Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்!

கந்த சஷ்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கந்த சஷ்டி

வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கந்தசஷ்டிக் கவசத்தை 36 முறை பாராயணம் செய்த பிறகுதான் வேறு பணிகளைக் கவனிக்கிறார்.

‘ஒரு நாள் முப்பத்தாறுரு கொண்டு ....

ஓதியே ஜபித்து உகந்து நீறணிய...’

கந்தசஷ்டிக் கவசத்தில் வரும் இந்த வரிகள், கவச பாராயணத்தின் சக்தியை உணர்த்துபவை. இதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து, அனுபவத்தில் உணர்ந்து முருகனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர் கோவையில் வசிக்கும் முருக பக்தை சிட்டுக்கலா ராமநாதன்.

வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கந்தசஷ்டிக் கவசத்தை 36 முறை பாராயணம் செய்த பிறகுதான் வேறு பணிகளைக் கவனிக்கிறார். இந்தப் பாராயணம் மூலம் தனது பிரார்த்தனைகள் பல நிறைவேறியிருப்பதாகக் கூறுகிறார் சிட்டுக்கலா.

எங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்!

‘‘எங்க சொந்த ஊர் செட்டி நாட்டு பக்கம். இங்கே கோவையில் என் கணவருக்கு பிசினஸ் என்பதால், 26 வருஷமாக இங்கேயே செட்டிலாயிட்டோம். எங்களுக்கு மூணு பொண்ணு ஒரு பையன். பொதுவாகவே எனக்கு பூஜை, விரதம், கடவுள் வழிபாடு எல்லாத்திலும் ஈடுபாடு அதிகம். கோவையில் திருவாசக முற்றோதுதல் குழுவில் உறுப்பினராக இருந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்!

குடும்பத்தில் என்ன கஷ்டம் என்றாலும் கடவுளைத்தான் சரணடைவேன். எங்க சொந்த ஊரில் எங்களுக்கு வீடு சொந்தமாக இல்லை. ஊருக்குப் போனால் வந்தால் வாடகை வீடுதான். ஊரில் சொந்தமாக வீடு கட்டணும் என்பது என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனை. சொந்த வீட்டு கனவு போலவே, என் மகனின் திருமணமும் தள்ளிக் கொண்டே வந்தது. ஜாதகத்தில் சொன்னதை வைத்து, அவன் மூன்று மாதப் பிள்ளையாக இருந்தப்போ, முருகன் குழந்தையாக அவனை முருகனிடம் கொடுத்து வாங்கினோம். ஆனாலும் திருமணத்தடை இருக்கேன்னு எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கோவையில் எங்கள் குடும்ப நண்பர் ஒருத்தர், ‘நீங்க மருதமலை முருகனை வணங்கிட்டு வாங்க.. உங்க வேண்டுதல் எல்லாம் நிறைவேறும்.. கேட்பது கட்டாயம் கிடைக்கும்’னு சொன்னார். அதிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு மருதமலைக்குப் போக ஆரம்பிச்சேன். எங்கள் மகனைத் திரும்பவும் ஒரு முறை மருதமலை முருகன்கிட்ட கொடுத்து வாங்கினோம். அந்தத் தருணத் தில்தான், கந்த சஷ்டிக் கவசம் பாராயணத்தின் மகத்துவம் தெரியவந்தது.

எங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்!

36 தடவை படிச்சா முருகன் அருள் கிடைக்கும்னு கேள்விப்பட்டு நாமும் படிக்கலா மேன்னு முடிவு பண்ணினேன். ஏற்கெனவே நான் முருக பக்தை. ஆறு வருஷம் சஷ்டி விரதம் இருந்திருக்கேன். அதனால் இந்தப் பிரார்த்தனை மேல் எனக்கு தீவிர நம்பிக்கை வந்தது.

எங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்!

வாராவாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே எழுந்து குளிச்சிட்டு நானும் கணவரும் மருதமலைக்குப் போயிடுவோம். 15, 20 பொட்டலம் சாப்பாடு செய்து எடுத்துட்டுப் போவேன். கோயில் வாசலருகில் இருக்கும் ஏழைகளுக்குக் கொடுத்துடுவேன். அபிஷேகம், ஆரத்தி எல்லாம் பார்த்துட்டு, வெளிமண்டபத்தில் வந்து உட்கார்ந்து கந்த சஷ்டிக் கவசம் படிக்க ஆரம்பிப்பேன். அன்று காலையில் சாப்பிடுவதில்லை. மருதமலை தரிசன வழிபாட்டை நாலைந்து வருஷங் களாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன்.

36 தடவை சஷ்டிக் கவசம் பாராயணம் செய்வதை ஒரு வருஷமாகத் தொடர்கிறேன்.

எங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்!

