நியாயமாக வழங்க உங்களை மன்றாடுகிறோம். பெண்களில் உயர்ந்தவரான தேவமாதாவே உம்மை எங்கள் பிராத்தனைகளால் மகிமைப் படுத்துகிறோம். எப்போதும் எங்களுடன் துணை இருக்கவும். ஆமென்!