Published:Updated:

ராமஜன்ம பூமிக்கு ரதம் அனுப்பிய காசி சத்திரம்... அயோத்தியில் தேரோட்டம்!

அயோத்தியில் தேரோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
அயோத்தியில் தேரோட்டம்

ஶ்ரீராம நவமி தினத்தன்று இந்த ரதம், அயோத்தி வீதிகளில் உலா வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமஜன்ம பூமிக்கு ரதம் அனுப்பிய காசி சத்திரம்... அயோத்தியில் தேரோட்டம்!

ஶ்ரீராம நவமி தினத்தன்று இந்த ரதம், அயோத்தி வீதிகளில் உலா வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
அயோத்தியில் தேரோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
அயோத்தியில் தேரோட்டம்
அவதார புருஷன் ஶ்ரீராமர் அவதரித்த புண்ணிய பூமியான அயோத்தியில், வரும் ஶ்ரீராமநவமி அன்று, தமிழகத்திலிருந்து சென்ற திருத்தேர் உலா வரவிருக்கின்றது.

இந்தத் திருப்பணியைச் செய்திருப்பவர்கள், ஶ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தை நிர்வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார்கள். ஆன்மிகப் பணிகளுக்கும் ஆலயப் பணிகளுக்கும் அறப் பணிகளுக்கும் என்றுமே நகரத்தார்கள் சளைத்தவர்கள் அல்லர். ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட அழகிய ஆலயங்களும் அதன் முன்னே ஊருணியும் இல்லாத செட்டிநாட்டு ஊர்களே இல்லை. தமிழகம் தவிர்த்து, வடநாட்டிலும் குறிப்பாக காசி, அலகாபாத், கயா, நாசிக், அயோத்தி போன்ற இடங்களிலும் நகர விடுதியைக் கட்டி, புண்ணிய யாத்திரை வரும் ஆன்மிக அன்பர்களுக்குத் தங்குமிடமும் உணவும் அளித்து வருவது இவர்கள் தொடர்ந்து செய்துவரும் தொண்டு. அண்மையில் காசி ஶ்ரீவிஸ்வநாதர் ஆலயத்துக்கு குடமுழுக்கு செய்தவர்களும் நகரத்தார்களே.

அயோத்தியில் தேரோட்டம்
அயோத்தியில் தேரோட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போன்று, இப்போது ஶ்ரீராமர் பிறந்த அயோத்தி கோயிலுக்கு மரத்தேரை வடிவமைத்து அனுப்பி வைத்துள்ளனர். ரு. 40 லட்சம் செலவில் இந்தத் தேர் உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி ஶ்ரீராம நவமி தினத்தன்று இந்த ரதம், அயோத்தி வீதிகளில் உலா வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகரத்தார்களால் ஒருங்கிணைந்து நடத்தப் படும் ஶ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பழ. ராமசாமியிடம் இது குறித்து பேசினோம்.

‘‘அயோத்தியில் தேர் பவனி என்பது என்பது இன்று நேற்றல்ல... நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற உற்சவம்தான். 1882 முதல் 1942 வரையிலான 60 ஆண்டுகள், அயோத்தியில் ராம நவமி அன்று திருவிழாவை நடத்தித் தேர் இழுத்திருக்கிறார்கள் நகரத்தார் சமூகத்தினர். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து இந்த விழா நிறுத்தப்பட்டது. அந்த ரதம் பழுதடைந்துவிட்டதால், தற்போது 77 ஆண்டுகள் கழித்துப் புதிய ரதத்தினை உருவாக்கி அயோத்தி மாநகரத்தில் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட இருக்கிறது ஶ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் மேலாண்மைக் கழகம். மீண்டும் ஒரு புதிய ரதத்தை வடிவமைத்து தேர்த் திருவிழா நடத்தவேண்டுமென முடிவெடுத்து, இந்தத் திருப்பணியைத் தொடங்கினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கான தொகையைப் பலர் மனமுவந்து அளிக்க, ரூ 40 லட்சம் செலவில் மிக அழகான தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தேர் 18.5 அடி உயரமும், 9 அடி அகலமும் கொண்டது.

அயோத்தியில் தேரோட்டம்
அயோத்தியில் தேரோட்டம்

8 பட்டைகளும், 8 தூண்களும் உடைய இந்த ரதத்தில், சிவன் பார்வதி, பெருமாள், விநாயகர், முருகன், லட்சுமி, கிருஷ்ணன், அனுமன் போன்ற 210 தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. காரைக்குடியைச் சேர்ந்த, தமிழக அரசு விருது பெற்ற ஸ்தபதி ஏ.ஆர்.கே. ஏகாம்பர ஆசாரியின் தலைமையிலான குழு, 66 நாள்களில் இந்த ரதத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

ரதத்தின் சிற்பங்கள் கோயிலில் உள்ள அமைப்பையே உடையன என்பது குறிப்பிடத் தக்கது. திருமாலின் பத்து அவதாரங்களும், அனுமனின் அழகிய தோற்றமும், கண்ணனின் அழகும், ராமாயாணக் காட்சிகளும் மிகுந்த கலை வண்ணத்துடன் அமைந்து, கண்கொள்ளாக் காட்சி தருகின்றன’’ என்று கூறினார் ராமசாமி.

அயோத்தியில் ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் ஶ்ரீராம நவமி விழாவினை பிரமாண்டமான முறையில் இந்த அமைப்பு கொண்டாடவுள்ளது. நம் நாட்டில் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், வடக்கையும் தெற்கையும் இணைக்கும் இன்னொரு பாலமாக, கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது கலைவண்ணமிக்க ராமர் ரதம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism