Published:Updated:

வழக்கு வேண்டாம்!

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மா காந்தி

சிந்தனை விருந்து

வழக்கு வேண்டாம்!

சிந்தனை விருந்து

Published:Updated:
மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மா காந்தி

ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு அதிலிருந்து சிறிதும் பிறழாமல் பயணம் செய்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதிலும் அகிம்சை என்கிற வழிமுறை மிகக் கடினமானது. காந்தியடிகள் அகிம்சையைக் கைகொண்ட பிறகு கறாராக அதைக் கடைப் பிடித்தவர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்திக்கு ஒரு பழக்கம் இருந்தது. அது மாலை நேர நடைப்பயிற்சி. அந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் பால் க்ரூகர் (Paul Kruger). காந்தி, வழக்கமாக ஜோஹன்னஸ்பர்க் நகர வீதியில், ஜனாதிபதி மாளிகை வழியாகத்தான் நடைப் பயிற்சிக்குப் போவார். மாளிகைக் காவலர்கள் அவரை நன்கு அறிவார்கள். எனவே, அவரைத் தடுக்க மாட்டார்கள்.

ஒருநாள் வழக்கம்போல் மாலை நேரத்தில் உலா போனார் காந்தி. ஜனாதிபதி மாளிகை. வாசலில் அன்றைக்குக் காவலுக்கு இருந்தது புதிய காவலாளி. அவனுக்கு காந்தியைப் பார்த்ததும் சந்தேகம் வந்துவிட்டது. ஓடி வந்து அவரைத் தடுத்து விரட்டினான். அதோடு, அவரைக் கீழே தள்ளி காலால் உதைத்தான்.

காந்தியடிகள் தட்டுத் தடுமாறி எழுந்தார். இந்தக் காட்சியை அந்த வழியாக குதிரையில் வந்த கோட்ஸ் என்பவர் பார்த்துவிட்டார். அவர் காந்திக்கு நன்கு அறிமுகமானவர். பதற்றத்துடன் விரைந்து அருகில் வந்தார். ``மிஸ்டர் காந்தி, என்ன கொடுமை இது! உங்களைப் போய் இந்தப் படுபாவி உதைத்துத் தள்ளியிருக்கிறானே... உடனே வழக்கு போடுங்கள். இதைக் கண்ணால் பார்த்த நான் சாட்சி சொல்கிறேன்’’ என்றார்.

``மிக்க நன்றி மிஸ்டர் கோட்ஸ்... நான் என் சொந்தக் குறைகளுக்காக ஒருபோதும் நீதி மன்றத்தை நாடுவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் காந்தியடிகள்.

தான் தாக்கப்பட்டும்கூட சுயநலத்துக்காக வழக்கு போடத் தயாராக இல்லை காந்தி. ஆனால் இன்றைக்கோ, சுயநலம்தான் வாழ்க்கை முறை என்றே ஆகிவிட்டது. அன்பு என்பது அட்ரஸ் இல்லாமல் போய்விட்டது.

மருத்துவருக்கு போன் செய்தார் ஒருவர். ``டாக்டர், முந்தா நாள் என் மனைவி இறந்துட்டா...’’

``சொல்லுங்க...’’

``நான் எவ்வளவு முயற்சி செஞ்சு பார்த்தும் அழுகை மட்டும் வர மாட்டேங்குது.’’

``ஒரு பிரச்னையும் இல்லை. அவங்க திரும்பி வந்துட்டதா கற்பனை செஞ்சு பாருங்க...’’ போனை வைத்துவிட்டார் மருத்துவர்.