Published:Updated:

சோழர் உலா: சமயமும் சரித்திரமும் சங்கமித்த பயணத்தின் அனுபவங்கள்!

சோழர் உலா

சோழர் உலாவில் தொடங்கியது விகடனோடு என்னுடைய முதல் பயணம். ஆரம்பத்தில் சிறிது தயக்கத்தோடும், கூச்சத்தோடும் தான் என் யாத்திரையைத் தொடங்கினேன்.

சோழர் உலா: சமயமும் சரித்திரமும் சங்கமித்த பயணத்தின் அனுபவங்கள்!

சோழர் உலாவில் தொடங்கியது விகடனோடு என்னுடைய முதல் பயணம். ஆரம்பத்தில் சிறிது தயக்கத்தோடும், கூச்சத்தோடும் தான் என் யாத்திரையைத் தொடங்கினேன்.

Published:Updated:
சோழர் உலா

இரண்டு நாள் பயணம் இரு நொடிகளாகப் பறந்துவிட்டன. எனினும் எங்கள் வாழ்நாள் முழுக்க இந்த பயணம் தந்த அலாதியான இன்பத்தை மறக்கவே முடியாது. அதுதான் விகடன். தகவல்களை அளிப்பதில் மட்டுமல்ல, வாசகர்களை மகிழ்விப்பதிலும் அதன் தரம் நிரந்தரமே!

சோழர் உலா
சோழர் உலா

சோழர் உலாவில் தொடங்கியது விகடனோடு என்னுடைய முதல் பயணம். ஆரம்பத்தில் சிறிது தயக்கத்தோடும், கூச்சத்தோடும் தான் என் யாத்திரையைத் தொடங்கினேன். பெரிய பத்திரிக்கை, புதிய மனிதர்கள், பெரும் ஆளுமைகள் என்ற எண்ணம்தான். நான் திருச்சியில் வசிப்பதால் நேராக திருச்சி ஹோட்டலுக்கே வந்துவிட்டேன். 21-5-2022 அன்று அதிகாலை 6 மணிக்கு வந்துவிட்டேன். சென்னையில் இருந்து வந்தவர்கள் 4.30 மணிக்கு வந்து தங்கி இருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் அனைவரும் முதல் நாள் இரவு சென்னையில் விகடன் ஆபிஸில் இருந்து கிளம்பியது மட்டுமில்லாமல், அலுவலகத்தை முழுவதுமாகச் சுற்றியும் பார்த்திருக்கிறார்கள் என்று அறிந்ததும், அட நாமும் சென்னைக்குப் போய் விகடன் அலுவலகத்தைப் பார்த்து இருக்கலாமே என்று வருத்தப்பட்டேன்.

திருச்சி ஹோட்டலில் ஏற்கனவே அலைபேசியில் அறிமுகமான திரு. கோபால் அவர்களை சந்தித்தேன். திருஞானசம்பந்தருக்கு ஒரு திருநாவுக்கரசர் போல எனக்கு அவர். அன்பான மனிதரின் அறிமுகத்தால் கொஞ்சம் தைரியம் பிறந்தது. பின்பு அனைவரும் உணவு அறையில் பல நாள் பழகிய பக்கத்து வீட்டுகாரர்கள் போல தாங்களாகவே வந்து என்னிடம் அறிமுகம் செய்துகொண்டார்கள். அதில் என் மொத்த தயக்கமும் நீங்கியது.

சோழர் உலா
சோழர் உலா
DIXITH

நேரம் செல்ல செல்ல ஒரு பங்கேற்பாளனாக சோழர் உலாவில் இருந்த நான், விகடனின் குடும்பத்தில் ஒரு பங்காளியாகவே மாறிப்போனேன். சிரிப்பும் கொண்டாட்டமுமாக எல்லோருக்குள்ளும் புத்துணர்ச்சிப் பெருக, விகடனின் தாத்தா போல சிரித்துக் கொண்டு இருந்தோம்.காலையில் ஒரு குரூப் போட்டோவோடு பயணம் துவங்கியது.பேருந்தில் ஏறியதும் அனைவரின் அறிமுகப் படலம் நடந்தது. அட நம்மைச் சுற்றி இத்தனை பெரிய மனிதர்களா என்று வியக்கும் வண்ணம் ஒவ்வொருவரின் பதவியின் பொறுப்பும் என்னை பிரமிக்க வைத்தது. ஆனால் எளிமையாகப் பழகினார்கள். எங்களை வழிநடத்திய வந்தியதேவன் திரு.பார்த்திபன் என்றே சொல்ல வேண்டும். சரித்திரத் தகவல்களைத் தெளிவாகவும் எளிமையாகவும் அவர் சொன்னவிதம் அருமை. வரலாறு என்ற பெயரில் அடித்துவிடாமல், உண்மையை பளிச்சென்று சொன்னார். இதுவும் விகடன் ஸ்டைல் என்றே எண்ணிக் கொண்டேன்.