இப்போது கொரோனா பரவுவதால் கோயிலுக்குப் போக முடியல. வீட்டிலேயே காலையில் 36 முறை கந்த சஷ்டி கவசம் படிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்.. அதைப் படிக்கவில்லை என்றால், எதையோ இழந்தது போல மனசுக்குத் தோன்றும்.

தொடர்ந்து இதைப் படிச்சிட்டு வந்தபோது, ஊரில் வீடு கட்டும் வாய்ப்பு வந்து, சொந்த வீடு கட்டிட்டோம். அதுமட்டுமல்ல... நாங்களே எதிர்பார்க்காமல் கோவையிலும் சொந்த வீடு வாங்கும் யோகம் கூடி வந்தது. எல்லாம் அந்த முருகன் அருள்!

சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய முருகனின் கருணை அதோடு நிக்கல... ரொம்ப காலமாக பெண் பார்த்துக்கிட்டிருந்த எங்க பையனுக்கு நல்ல இடம் அமைஞ்சு, கல்யாணமும் நிச்சயமாச்சு! இதோ இந்த ஆகஸ்ட் 24-ம் தேதி என் மகனுக்குத் திருமணம். என் முருகன் என் பாராயணத்துக்கு செவி சாய்ச்சு, என் எல்லா பிரார்த்தனைகளையும் நிறைவேத்தித் தந்துட்டான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வர்றதுக்கு முன்னால் திருச் செந்தூரில் அங்கப் பிரதட்சணம் செய்துட்டு, அங்கேயே 36 தடவை கவசமும் படிச்சிட்டு வந்தேன். இப்போ எந்தக் கோயிலுக்கும் போக முடியலை என்பதுதான் பெரிய மனக் குறையா இருக்கு.

இப்போது, எனக்குத் தெரிஞ்சவங்க, உறவினர்களுக்கெல்லாம் இந்த 36 முறை பாராயணத்தின் மகிமை பத்தி சொல்லிக் கிட்டிருக்கேன். முருகனை நினைத்து மனப் பூர்வமாகப் பாராயணம் பண்ணினோம்னா கண்டிப்பாக நாம கேட்டதை அவன் கொடுப்பான்’’ என்று பக்திபூர்வமாகக் கூறி முடித்தார் சிட்டுக்கலா.

வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டுமே 36 முறை சஷ்டிக் கவசத்தை ஓதி வந்த சிட்டுக் கலா, கடந்த இரு வாரங்களாக தினமும் 36 முறை படித்து வருகிறார்.

‘‘இந்த மாதமும் ஊரடங்கு தொடர்வதால் என் மகள்கள் மற்றும் குடும்பத்தினர்கள் எல்லாம் மகன் கல்யாணத்துக்கு தடைகள் ஏதுமில்லாமல் நல்லபடியாக வந்து சேரணும். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்கள் மீண்டு வரணும்.. அதுக்காக இப்போது தினமுமே 36 முறை கவசம் படிக்கிறேன். கந்தன் நிச்சயம் காப்பாத்துவான்’’ என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

குரலில் தெறிக்கும் தீர்க்கம் கூறுகிறது, இந்தப் பிரார்த்தனைகளும் நிச்சயம் பலிக்கும் என்று!

சரணம் கணேசா!

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில், வித்தியாசமான தோற்றத்துடன் காட்சி தருகிறார் ஒரு விநாயகர். முருகப் பெருமானுக்கு இடப் புறம் உள்ள இவரின் திருநாமம், அருள்மிகு கற்பக விநாயகர்.

எங்கள் ஆன்மிகம்: 'சொந்தவீடு' கனவை நனவாக்கிய கந்த சஷ்டி பாராயணம்!

இவர், தன் மேல்கரங்களில் கரும்பை, வில் போல் பிடித்திருக்கிறார். கீழ் வலக் கரத்தில் தந்தம் ஏந்தி, கீழ் இடக் கரத்தை தொடையில் வைத்தபடி, தாமரை மலரில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்!

மதுரை மாநகரில் கீழ மாசி வீதியில், மீனாட்சி- சொக்கநாதர் கோயில் தேர் நிலைக்கு அருகில் காட்சி தருபவர் மொட்டைப் பிள்ளையார். தலை, கை- கால் என்று உடல் உறுப்புகள் எதுவும் இல்லாமல் காட்சித் தருவதால் மொட்டைப் பிள்ளையார் என்று பெயர் வந்ததாம்!

திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ள சந்தி விநாயகர் கோயில் பிரசித்திப் பெற்றது. சந்தியா வேளையில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம் இந்தப் பிள்ளையார். ஆகவே சந்திப் பிள்ளையார் என்று திருப்பெயர்.

அருவுருவாக சிவலிங்கம் போல் காட்சி தரும் இவருக்கு வறுத்து அரைத்த பச்சரிசி மாவு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றுடன் வெல்லப்பாகு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

- இ.ராமு, சென்னை-53