சோழர் உலா
சோழர் உலா
DIXITH

முதல்நாள் பயணம் திருச்சி, லால்குடி சப்தரீஷிஸ்வரர் கோயிலில் தொடங்கியது. அங்கு எங்களுக்காவும், எங்கள் குடும்பத்தினருக்காகவும் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நெகிழ்வை அளித்தது. மனித கை எலும்பில் மண்டையோட்டை மாட்டியிருக்கும் கட்டுவாங்க சிற்பம் உள்ள லால்குடி சப்தரீஷிஸ்வரர் கோயில், முடிந்த தலைமுடி, முயலகனுக்கு பதில் பாம்பை காலில் மிதித்து நிற்கும் வேறெங்கும் காண கிடைக்காத நடராஜர் உலோக சிற்பம் கொண்ட திருவாசி கோயில், சிறிய கோயில் என்றாலும் பல அரிய சரித்திர சான்றுகளை கொண்ட சோழமாதேவி கோயில், அழகிய சிற்பங்களைக் கொண்ட திருநெடுங்களநாதர் கோயில், திருமங்கலம் கோயில், அற்புதமான கல்வெட்டுத் தகவல்கள் என அன்றைய நாள் முழுக்க சோழர்களோடே உலா வந்தோம்.

முதல் நாள் இரவு ஹோட்டலில் திருச்சி மாவட்ட அருங்காட்சியக அலுவலர் சிவகுமார், தொல்வானியியல் அறிஞர் பாலபாரதி அவர்களின் விரிவுரைகள் அற்புதமான, ஆச்சர்யமூட்டும் தகவல்களை அள்ளித்தந்தது.

சோழர் உலா
சோழர் உலா

22-5-2022 இரண்டாம் நாள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் எங்கள் பயணம் தஞ்சை, கும்பகோணம் நோக்கிச் சென்றது.

வந்தியதேவனுக்கு உயிர்கொடுத்த அழகிய சிற்பம், அரிகண்டம், நவகண்டம் சிற்பங்கள் உள்ள தஞ்சை புள்ளமங்கை கோயில், பசுபதி கோயில், ஏழு சிற்ப அதியங்களில் ஒன்றான கல் ஜன்னல் கொண்ட திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், சிற்பிகளின் கனவு கோயில் எனும் தாராசுரம் ஐராதீஸ்வர் கோயில், சிற்ப தூண்கள் நிறைந்த திருபுவனம் சரபேஸ்வர் கோயில், ஒட்டக்கூத்தர் சமாதி உள்ள வீரபத்திரர் கோயில் என இரண்டாம் நாளிலும் பல கோயில்ளை தரிசித்தோம். நாங்கள் பார்த்து, வியந்து, அதியசத்தவை ஏராளம், ஏராளம்.

ஒவ்வொரு கோயிலிலும் ஒருசில சிறப்புகளையே உதாரணத்திற்கு சொல்லி இருக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில். ஒவ்வொரு கோயிலும் ஒரு சிறப்பு, ஒவ்வொரு சிற்பங்களும் ஒரு அதிசயம், ஒவ்வொரு இடமும் சோழர்களின் சரித்திர சின்னம். சோழர்களின் கற்பனை, நிர்வாகம், அசாத்திய உழைப்பு, பிரம்மிப்பூட்டும் தொழில்நுட்பம் என பல விஷ்யங்களைக் கற்றுக் கொண்டோம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் காணவேண்டிய அதிசயங்கள் அவை. அதனால்தான் என்றும் அழியாது நிலைத்திருக்கிறது போலும் சோழரின் புகழ்.

சோழர் உலா: சமயமும் சரித்திரமும் சங்கமித்த பயணத்தின் அனுபவங்கள்!

சிற்பங்கள் மட்டுமல்ல சோழர்கள் கால கல்வெட்டுகளையும் கோயில்களில் கண்டு வியந்தோம். ஆதிசங்கரை பற்றிய குறிப்புகள் அடங்கிய சோழாமா தேவி கல்வெட்டு, ராஜராஜனின் பிள்ளைகள் பற்றி கூறும் அதிசய கல்வெட்டு உள்ள திருவலஞ்சுழி கோயில் என கல்வெட்டுகளின் பட்டியல் நீளும். சரித்திர தகவல்கள் மட்டுமின்றி விகடனின் உபசரிப்பும் ஊக்கமும் எங்களால் மறக்க முடியாதது. விகடன் அளித்த சோழர் கால நாணயமும், ராஜராஜன் மெய்கீர்த்தி சொல்லும் ஓலைச்சுவடியும் எங்களுக்கான அற்புதப் பரிசு.

உடன் வந்த அனைவரும் வெகு உற்சாகமாக பேசிக்கொண்டும், ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு வந்தனர். இந்த பயணத்திலேயே பெங்களூரு நித்யா அம்மாவின் பிறந்த நாளையும் கேக் வெட்டிக் கொண்டாடினோம். வேலூரில் இருந்து வந்த சண்முகம் - பவுனு அம்மாள் தம்பதி வெகு உற்சாகமானவர்கள். பவுனு அம்மாவின் பாட்டும் நாட்டியமும் எங்களை உற்சாகப்படுத்தியது. இப்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்துக்காகப் பாராட்டலாம்.

சோழர் உலா
சோழர் உலா

இரண்டு நாள் பயணம் இரு நொடிகளாகப் பறந்துவிட்டன. எனினும் எங்கள் வாழ்நாள் நாள் முழுக்க இந்த பயணம் தந்த அலாதியான இன்பத்தை மறக்கவே முடியாது. அதுதான் விகடன். தகவல்களை அளிப்பதில் மட்டுமல்ல, வாசகர்களை மகிழ்விப்பதிலும் அதன் தரம் நிரந்தரமே!

- M.மாரிமுத்து ( விகடன் வாசகர்)